பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதற்காக யாழ். மருத்துவபீட விரிவுரையாளர் மீது கத்திக்குத்து!
யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத்துறையின் வருகை விரிவுரையாளரும், உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகரும். இணைப்பாளருமான வைத்தியகலாநிதி என். சிவராஐh நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
அலுவலகப் பணியில் சக விரிவுரையாளர்களுடன் தமது அறையில் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த மருத்துவபீட மாணவன் ஒருவன் அவரைக் குத்திவிட்டுத்தப்பிவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக யாழ்.வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட கலாநிதி சிவராஐh அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வைத்தியசாலை வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
அவரது வயிற்றுப் பகுதி, கை, வாய் பகுதி ஆகியவற்றில் மூன்று குத்துக் காயங்கள் காணப்பட்டன என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கலாநிதி என்.சிவராஐh மீதான தாக்குதல் மருத்துவபீட மற்றும் பல்கலைக் கழக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிராபத்து ஏற்படுத்தும் விதத்தில் ஆசான் ஒருவரை கடுமையாகத் தாக்கியது இதுவே முதற்தடவையாகும் என்று சொல்லப்படுகிறது.
பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதற்காக விரிவுரையாளர்ரை மாணவன் ஒருவன் இவ்வாறு தாக்கியது யாழ்.பல்கலைக்கழக வட்டாரங்கள் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்களில் மட்டும் அன்றி சமூக மட்டத்திலும் அதிர்ச்சி அலைகளை தோற்றிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment