வெளியாகும் பிரபாகரனின் இரகசியங்கள்!

புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இரகசியப் பிரிவன் அனைத்து ஆவணங்களும் முல்லைத்தீவில் உள்ள வெள்ளிமுள்ள வாய்க்கால் பகுதியில் ஓரிடத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்தவாரம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருந்தது.
இக்காலகட்டத்திற்குள் பிரபாகரனின் சகாக்கள் என இனங்காணப்பட்டுள்ள நால்வர் பாதுகாப்புப் படையினரால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தவிர பிரபாகரனின் நெருங்கிய சகா ஒருவரும் பிடிபட்டுள்ளார். இவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நான்கு பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதிக்குச் சென்று 8வது படையணியின் கேர்னல் ஒருவரின் உதவியுடன் பல்வேறு இடங்களைத் தோண்டிப் பார்த்தனர்.
இதைத் தவிர, ஆனந்தபுரம், மந்துவில், அம்பலம்பொக்கனி, வலயரமடம், புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளிலும் ‘பெக்கோ’ இயந்திரங்களின் துணையுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரபாகரனின் சர்வதேச வலைப் பின்னலுடன் தொடர்புடைய 343 ஆவணங்களும், பல்வேறு உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டெடுக்க்பபட்டுள்ள இரகசிய ஆவணங்களிடையே ஏவுகணைப் படகுகள், ஹெலிகொப்டர், நைட்வி~ன் உதிரிப்பாகங்கள், சிறு ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடி பொருட்கள், தோட்டாக்கள், கனரக ஆயுதங்கள், ஏ.வி. 120 ரக விமானங்கள், மாலிமா இயந்திரங்கள், லேஸர் கருதிகள், 5.56 ரக ரைபிள், ர~;ய நைட்வி~ன் உபகரணங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், இரவு நேர பயன்பாட்டிற்குரிய இயந்திர உபகரணங்கள் போன்றவை தொடர்பான ஆவணங்களும் இருந்துள்ளன.
இவற்றிடையே, புலிகளின் கப்பல் வலைப் பின்னலின் முக்கியஸ்தரான குமரன் பத்மநாதன், ஆயுதங்களைக் கடத்துவதற்காக கப்பல்ளை வாடகைக்கு அமர்த்திய நாடுகள், அவை பற்றிய தகவல்கள் போன்றவற்றை வெளிப்படுத்தும் இரகசிய ஆவணம் மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு புலிகளின் ஆயுதக் கடத்தல்களுக்கென உபயோகப்படுத்தப்பட்டுள்ள ஒரு கப்பலில் புலிகளால் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்ட சந்திரநேரு பணியாற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
343 ஆவணங்களில் 272 ஆவணங்கள் பிரபாகரனின் புலிகள் இயக்கத்தின் வலைப்பின்னல் தொடர்பிலான அனைத்து இரகசியங்களையும் வெளிப்படுத்துகின்றன.
இதனிடையே ர~;ய ஆயுதங்கள் விநியோக வழிமுறைகள் பற்றிய தகவல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ள புத்தகங்களும் விN~ட அதிரடிப் படைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய புத்தகங்களும் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
மேற்படி தேடுதலின் போது பிரபாகரனின் வலது கை எனக் கூறப்படும் ஸவர்ணம் என்பவர் பயன்படுத்திய லேஸர் இலக்கின் பிரகாரம் தாக்குதல் நடத்தக்கூடிய டி.பி.ஏ. 266 ரக பிஸ்டலும், அமெரிக்கத் தயாரிப்பான எம். 16 ரக ஆயுதமும் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எம். 16 ரகத் துப்பாக்கியில் தொடர் இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அமெரிக்க உயரதிகாரிகள் இத்துப்பாக்கியை எவ்வாறு வழங்கினார்கள் என்பது பற்றிய தகவல்கள் இல்லை.
பிரபாகரன் உள்ளிட்ட குழுவினர் யுத்த சூனியப் பகுதிக்கு தப்பியோடிய போது புதைத்து வைக்கப்பட்டிருந்த விமானத்தாக்குதல் ஏவுகணைகள் ஐந்தும் பிரபாகரனால் இரகசிய தகவல்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட சைபர் இயந்திரமொன்றும் தகவல் பரிமாற்ற அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட உபகரணங்களும் புலிகளது கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான ஆவணங்களும் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளின் போது கிடைக்கப் பெற்றுள்ளன.
இதே நேரம் 152 மில்லி மீற்றர் ரக ஏவுகணைகளுக்கான தோட்டாக்கள் ஏராளம் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.
இதன் பிரகாரம் பிரபாகரனும் அவரது சர்வதேச வலைப்பின்னலும் தொடர்புகளை வைத்திருந்த சர்வதேச நாடுகள் தொடர்பிலான தகவல்கள் பல இவ்வாறான ஆவணங்களின் மூலம் வெளியாகியுள்ளன.
நைட்வி~ன் பெற்றுத்தருமாறு வெளிநாடொன்றைக் கேட்டுக் கொண்டிருந்த ஆவணங்களையும் இதனிடையே காணக் கூடியதாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகள் இயக்கத் தலைவரிடமிருந்த பெருந்தொகையான ஆவணங்களிடையே சோலியட் ஜே.ஜி.பி. புலனாய்வுத்துறை தொடர்பாக எழுதப்பட்டுள்ள புத்தகமொன்றும் காணப்பட்டுள்ளது. எனவே, புலிகள் ஜே.ஜி.பி. புலனாய்வுத்துறையைப் பின்பற்றினார்கள் என்பது இதிலிருந்து புலனாவதாக தென்பகுதி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.
5 நாட்களாகத் தொடர்ந்த இத்தேடுதல் நடவடிக்கையின் போது தமிழ் மொழியிலான புத்தகங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் யுத்த தந்திரோபாயங்கள் தொடர்பில் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் முகமாக எழுதப்பெற்ற புத்தகங்களும் இவற்றுள் அடங்கி இருப்பதாகக் கூறுப்படுகின்றது.
பிரபாகரனின் ‘டொஸி’ புலனாய்வுத் துறையின் பொறுப்பாளரான பொட்டு அம்மான் சிவசங்கரின் கொழும்பு வலைப்பின்னலின் திட்டங்களும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதே நேரம் புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து பொலிஸ் ஆயுவுக் குழுவினர் தற்கொலைதாரிகளின் 30 உத்தியோகபூர்வ அங்கிகளையும் கண்டெடுத்துள்ளனர்.
செந்தழனி, இன்பன், ச~p, ஆதித்யன், கரண், ஆ~h, அறிவு, தமிழழகன், அம்பரா, அகிலன், மலர்விழி, மதியழகி, தம்பி, பூவேணி, மலரவன், சிவப்ரியா, மதுநங்கை, யாழ்தீவன், தமிழழகி, மதனவேல், எழிலன், அறிவுமணி, இராவணன், ஆனந்தி, செந்தூரன், வினோதன், பராசக்தி,புகழ்வதி போன்ற பெயர்களைக் கொண்ட மேற்படி அங்கிகளைக் கொண்டவதுகளும் புலிளை இறுதி காலகட்டத்தில் இலங்கைப் படையினருக்கு எதிராகக் களத்தில் இறக்கத் தீர்மானித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் முக்கியஸ்தரான பத்மநாதன், பிரபாகரனால் தயார் செய்யப்பட்டிருந்த விN~ட தாக்குதல் குழுவொன்று கொல்லப்பட்டதாகவும் இதன் பின்னர் யுத்த திட்டங்கள் தோல்விகண்டதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே நேரம் பிரபாகரனின் ஆயுதக் கொள்வனவிற்கு உதவி செய்த நாடுகள், ஆயுத விநியோக வழிகள், வங்கிக் கணக்குகள் போன்ற தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானவுடன் ஒருசாரார் பாரிய அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
ஒரு சிலர் பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர்.
இரகசியப் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் தற்போது இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் புலிகளுக்கு உதவிய நாடுகள் எவை என்ற விபரங்கள் வெளிவரக்கூடும். மேற்படி ஆவணங்கைளத் தேடும் நடவடிக்கையில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் மேற்பார்வையில் உபபொலிஸ் அத்தியட்சகர்களான எதிரிசூரிய, நி~hந்த ஹெட்டி ஆராச்சி, ரங்கநாதன், ஹெட்டி ஆராச்சி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
புலிகள் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் முகமாக ஹெலிசயிட் எனும் சீ 4 ரக வெடிமருந்துகளைப் பெற்றுக் கொண்ட விதம் பற்றிய தகவல்களைக் கொண்ட ஆவணம் பாதுகாப்புத் தரப்பினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
புலிகளின் தலைவர் இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்தல், அந்த ஆயுதங்களைக் கடத்தி வந்தமை, மற்றும் கப்பல்களை பயன்படுத்தியமை போன்ற விடயங்கள் அவரது இரகசிய ஆவணங்களில் இருந்து வெளியாகியுள்ள நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் கடந்த வார ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதனால்தான் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒருசில நாடுகள் கடுமையான முயற்சிகளில் இறங்கியிருந்தன.
இன்று பிரபாகரனின் புலிகள் இயக்க பயங்கரவாத நடவடிக்கைகளின் அனைத்து தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் புலிகளின் புதிய தலைவராக, சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் கே.பி. எனும் குமரன் பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி கடந்தவாரம் வெளியாகியிருந்தது.
கடந்த 21ம் திகதி புலிகளின் நிறைவேற்றுக் குழு முக்கியஸ்தர்கள் எனக் கூறப்படுகின்ற அமுதன் எனும் சுரேன் மற்றும் ராம் ஆகியோரால் மேற்படி அறிவிப்பு விடப்பட்டிருந்தது.
பத்மநாதனின் நியமனம் தொடர்பில் செய்தி வெளியாகி சில மணித்தியாலங்கள் கழிந்த நிலையில் புலிகள் ஈழப் பிரஜைகளை நோக்கி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.
அதில்,
ஈழத்தமிழர்கள் மிகவும் கடினமானதும் கவலைக்கிடமானதுமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எங்களுக்கு ஏற்பட்ட பாரியதும் ஈடுசெய்ய இயலாததுமான இழப்பை எவராலும் தட்டிக் கழிக்க முடியாது. புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. நாங்கள் புதியதொரு வழியில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதற்கென நாம் பத்மநாதனை நியமித்துள்ளோம். தமிழர் தாயகத்தைக் கைப்பற்றிக் கொண்டு தமிழர்களது போராட்டத்தைத் தோற்கடிக்க இயலுமென சிங்கள தேசம் நினைக்குமானால் அந்த மாயையை நாம் தோற்கடிப்போம்”
என்றவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
முழ இராணுவத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவோம் என்று முன்னர் பிரபாகரனின் நெருங்கிய சகாவான பாலாகுமாரும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பத்மநாதன் புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதை நோர்வே, கனடா, சுவிஸ் போன்ற நாடுகளில் உள்ள புலிகள் இயக்க ஆதரவாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தங்களது தலைவர் இலங்கையினுள்ளும் தமிழ் டயஸ்போராவிற்கும் தனது ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய புலிகளின் இணையத்தளங்கள் பத்மநாதனின் நியமனத்திற்குப் பின்னர் தெரிவித்திருந்தன.
இதனிடையே இலங்கை இராணுவம் யுத்த சூனியப் பகுதியிலிருந்து புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களின் போது 20,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் இடம்பெயர்ந்துள்ள மக்களை மூன்று வருடங்கள் செல்லும் வரையில் தடுத்து வைத்திருப்பதற்கு அரசு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் உலகம் முழுவதிலும் பொய்யான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எசோ~pயேடட் பிரஸ் எனும் வெளிநாட்டு ஊடக நிறுவனத்தின் ரவி நேஸ்மன் என்பவர் கடந்த வாரம் இலங்கையில் இருந்து புறப்பட்டுவிட்டார்.
மேலும் இலங்கையில் தங்கியிருப்பதற்கு அவர் கோரிக்கை விடுத்திருந்த போதும் இலங்கை அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இவர் இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் சர்வதேச நிறுவனங்களின் முக்கியஸ்தர்களையும் அவர்களது தேசிய முகவர்களையும் சந்தித்திருந்தார். இவர் இந்நாட்டில் இருந்து வெளியேறுவதைக் கண்டித்து இம்முறை சுதந்திர ஊடக இயக்கமோ அல்லது வேறேதும் ஊடக அமைப்புக்களோ ஆர்ப்பாட்டங்கள் எதையும் நடாத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக பத்மநாதன் நியமிக்கப்பட்டதையடுத்து, அதே தினம் (ஜூலை 21) கனடா இரகசிய பொலிஸார் இதுகால வரையில் மறைத்து வைத்திருந்த இரகசிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதாவது, இலங்கை புலிகளின் பயங்கரவாதத்தை செயற்படுத்துவதற்காக கனடா நாட்டு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் வருடந்தோறும் 12 மில்லியன் டொலர்களை பிரபாகரனுக்கு வழங்கி வந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
கனடா நாட்டு இரகசிய பொலிஸார் இந்த அறிக்கையை வெளியிடுகின்ற போது பாதுகாப்புத் தரப்பினரால் நான்கு கனடா நாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் புலிகளுடன் இணைந்து இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் ஜோர் – ஜூலியஸ் என்பவர் இவர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நபர் 2007ம் வருடம் தனது காதலியைத் தேடி கிளிநொசசிப் பகுதிக்கு வந்ததாக பொய்யான தகவலை வழங்கியிருந்தார்.
இதேநேரம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புலிகளின் தலைமையை பூண்டோடு ஒழிப்பதாகக் கூறியுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் சர்வதே சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய புலிகளுக்கு நெருக்கமான தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் குறித்தும் பல்வேறு தகவல்கள் கடந்த வார ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இதே நேரம் கொலைகார புலிகள் இயக்கத்தைக் காப்பாற்ற முயற்சித்தவர்களுக்கும் விருது வழங்கும் நாடு இலங்கையாகும் என்றொரு செய்தியையும் கடந்தவாரம் காணக்கூடியதாக இருந்தது. இந்;த அடிப்படையில் எதிர்காலத்தில் கொலைகார பிரபாகரனுக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியமடைவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்த கொசவோ விடுதலை முன்னணி எனும் பிரிவினைவாத இயக்கத்திற்கு எதிராக சேர்பிய நாட்டுக்கு உதவியமை தொடர்பில் சேர்பிய ஜனாதிபதி பொரிஸ் ரேடிக் இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
சேர்பியாவில் இருந்து கொசவோ மாநிலம் பிரிந்து அமெரிக்க, நோர்வே மற்றும் ஐரோப்பிய பிரஜைகளின் உதவிகளுடன் தனியானதொரு நாடாக உருவெடுத்ததைப் போன்று இலங்கையும் இரண்டாகப் பிரிக்கப்படும் என கொழும்பிலிருந்து செயற்பட்டு வருகின்ற ஒருசில புலிகள் சார்பு தமிழ் ஊடகங்கள் நம்பியிருந்தன.
எனினும் இலங்கை தளர்ந்துவிடாது சேர்பியாவிற்கு உதவியது. இதனால் இலங்கைக்கு யுத்த தளபாடங்களை வழங்க சர்பிய அரசம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே லண்டனில் இருந்து செயற்பட்டு வருகின்ற புலிகளின் குரலை எழுப்பி வந்த பீ.பீ.ஸி. சேவையின் தமிழ்ப் பிரிவு புலிகளுக்குப் பின்னர் தமிழ் மக்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்கத் தகுதியான ஒருவரைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வந்திருந்தது.
இவ்விடயம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கே.சர்வேஸ்வரன் என்பவர் பீ.பீ.சி.யின் தமிழோசை நிகழ்ச்சியில் பின்வருமாறு கூறியிருந்தார்.
“செயற்திறன் மிக்க இராணுவ செயற்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்படி அரசை வலியுறுத்தக் கூடிய தகுதி புலிகள் இயக்கத்திற்கு இருந்தது. எனினும் இன்று அவ்வாறானதொரு அழுத்தத்தைக் கொடுக்க் கூடிய தலைமைத்துவமொன்று இல்லை” பேராசிரியர் சர்வேஸ்வரன் என்பவர், புலிகள் இயக்கத்திற்கெதிராக இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு உதவிய நாடுகள் தமிழர்களது பிரச்சினையின் பெறுமதி குறித்து ஆராயவில்லை எனவும் கூறியிருந்தார்.
கடந்தவார பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக மேலும் ஆராயும் போது, கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தை நடாத்தி வருகின்றவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் அவர்களைப் பாதுகாத்தல் என்ற தொனிப்பொருளில் வேறொரு வேடத்தை முன்னெடுத்து வருவதையும் அவதானிக்க முடிந்தது.
கடந்தவாரம் கொழும்பில் உல்லாச ஹோட்டலொன்றில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இலங்கையினுள் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாக சர்வதேச பிரஜைகளுக்கு எடுத்துக் காட்டுவதே இதன் நோக்கமாகும்.
இதனிடையே புலிகளின் புதிய தலைவராக நியமனம் பெற்றுள்ள பத்மநாதன், அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தனக்கு எழுதும்படி தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
பத்மநாதன் தற்போது அமெரிக்காவின் எரிசோனா மாநிலத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
பிரித்தானிய செனல் - 4 எனும் தொலைக்காட்சி கடந்தவாரம் பத்மநாதனின் கருத்துக்களை வெளியிட்டிருந்தது.
“1500 – 2000 அளவிலான புலிகள் இன்னும் காட்டுப்பகுதிகளில் இருக்கின்றனர். இடம்பெயர்ந்த மக்களை ஜனாதிபதி விடுவிக்காவிட்டால் இப்புலிகள் ஆயுதமேந்தியப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இப்புலிகள் எனது ஆலோசனைக்காகக் காத்திருக்கின்றனர்” என பத்மநாதன் கூறியிருந்தார்.
கே.பி.யின் இந்தக் கூற்றுக்கு பதிலளித்திருந்த இராணுவ அதிகாரி ஒருவர், கே.பி.க்குத் தேவையான மருந்து இலங்கை இராணுவத்திடம் இருப்பதாகவும் இதே மருந்தை தாங்கள் பிரபாகரனுக்கும் கொடுத்ததாகவும் கூறி இருந்தார்.
இதே நேரம் கறுப்பு ஜூலையை ஞாபகப்படுத்தி 26 வருடங்களாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த ஐரோப்பிய புலிகளுக்கு இவ்வருடம் அது மறந்துபோய் விட்டதாக தெரிய வந்திருந்தது.
ஜூலை மாதம் எனும் போது, யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா ஜூலை 27ல் கொல்லப்பட்டார். கலாநிதி நீலன் திருச்செல்வம் ஜூலை 29ம் திகதி புலிகளால் கொல்லப்பட்டார்.
- டி.எம். பாருக் அசீஸ்






0 விமர்சனங்கள்:
Post a Comment