பாப்பரசரால் பாடப்படும் இசை அல்பம் நவம்பரில் வெளியீடு
புனித பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பரால் பாடப்பட்ட இசை அல்பம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
மேரி மாதாவை புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களை அவர் பொப் இசையில் பாட இருக்கிறார். இந்தப் பாடல்களைக் கொண்ட அல்பம் நவம்பர் மாதம் வெளியாகிறது. இதற்காக அவர் கெபென் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
மான்சைனர் பாப்லோ காலினோ இசையில் அவர் பாடுகிறார். ராயல் பிலார்மோனிக் இசைக் குழுவினர் வாத்திய இசையில் அவர் பாடல்கள் பாட அவருடன் சேர்ந்து ரோம் நகரின் பிலார்மோனிக் அகடமி குழுவினர் பாடுகிறார்கள். லத்தீன், இத்தாலி, போர்த்துகீசிய மொழிகளிலும் பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளிலும் பாடுகிறார்.
லண்டனில் உள்ள அபே ரோடு ஸ்ரூடியோவில் இந்தப் பாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த அல்பம் விற்பனை மூலம் கிடைக்கும் பணம், ஏழை எளிய சிறுவர்கள் இசைக்கல்வி பெற செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment