போலி விண்ணப்பங்கள் விற்கிறாராம் யாழ் தொழில்நுட்பக் கல்லூரி அதிபர்!
யாழ் தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபராக தகுதிகள் எதுவும் இன்றி தனது ‘காக்கா’ பிடிக்கும் திறமையால் நியமனம் பெற்றிருக்கும் யோகராஜா என்பவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை முகாம்களில் இருந்து விடுவிப்பதாகக் கூறி தனது சகாக்களையும், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களையும் ஈடுபடுத்தி நூறு ரூபா விலையில் விண்ணப்பப் படிவங்களை விற்பனை செய்து வருகிறார் என குடாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் குடாநாட்டுக்கு விஜயம் செய்திருந்த தொழிற்பயிற்சி அமைச்சரின் காலில் விழுந்து வரவேற்றுள்ள இந்த நபர் இரகசியமான முறையில் தங்கச் சங்கிலி ஒன்றையும் அணிவித்து அந்த அமைச்சரை ‘காக்கா’ பிடித்துள்ளாராம். இவர் ஏற்கனவே பலரிடம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பண மோசடிகளில் ஈடுபட்ட நபராவார்.
(இவ்வாறான மோசடிகள் குறித்து விரிவான ஆக்கமொன்றை விரைவாக எதிர்பாருங்கள்)
இந்த நிலையில் இவர் இப்போது இடம்பெயர்ந்துள்ள மக்களது பெயரை வைத்து, க~;டப்படும் யாழ் குடாநாட்டு மக்களிடமிருந்து பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குடாநாட்டில் செய்திகள் பரவியுள்ளன.
இவ்வாறான விண்ணப்பங்கள் சமாதான நீதவான்கள் உட்பட பலரிடம் கொடுத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இவரது இந்த மோசடி நடவடிக்கைகள் அம்பலமானதையடுத்து உடனடியாக மானிப்பாய் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பொதுமக்களில் சிலரை ஏமாற்றி அழைத்துச் சென்று அரசியல்வாதி ஒருவரின் பெயரால் அதனை மூடி மறைக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment