வவுனியா முகாம்களில் உள்ள இந்து குருமார் விடுவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அயராத முயற்சியின் பயனாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் உள்ள இந்து குருமார் நாளை
விடுவிக்கப்படவுள்ளனர்.
இதன் அடிப்படையில் 665 இந்து குருமார்கள் நலன்புரி நிலையத்தில் வைத்து இந்து பொது அமைப்புக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களை பொறுப்பேற்கும் இந்து பொது அமைப்புக்கள் குருமாரின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக சர்வதேச இந்து சம்மேளனத்தின் தலைவர் இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment