புத்தரை தவறாக விளங்கிக் கொண்ட இடமாக இலங்கை உள்ளது
இலங்கையில் பௌத்த மதத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றும் புத்தரை மிகத் தவறாக விளங்கிக் கொண்ட இடமாக இலங்கை உள்ளதெனவும் குறிப்பிட்ட சொல்வந்தர் சுகிசிவம் அரசியல் துறந்து ஞானத்திற்கு வந்தவர் புத்தரென்றும் ஞானம் துறந்து அரசியல் செய்யும் பௌத்தம் ஆபத்தானதெனவும் தெரிவித்தார்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் பொன்விழாவும் இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவும் வெகு விமரிசையாக கடந்த 5 ஆம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் கலைநிகழ்வுகள், சிறப்புரைகள், விளக்கங்களுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு "வல்லமை தாராயா' என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே இந்தியாவின் தமிழ்நாட்டைச் சர்ந்த சொல்வந்தர் சுகிசிவம் இவ்வாறு கூறினார்.
"வல்லமை தாராயோ' என்ற தலைப்பில் சொல்வந்தர் ஆற்றிய உரைவடிவம் இங்க தரப்படுகின்றது அதில் அவர் தெரிவிக்கையில்;
உலகளாவிய ரீதியில் பக்திக்கு கோயில் கட்டும் நிலைமை காணப்படுகின்ற நிலையில் முதன் முதலாக அறிவுக்கு காயில் கட்டியவரென்ற பெருமைக்குரியவர் தத்துவஞானி வேதாந்திரி மகரிஷி.
என்னுடைய வாழ்வில் பக்தி இலக்கியங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன். இன்னமும் அதனைத்தான் பின்தொடர்கின்றன்.
ஆனால், பக்தி இலக்கியங்கள் உலகிற்கு எவ்வளவு நன்மை செய்திருக்கின்றதா அந்தளவுக்கு தீமையும் விளைவிக்கப்பட்டுள்ளதென்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
எல்லா மதத்தவரும் ஒரு மதநூலை வைத்திருக்கின்றார்கள். அதைப் படிக்கின்றார்கள். பின்பற்றுகின்றார்கள். பின்னர் ஏன் சண்டை போடுகின்றார்கள்.
அது கடவுளால் சொல்லப்பட்ட வேதம் உண்மை, எனில், அதைப் பின்பற்றுபவர்கள் ஏன் சண்டையிட்டு கொள்கின்றார்கள் ஏன் சண்டையிட்டுக் கொள்கின்றார்கள்.
ஒரு இறைவனால் அருளப்பட்ட வேதநூலைக் கையில் வைத்திருப்பவர்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவதற்கு என்ன காரணம்?
பக்தி மார்க்கத்தினால் அவர்கள் கும்பிடும் கடவுளை உயர்வாகக் கருதிய பின்னர் ஒரு கடவுளை தன்னுடைய கடவுளாக ஏற்றுக் கொண்டவன் அடுத்த கடவுளையெல்லாம் குப்பைத் தொட்டியாகக் கருதுகின்றான்.
ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவன் அடுத்த மதத்தின் வேதப்புத்தகத்தை வெறும் காகிதக் குப்பைத் தொட்டியாக கருதுகின்றான்.
ஆனால், அறிவுபூர்வமாக சிந்தித்தால் தான் ஒரே விடயத்தை பலஞானிகள் பல்வேறு வடிவங்களில் கூறியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அதனால் மதங்களை பின்பற்றுகிறவர்கள் ஆபத்தானவர்கள். மதங்களைப் புரிந்து கொள்பவர்கள்தான் உலகிற்கு தேவையானவர்கள்.
மதங்களை பின்பற்றுகின்றவர்கள் முட்டாள்கள். அவர்கள் சுயமாக சிந்திப்பதில்லை.
எல்லா சமயங்களும் பக்தி முக்கியமென வலியுறுத்தும் நிலையில் மதத்தின் பெயரால் யூதர்கள் உருவாக்கப்படுகின்றனர்.
இது ஆபத்தில் போய் முடியுமென்பதற்காக எத்தனையா அறிஞர்கள் இடையில் குறுக்கிட்டனர். எவரும் கவலைப்படவில்லை.
பக்தி மார்க்கத்தில் ஒழுக்கம் பெரிய விடயமாகப் பேசப்படவில்லை. ஒரு விபசாரியுடன் வாழ்ந்தவன் கூட கடவுள் நாமத்தை சொன்னால் மன்னிக்கப்படுவானென கருதப்பட்டது.ஒழுக்க மீறல்கள் மன்னிக்கப்படுகின்றன. கொலை செய்தவனுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது.
கடவுள் மன்னிப்பாரென்பது மதபோதகர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொய். மதபோதகர்களிடமிருந்து மதத்தை கற்கக்கூடாது. மத ஸ்தாபகர்களிடமிருந்துதான் மதத்தை கற்கவேண்டும்.
மத ஸ்தாபகர்கள் உண்மையை சொன்னவர்கள். மதபோதகர்கள் பொய்மையை சொன்னவர்கள்.
மக்கள் சிந்தித்து தெளிவடைய வேண்டும். மக்கள் சிந்திக்க வண்டுமென்பதற்காக தெருத் தெருவாக நடந்து ஊர் ஊராக திரிந்து மக்களைச் சிந்திக்க வைத்தவர்தான் அருட்தந்தை வேதாந்திரி மகரிஷி
கடவுளை பக்தி என்ற உணர்ச்சியின் முன்னால் நாம் முன்னிலைப்படுத்துகின்றாம். இந்நிலையில் விஞ்ஞானத்தை வைத்து கடவுள் தன்மையை உட்புகுத்த முயன்றவர் மகரிஷி.
ஆனால், மதங்களைப் பொறுத்தவரையில் நீ ஒரு தவறு செய், உதாரணமாக ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டு அதில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை ஆலய உண்டியலில் போட்டுவிட்டால் அந்தக் கொள்ளைக்கு கடவுள் உடந்தையாக இருப்பார் என்ற அயாக்கியத்தனத்தை மதங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது.
ஒருவன் ஒரு பெண்ணைப் பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றான். அவ்வாறு செய்பவன் பாவி ஆகின்றான். அவனை கடவுளிடம் சென்று மன்னிப்பு கோரிவிடு என மதம் கூறுகின்றது.
கடவுள் மன்னிப்பார். வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மன்னிப்பாளா?
ஒருவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை மதம் வற்புறுத்த வேண்டும். இந்நிலையில் நீ எப்படியாயினும் வாழ்ந்துவிடு கடவுள் மன்னிப்பாரெனில் அந்தக் கடவுளும் தவையில்லை கடவுளைப் பற்றிய சிந்தனையும் தேவையில்லை.
இந்நிலையில் வாழ்வியல் நெறிகளை முதல்முதலாக வற்புறுத்திய புத்தர் உள்ளிட்ட சிலர் நாத்திகத் தன்மையை வற்புறுத்தினர்.
புத்தர் சிந்தனையை முன்வைத்தவர். இலங்கை மக்களுக்கு புத்தரைப்பற்றி சரியாகத் தெரியாது. புத்தர் மிகத் தவறுதலாக விளங்கிக் கொண்ட இடங்களில் இலங்கை ஒன்று.
இந்த உலகில் அரசியலைத் துறந்து ஞானத்துக்கு வந்தவர் புத்தர். ஆனால், ஞானத்தைத் துறந்து அரசியல் செய்து கொண்டிருக்கும் பௌத்தம் ஆபத்தானது.
புத்தருடைய ஞானம் கொண்டாடப்பட்டது. வணங்கப்பட்டது. அதேபோல வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழாதவர்கள் ஒருபோதும் மாட்சமடைய முடியாதென கூறியவர் மகரிஷி.
ஒருமனிதன் வாழ்வாங்கு சீராக வாழ வழிசமைப்பதற்கான நடைமுறைப்பயிற்சிகளை கற்றுத் தருவதுதான் மனவளக்கலையின் அடிப்படை நோக்கம்.
எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிவகைகளையும் மகரிஷி கூறியிருக்கின்றார்.
தர்மசாஸ்திரம நமக்கு சிறந்தது. வாஸ்து சாஸ்திரம் நன்றாக இருந்தாலும் தர்மசாஸ்திரம் கடைப்பிடிக்காவிடில் வாஸ்து சாஸ்திரத்தில் பயனில்லை.
உடலுடன் எப்படி வாழவண்டும் என்ற கலையை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வண்டும்.
உடலை சரிப்படுத்துவது, உள்ளத்தை சீரமைப்பது, உயிரை நீட்டிப்பது, இதனை ஒழுங்காக கற்பிப்பதுதான் மனவளக்கலை. மனம் வளமடையவில்லையெனில் எவ்வாறான செல்வங்கள் தொகையாகக் கிடைத்தாலும் சந்தோஷம் கிடைக்காது.
அதேபோல காயப்படும் இயல்பு எம்மிடம் இருந்தால்தான் பிறரால் எம்மைக் காயப்படுத்த முடியும். காயப்படும் இயல்பு எம்மிடம் இல்லாவிடில் எம்மை யாராலும் காயப்படுத்த முடியாது.
எவ்வாறான சந்தர்ப்பங்களிலும் எமக்குரிய நிலையிலிருந்து நாம் மாறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
பிறரது விமர்சனங்களால் பாதிக்கப்படாத உயர் நிலைக்கு எமது மனதை இட்டுச் செல்லவேண்டும்.
உடல் பலம், உள்ள பலத்தை அடைந்தபின் அடைய வேண்டிய நிலை ஞானநிலை.
நாம் என்ன நினைக்கிறாமெனில், நமக்கு எது தெரிகின்றதோ அதுதான் சரியெனவும் எது தெரியாதோ அதுதான் தப்பெனவும் நினைக்கின்றாம்.
உறவுகள் மேம்பட என்ற ஒரு கொள்கையை முன்வைக்கின்றார்கள். குறிப்பாக, தாய், தந்தையரை தம்முடன் வைத்துக்கொள்ள விரும்பும் ஆண்களுக்கு பெண்கள் ஒருபோதும் உடன்பாடாக இருந்ததில்லை என்பதை பெண்கள் பரிசீலனை செய்து புரிந்து கொள்ள வண்டும்.
இறைவன் பற்றிய கொள்கையில் புரட்சிகரமான கொள்கையை மகரிஷி முன்வைக்கின்றார். அதனை ஏற்றுக்கொள்கின்ற தைரியம் நம்மிடத்தில் வரவண்டும்.
ஒருமனிதன் ஆன்ம விடுதலை அடைவதை சமூகத்தால் சகித்துக் கொள்ளவே முடியாது. உலகம் செய்த அயோக்கியத்தனங்களில் மிகப்பெரியது இயசுவை சிலுவையில் அறைந்தது. காரணம், அவரின் சிந்தனைகளை ஏற்கமுடியாமை.
சுதந்திரம் உள்ள உயிர்களுக்குத்தான் சுயசிந்தனை வரமுடியும். ஒரு ஆன்மாவின் விடுதலைதான் உண்மையான மதத்தின் நோக்கமெனில் அடிமைப்படுத்துகின்ற எதுவும மதமாக அமைய முடியாது.
மனிதனை சுதந்திரமாக இருக்க எது அனுமதிக்கின்றதா அதுவே உண்மையான மதமாக இருக்க முடியும்.
பார்க்காத கடவுளுக்கும் பார்க்காத சொர்க்கத்துக்குமாக இன்று உலகம் முழுவதும் சண்டை போட்டுக்கொண்டு அழிகின்றனர்.
ஆழ்ந்த சுயசிந்தனை ஊடு இறைவனைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு வருகின்றதே அதுதான் இறைநிலை. கடவுளைப் படைப்பவன் என்று கூறுவது தவறு. படைப்பு என்பதுதான் கடவுளாக இருக்க முடியும்.
இயக்கத்திலிருந்து வெளிப்படுத்துதல் தான் இறைநிலையயொழிய இறைவன் என்கிற மனிதத்தை பிரிக்க முடியாது.
தன்னை உணர்வதற்கான ஒரு வழிமுறையை ஆழமாகச் சிந்திக்கின்ற ஒரு முறையாகத்தான் வதாந்திரியம் உருவாகியுள்ளது.
மனம் பக்குவம் அடைந்தவர்கள் போரையும் பூசலையும் விரும்புவதில்லை. போரற்ற சமுதாயம் தான்றுவதற்காகவ உலக சமுதாய சேவா சங்கத்தை மகரிஷி தோற்றுவித்தார்.
மனம் சமாதானம் அடைந்தால் அருகில் வருபவனும் சமாதானம் அடைகின்றான்.
மனிதர்கள் பலர் நினைக்கிறார்கள் காயில் கட்டினால் புண்ணியம் என எண்ணுகின்றார்கள். ஒரு கல்லை கடவுளாக்குகின்றார்கள் ஆனால், ஒரு மனிதனை கடவுளாக்குகின்றனரா?
உலகெங்கணும் கல்லை கடவுளாக்கி காயில் கட்டும் நிலையில் மனிதனை கடவுளாக்க முற்பட்டவர்தான் மகரிஷி வதாந்திரி.
சிறந்த சிந்தனைகள், சிறந்த எண்ணங்கள் என்ற கதையைத்தான் மகரிஷி வழங்கியுள்ளார். அதனைப் பின்பற்றி ஆராக்கிய வாழ்வு வாழவேண்டுமெனக் கூறி தனது உரையை நிறைவுசெய்தார்.
யோ.நிமல்ராஜ்
0 விமர்சனங்கள்:
Post a Comment