வெளிநாட்டில் இருந்து சென்ற புலிகள் விமான நிலையத்தில் கைது!
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த புலி பிரமுகர்கள் இருவர் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் இருந்து சாதரண பயணிபோல் நாடு திரும்பிய கிறிஸ்டல் எலியன் என்ற புலிகளின் கட்டிட பிரிவு பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் கிறிஸ்டல் ரெட்டியர் என்ற மற்றுமொரு புலி உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே நாட்டைவிட்டு வெளியேறியிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. புலிகளின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவதன் பின்னணியில் புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டுஅம்மான் ஈடுபட்டுவருவதாகவும் அறியவருகின்றது.
கடந்த காலங்களில் துரோகி என்று புலிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் பலரின் கொலைக்கு காரணமாகவிருந்த புலனாய்வுதுறை பொட்டு அம்மான் தற்போது தன் சகாக்களை அரச புலனாய்வுதுறைக்கு காட்டிக்கொடுத்தும் வருகின்றார்.
நெருப்பு இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment