யாழ் - பருத்தித்துறை பிரதான வீதி புனரமைக்கப்படுகிறது...!
யாழ்ப்பாணத்தில் பல வீதிகள் தார் ஊற்றி செப்பனிடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வீதி அபிவிருத்தித் திணைக்களம் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதிக்கு தார் ஊற்றி திருத்தங்களைச் செய்து வருகின்றது.
மழை காலம் ஆரம்பமாகவுள்ளதால் ஆங்காங்கே காணப்படும் குழிகள் சல்லிக் கற்களால் நிரப்பப்பட்டு தார் ஊற்றி அதன் மேல் ஊரி விசிறப்பட்டு திருத்தங்கள் துரித கதியில் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது யாழ் - பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டி இந்து தமிழ்க் கலைவன் பாடசாலையை அண்மித்த பகுதியில் இப்புனரமைப்பு வேலைகள் தற்போது துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment