இத்தனை காலமும் நாம் இழந்த இழப்பிற்கு யார் பொறுப்பு???
புலிகளிடம் இருந்து ஏராளம் ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டது, 20ஆயிரத்திற்கும் மேலான புலிகள் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டனர். தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசத்தில் அமைப்புக்களையும், மதத்தலைவர்களையும், அரசஊழியர்களையும், மக்களையும் ஆயுதமுனையில் வழிநடத்தினர். அப்படி இருக்கும் போது புலிகள் 30 வருட போராட்டத்தை ஆறுமாதத்திற்குள் தோற்றதற்குக்காரணம்என்ன?
இன்று இலங்கையியே அதிக குற்றத்திற்காக வழக்குப்பதியப்பட்ட குற்றவாளியாக கேபி நிற்கின்றார். இவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றிப் பேச்சு நடக்கின்றது. பிரபாகரனின் உடலையே இந்தியாவிடம் கொடுக்காதவர்கள் கேபியை ஒப்படைப்பார்களா…?
இத்தனை காலமும் விடுதலைப்பலிகளின் தலைவருக்கு மக்கள் மத்தியில் பேரும் புகழும் இருந்ததென்றால் அது இராணுவத்தந்திரமுள்ள தலைவர்களை அவர் கொண்டிருந்தமையே! எனினும் இராணுவத்தலைவர்களை அவர் இறந்தார் என்று சொல்லும்போதும் அருகிலே வைத்திருந்தார். அப்படியென்றால், குறைவு எங்கே ஏற்பட்டது…?
எப்போது புலிகளின் தலைமைப் பீடத்தினால் கருணா அம்மானுக்கான சதிவலை பின்னப்பட்டதோ, அப்போதே தலைவரின் திட்டத்தில் பெரிய ஓட்டை விழுந்துவிட்டது. எனினும் அச்சதிவலையினைப்புரிந்து கொண்ட அம்மான் தான்மட்டும் தன்னைக்காக்கும் எண்ணத்தில் அடிகளை வைக்காது, தன்னை நம்பிய அனைவரையும் காத்துக்கொள்வதற்கான செயலில் இறங்கினார். இது புலிகளின் பலத்தில் பெரிய பள்ளத்தையே ஏற்படுத்தியது. பள்ளத்தை நிரப்புவதற்கு வழிதேடாத புலிகளின் தலைமை பணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இது ஏற்கனவே இருந்த ஓட்டையினை மேலும் பெரிதாக்கியது.
இன்று ஏராளம் புலிகளின் முன்னாள் உறுப்பினர் மற்றவர்களைப்போல் நடமாடுவதற்குக்காரணம் அம்மான் அவர்களே!!! தற்போதும் பல கைதான புலிகள் உறுப்பினர்கள் விடுதலையாவதற்குக் காரணமும் அவரின் பரிந்துரைகளே! அவரின் புத்திசாதூர்யம் மக்களின் அணுவணுவான இழப்பை தவிர்த்து ஜனநாயகவழியில் நிரந்தர உரிமையினைப் பெற்றுக்கொடுக்க வழிசெய்துள்ளது.
திராவிடர்களுக்கு இந்தியாவின் அனைத்துப்பாகமும் சொந்தமாக இருந்ததுபோய், ஆரியரின் ஆக்கிரமிப்பின் தலையீட்டின்பின் ஆட்சிக்கு அடிமைப்பட்டு, தற்போது ஜனநாயகரீதியில் ஐக்கிய தேசமாக மாற்றப்பட்டிருப்பது போன்று, இலங்கையின் நிலையும் அவ்வாறே அமையும்பட்சத்தில் மட்டுமே தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியும் என்பதனை நன்கு அறிந்தார் அம்மான்.
தமிழர்களுக்கு தமிழீழம் என்ற ஒரு தேசம் அமையுமேயானால் அது இலங்கை அரசின் அனுசரணையுடன் மட்டுமே சாத்தியமாகும் என்பதனையும் அரசியல் போக்கும் இரணுவப்போக்கும் மனிதநேயப்போக்கும் ஒருங்கே இருப்பவர்களால் மட்டுமே உணரமுடியும். அது அம்மான் அவர்களுக்கு கைகூடியிருப்பது மிஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு ஒரு அருமருந்தாகும்.
திராவிடர்கள் ஆரியருடன் போராடிப்போராடி தாம் இழந்ததை இனிமீட்கமுடியாது போகவே, தமது மக்களைக் காப்பதற்காகத் தம்முடைய போக்கினை மாற்றிக் கொண்டனர். அதுபோல இலங்கை அரசுடன் ஈழத்திற்காகப்போராடி இருக்கும் தமிழர்களை இழந்து ஈழம்கிடைத்தால் ஈழத்தில் ஆட்சிசெய்ய மக்களும் அதிகாரம் செலுத்த அரசும் இல்லாமலே போய்விடும்.
விரலுக்கேற்ற வீக்கம் இருக்கவேண்டும். பெரும் அறிவாளிகளைப் பலிகொடுத்தோம், எழுத்தாளர்களைப் பலிகொடுத்தோம், போராளிகளைப் பலிகொடுத்தோம், பெரும் அரசியல் அறிஞர்களைப் பலிகொடுத்தோம், தேசப்பற்றாளரைப் பலிகொடுத்தோம், கல்விமான்களைப் பலிகொடுத்தோம், தந்தையாக மதிக்கப்படவேண்டிய அனுபவத்தோரைப் பலிகொடுத்தோம், குழந்தைகளைப் பலிகொடுத்தோம், வயோதிபரைப் பலிகொடுத்தோம், கர்ப்பினிகளைப் பலிகொடுத்தோம், ஊனமுடையோரைப் பலிகொடுத்தோம்… இதற்கும்மேலாக தேசம் கிடைக்கவேண்டும் என்று தம்மை அர்ப்பணித்த பெரும் இளைஞர்கூட்டத்தையே பலிகொடுத்தோம்… இறுதியில் இடம்பெற்றது என்ன??? கொள்விலைக்கும் அதிகமான விலையினைக்கொடுத்து, தகாதமுறையில் வாங்கும்பொருள் எப்படி நிலைக்கமுடியும்???… தகுந்த கொள்விலைக்கு தரமானமுறையில் அனைத்துலகச் சட்டங்களுக்கு இணங்க பெறப்படும் தேசம் காலங்காலமாக நிலைத்திருக்கும்.
இத்தனை காலமும் நாம் இழந்த இழப்பிற்கு யார் பொறுப்பு???
எமது இழப்புகளை எப்படி ஈடுசெய்யப்போகின்றோம்???
எமது தாய்நிலத்தை துண்டாடத்தூபம்போட்டோரை எப்படி மக்கள் ஏற்றுக்கொண்டனர்???
மக்களின் அறியாமையினை எப்படியெல்லாம் பயன்படுத்திவிட்டார்கள்!!! இனி இவ்வாறான நிலை ஏற்படாதவாறு விழிப்பாய் இருக்கும்படி எச்சரிக்கப்படுகின்றீர்கள்.
உலகத்தின் பல பகுதிகளிலும் புலிகளுக்கு ஆதரவானவர்களான அரசியல்தஞ்சம் புகுந்து தம்முடைய வீசாக்களை திடப்படுத்தியவர்களும், பிற நாட்டுத்தேசியத்தைப் பெற்றவர்களும், இலங்கை தேசியத்தை உடையோரை தகாத முறையில் அணுகுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மீண்டும் புலிகள் தலைதூக்கி பழைய நிலைக்கு வருவார்கள் என்றும் புலிகளின் தலைவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். முன்பு ஒரு இணையத்தில் ஒரு எழுத்தாளன் முன்னாள் புலிகளின் தலைவர் பற்றி இதற்கான முன்தகவலை எழுதியுள்ளமையை நினைவு படுத்த விரும்புகின்றேன்.
“உண்மையில் பிரபாகரன் இறந்திருந்தால்கூட, இராணுவம் பொய்சாட்சிகளைத்தேடவேண்டிய அவசியம் கிடையாது. தமக்குள் தாமே பெருமூச்சினை விட்டுக்கொள்வதற்காகப் பொய்ச்சாட்சிகளைத் தேடுகின்றனர். இல்லை அவர் தப்பிவிட்டார் என்றால், அவர் இப்போது தப்பிச்செல்லும் அளவிற்கு அரசியல் அல்லது இராணுவத்தந்திரமற்றவரல்ல! மேலும், தற்கொலை செய்பவர் தனது உடலை எதிரியோ அல்லது மற்றவர்களோ தேடி எடுக்குமளவிற்கு அவருடைய உடலை விட்டுச்செல்லவேண்டியவரல்ல. அது மட்டுமல்லாது, இறந்த உடலில் விழிகள்மட்டும் திறந்திருப்பது பெரும் சிரிப்பாக இருக்கிறது… முகம் ஊதிய அளவிற்கு அவருடைய உடல் ஊதவில்லையே???… உலக நாடுகளை நம்பவைக்கவும், போரினை முடிவுக்குக்கொண்டுவந்ததாக காட்டுவதற்காகவும், சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தவும் அடுத்த அரசில் திடமாக இருக்கவும், உலகநாடுகளிடம் இருந்து இழப்பீடுகளைக்காட்டி நிதியினைப் பெறவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை தெளிவாகத்தெரிகின்றது. தலைமறைவாக இருக்கும் பிரபாகரனுடைய தகவல்களை உடனே வெளியிடும் அளவிற்கு அவர் சாதாரணமானவரல்ல, அவருக்குப்பின்னால் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். எனவே அவரின் தலைமறைவு, தேவைப்படும் போது அதாவது தக்கதருணத்தில் வெளிவரக்கூடும். அவருடைய தளபதிகள் தாம் இறப்பினும் அவர் உடலை விட்டுச் செல்லும் அளவிற்கு உயிர்ப்பயமுடையவரல்ல.“ என்று புலிகளின் ஆதரவாளர்கள் வகைதேடுகின்றனர்.
இன்னொரு முக்கியவிடயம் புலிகளின் இறுதிக்கட்டபோரில் என்ன நடந்தது என்பது தக்க விதமாக வெளிப்பட வில்லை. அது வெளிவரும் வரையில் இறுதியாக புலிகளின் முன்னாள் தலைவரால் கொடுக்கப்பட்ட கட்டளைகளும், வேண்டுதல்களும் உறுதி மொழிகளும், இழப்பிற்கான காரணங்களும் வெளிவரும் போது பல உண்மைகள் திடுக்கிட வைக்கும். உங்களுக்கு ஞாபகமிருக்கோ தெரியவில்லை “அனுபூதி” என்ற நாவலில் கிட்லர் பற்றிய பகுதியில், அவருடைய இறுதி கட்ட பேச்சு பல வருடத்தின் பின்னரே வெளியானது என்பதனை நாவலாசிரியர் குறிப்பிட்டிருந்தார். காரணம் தற்பாதுகாப்பு ஒருபுறம் ஆவணத்தடயங்கள் மறுபுறம்.
அதுபோலவே புலிகளின் முக்கிய தளபதிகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது விவாதத்திற்கும் விசாரணைக்கும் உட்பட வேண்டியவை. அதுவாகில்இ மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதியில் புலிகள் பலமாக மோதியிருப்பார்கள். ஒன்று, அவர்களைக் காத்துக்கொள்ள மற்றையது, இராணுவத்திற்கு இழப்பை ஏற்படுத்த. அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பல வருடம் அப்பகுதியைக் காத்துக் கொள்ளக்கூடியது. எனினும், இராணுவம் உள்நாட்டுப் போர்ச்சட்டத்திற்கப்பால் தகாத முறையில் போரினை நடாத்தியிருக்கலாம் என்ற ஐயப்பாடு எழாமலில்லை. இதில் இராணுவம் தகாதமுறையில் போர்க்கருவிகளை வைத்திருந்தோருடன் உள்நாட்டில் மோதும்போது மேற்சொன்ன கூற்று தகாதது. எனவே நேரடியாக அவற்றை ஆராயாவிட்டால் பல உண்மைகள் மறைக்கப்படலாம்.
எதுவாகிலும் இன்று உலகமுழுதும் தமிழர்கள் பற்றிப் பேசப்படுகின்றது என்றால் அது விடுதலைப்புலிகளின் முன்னைய பலமும் அவர்களின் முன்னைய திடமான செயற்பாடும் என்பதனை மக்கள் மறந்து விடக்கூடாது. அதற்கு பிரபாகரன் மட்டும் காரணம் இல்லை என்பது கருணா அம்மானின் பிரிவு தெளிவுபடுத்தும். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் ஒதுங்க வேண்டிய அல்லது பதுங்கவேண்டிய அவசியமேயில்லை. காரணம் இது மக்கள்போராட்டம் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் போராட்டத்தின் தன்மை மாற்றப்பட வேண்டும். அம்மாற்றத்தினையே தற்போதைய அமைச்சரான மான்புமிகு வி. முரளிதரன் மேற்கொள்கின்றார். தமிழர்களுக்கு சம உரிமைகள் கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும். இதில் புலிகள் ஆதரவாளர்கள் மட்டுமல்ல அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் அனைத்து மக்களும் பிடித்துக்கொள்ளவேண்டிய உடும்புப்பிடி “இரத்தம் சிந்தாமல் சமாதானம்”.
இல்லையென்றால் விடுதலைப்புலிகளின் போராட்டம், மக்களின் போராட்டம், பிஞ்சுகளின் மன உளச்சல், தேசத்தின் அழிவு அனைத்தும் வரலாற்றில் காற்றோடு காற்றாக தேவையற்றுக்கலைந்து விடும். மக்களின் கண்ணீரும் அழுகுரலும் கடலோடு கடலாகக்கரைந்து விடும். இரத்தக்கறைகளும் சதையின் சிதைவும் மண்ணோடு மண்ணாகக்கரைந்து விடும். பலவருட தவம் வரம் கிடைக்காமலே பாழாகிவிடும்.
புலிகளின் தன்னிச்சைப் போக்கிற்கும் ஏகபிரதிநிதித்துவப் போக்கிற்கும் ஏற்பட்ட பின்னடைவே இவை. தமிழர்களின் ஒற்றுமைக்கல்ல, அவர்களின் அபிலாசைகளுக்கல்ல, என்பதனை காலப்போக்கில் அமைச்சர் வி. முரளிதரன் காட்டத்தவறமாட்டார்.
இன்று தமிழ் அமைப்புக்களின் பிளவே, எமக்குள் நாம் தண்டனை கொடுப்பதும், எம்மை நாம் ஏற்றுக்கொள்ளாமையுமாகும். இனிவரப்போகும் ஐனநாயகத்தில் எமது பலத்தைக்காட்டி அதன்மூலம் எமது அபிலாஷைகளை மீட்டெடுக்கமுடியும். ஏனென்றால், உலகம் முழுதும் இப்போது எம்மை நோக்கிப்பார்க்கின்றன.
எமது தவறு என்று குறிப்பிடக்கூடிய இன்னொருவிடயத்தை தெரிவிக்கவேண்டியுள்ளேன். கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகளின்முன் நடாத்தப்பட்ட போராட்டத்தில் இளையோர்கள் எமது பிரச்சனைதொடர்பாக பேசச்சென்றார்கள். அவர்களுடைய வயதிற்கும், அரசியலுக்கும் அனுபவத்திற்கும் தொடர்பற்ற விடயத்தை புலிகளின் ஆதரவாளர்கள் தமிழர்களின் சார்பில் மேற்கொண்டனர். இச்செயற்பாடு மாற்றப்பட வேண்டும். மொழி தெரிவோர்மட்டுமே அறிவாளிகள் என்றால், மொழிப்பயன்பாடொன்றே அரசியலுக்குப் போதுமானதொன்றென்றால், அரசியல் வாதிகள், குறிப்பாக இந்திய அரசியல்வாதிகள் மொழி விற்பனராக இருக்க வேண்டும். அரசியலுக்கும், திட்டத்தினை மாற்றானுக்கு வெளிப்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்பாளர்கள் தேவையேயொழியஇ புலத்தில் கற்றார்கள் என்ற தகுதிமட்டும் போதாது என்பதனை அமைப்பாளர்கள் உணரவேண்டும்.
“அறிவு என்பது மொழியுடன் சம்மந்தப்பட்டதல்ல
ஆற்றலுடன் சம்மந்தப்பட்டது.”
எமது போராட்டம் அறிவுடனும், ஆற்றலுடனும், ஆழுமையுடனும் சம்மந்தப்பட்டதேயொழிய, மொழியறிவுடன் சம்மந்தப்பட்டதல்ல…
“புதிய பரினாமத்தை நோக்கிய ஈழத்தமிழர்களின் பாதடிகள்
கருணா அம்மான் தலைமையில் மெல்ல மெல்ல மீண்டும் அடியெடுக்கின்றன… “
நன்றி அம்மான் இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment