முகாம் வாழ்வுக்கு முடிவு?
வவுனியாவிலிருந்து டிட்டோ குகன்
இறுதியாக நிலவிய யுத்த காலத்தின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாண முகாம்களில் தங்கியிருந்த 1496 குடும்பங்களைச் சேர்ந்த 4206 பர் முதற்கட்டமாக கடந்த புதன்கிழமை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்கள் மீள்குடியற்றம் எனும் பெயரில் விடுவிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். இந்த நடவடிக்கையை மீள்குடியேற்றம் என்று அரசாங்கம் அடை யாளப்படுத்தினாலும் நடைமுறை ரீதியாக பார்க்கும்பாது அது எவ்வளவு தூரம் மீள்குடியற்றம் என்ற பதத்திற்கு பொருந்திவரும் என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயமாகவே இருக்கிறது.
ஏனெனில், அன்றைய தினம் சொந்த இடங்களுக்கென அனுப்பிவைக்கப்பட்ட மக்கள் அனைவரும் வன்னியிலிருந்தே இடம்பெயர்ந்திருந்தாலும் வடக்கு, கிழக்கின் ஏனைய பிரதேசங்களுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். அதாவது, பிறந்த ஊர், பொறுப்பேற்க தயாராக இருக்கும் உறவினர்கள், வாழும் ஊர் போன்ற இடங்களுக்கு இவர்களில் பெரும்பாலானவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
எனினும், சில தேவைகளின் நிமித்தம் வன்னி சென்று திரும்பி வரமுடியாமல் அங்கேய சிக்குண்டு போன சிலரும் முகாம் களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களில் இருக்கத் தான் செய்தார்கள். இவர்களுக்கு இந்த நட வடிக்கையை, மீள்குடியேற்றம் என்று சொல்வது பொருத்தமாக அமையலாம். ஆனால், உறவினர் களை நம்பி மட்டும முகாம்களை விட்டு வெளியில் வந்திருக்கும் நிலைமையை அப்படி கூறிவிட முடியாது.'
கடந்த புதன்கிழமை யாழ்.மாவட்டம் கைதடி மற்றும் கொடிகாமம் முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 1057 குடும்பங்களைச் சேர்ந்த 3112 பர் அவர்களது சொந்த இடங்களுக்கென அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான நிகழ்வு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடை பெற்றது.
இதேபோல், வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 439 குடும்பங்களைச் சர்ந்த 1094 பரும் அன்றைய தினம் அவர்களது சொந்த இடங்களுக்கென திருகோணமலை, கந்தளாய், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு 64 பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதி நீதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பங்கேற்புடனேயே வவுனியா நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் இறுதியில் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதற்காக வந்திருந்த மக்கள் அனைவரும் அவர்கள் திரும்பிச் செல்லவிருக்கும் பிரதேசங்களுக்கு அமைய பகுதி பகுதியாக பிரித்து அமர்த்தப்பட்டிருந்தனர். அத்துடன் இம்மக்கள் அனைவரும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்தினம மெனிக்பாம் முகாமிலிருந்து அழைத்து வரப்பட்டு அன்றைய தினம் இரவு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்ட புதன்கிழமை காலை 6 மணியளவிலேயே நிகழ்வுக்கென வவுனியா நகரசபை மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.
இதேநேரம், நிகழ்வுக்கென மக்கள் மைதானம் அழைத்துவரப்பட்டதிலிருந்து காலை 10 மணி வரை ஆகாரங்கள் எதுவும் வழங்கப்படாததால் குழந்தைகள் சார்வில் இருந்த இடங்களிலேயே உறங்கிக் கொண்டிருந்ததுடன் மட்டுமல்லாது, சில குழந்தைகள் தமது தாயிடம் பசியெனக் கூறி அழுதுகொண்டிருந்ததையும் பெற் றோர் அக் குழந்தைகளை சமாளிக்க முயற்சித்துக்கொண்டிருந்ததையும் அவதானிக் கக் கூடியதாக இருந்தது. எப்படியிருப்பினும் பெற்றோர்களின் முயற்சி இறுதிவரை பலனளிக்காமலே போனதுடன் உணவு வழங்கப்பட்டதன் பின்னர் அக்குழந்தைகள் தமது அழுகையை நிறுத்தின.
அகதி வாழ்க்கை வாழும் மக்களின் நிலைமைக்கு சிறந்த உதாரணமாக இச்சம்பவம் அமைந்திருந்தது. அதாவது, அம் மக்களின் எதிர்பார்ப்புகள் ஈடுசெய்யப்படும் வரை அவர்களின் ஏக்கங்கள் ஒருபோதும் தீரப் போவதில்லை என்பதைய இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
இந்த மக்களிடைய பலதரப்பட்டவர்களையும் சந்திக்கக் கூடியதாக இருந்தது. புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராளிகளின் மனைவி, பிள்ளைகளின் எதிர்காலம் என்னவென்ற கேள்விக் குறியுடன் இருக்கும் கூலித் தொழிலாளிகள், பணியை தொடரமுடியாமல் பான ஆசிரியர்கள், எதுவும அறியாப் பருவத்தில் இருக்கும் சிறார்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களும் இந்தக் கூட்டத்திற்குள் இருக்கக் காணப்பட்ட னர்.
இவர்கள் அனைவரி னது வார்த்தைகளிலும் முகாம் களைவிட்டு வெளியறிச் செல் வதன் திருப்தி வெளிப் பட்டாலும் வாழ் வாதாரத்துக்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வென்று கட்டால் விரக்தியானதொரு சிரிப்பும் நிச்சயமற்ற வார்த்தைகளும் மட்டும வெளிவந்தன.
இதில் முன்னாள் போராளிகளின் (விடுதலைப்புலி உறுப்பினர்கள்) மனைவி, பிள்ளைகளினது வாழ்க்கைய பெரும் கேள்விக் குறியாக இருக்கிறது. 3 பிள்ளைகளின் தாயான சுபாஜினி (வயது 34), இவரும் ஒரு போராளியின் மனைவியே. யாழ்ப் பாணத்தில் பிறந்த இவர் தற்பாது மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனது மாமியாரின் (கணவரின் தாய்) வீட்டை நம்பிய செல்கிறார்.
20 வயதிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சர்ந்து விட்ட இவரது கணவன், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும்பாது ஓமந் தையில் வைத்து சரணடைந்ததாக சுபாஜினி தெரிவித் தார்.
முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போது, புனர்வாழ்வு முகாமிலிருக்கும் கணவரிடமிருந்து கடிதங்கள் வந்த போதும் அவர் எப் போது விடுதலை செய் யப்படுவார் என்பது தெரியாமலேயே சுபாஜினி தனது பிள்ளைகளுடன் மட்டக்களப்பு செல்கி றார். அவருக்கும் தொழில்கள் எதுவும் கிடையாது.
இதபால், இன்னு மொரு போராளியின் மனைவியான வளர் மதி உதயகுமாரையும் (வயது 35) எமக்கு சந்திக்க முடிந் திருந்தது. இவர் ஒரு ஆசிரியை. தம்பிராசபுரம் அரச பாடசாலையில் இவர் பணிபுரிந்திருக்கிறார். வன்னியை பிறப்பிடமாகக் கொண்ட வளர்மதி அவரது கணவரின் பிறப்பிடத்தை (மட்டக்களப்பு களுவங்கேணி) நம்பிய முகாமை விட்டுச் செல்கிறார். தனது கணவரின் தாய அவரது ஒர நம்பிக்கை. கணவரின் தாயை தாங்கள் வைத்துக் காப்பாற்ற வண்டிய நிலையில், அவரை நம்பிச் செல்ல வண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறிய வார்த்தைகளில் வருத்தமும், விசனமும் இருந்ததை உணர முடிந்தது.
கணவர் சரணடைந்து புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தனது வாழ்வாதாரத்துக்கான ஆசிரியர் தொழிலையும் இழந்து நிற்பதாக வளர்மதி கவலை வெளியிட்டார். மாகாணம் விட்டு மாகாணம் மாறும்பாது தான் வகித்த ஆசிரியர் தொழிலை தொடர முடியுமா என்பது பற்றி தெரியவில்லை என்றும் அவர் நிச்சயமில்லாமல் இருக்கிறார்.
அது மட்டுமல்லாது, தனது கணவர் எப்போது திரும்புவாரென தெரியாமலேயே தாயொருவர் தனது 3 பிள்ளைகளுடன் உறவினர்களை நம்பி செல்கிறார். ஏனெனில், சொந்த இடத்திற்கு செல்வதற்காக முகாமைவிட்டு வெளியில் வரும்பாது தனது கணவர் சந்தகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுவிட்டதாக அந்தத் தாய் கூறினார்.
தனது கணவர் போராளியில்லாத அதநரம், விடுதலைப் புலிகளின் நிர்வாகத் துறையில் பணியாற்றியிருப்பதாக கூறிய அந்தத் தாய், விசாரணைகளின் பின்னர் 2 நாட்களில் திருப்பி அனுப்பப்படுவாரென கூறப்பட்டாலும் கணவர் வந்ததன் பின்னர் தான் எதையும் நிச்சயமாக கூறமுடியுமென்றும் அவர் கவலையுடன் தெரிவித்தார்.
இதநரம், தந்தையின் கூலித் தொழில் காரணமாக 1990ஆம் ஆண்டு புதுக்குடியிருப்புவள்ளிபுரம் சென்று குடியேறிய இராசரத்தினம் கமலதாசன் (வயது 24) தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் தனது கூலித் தொழிலை மட்டும நம்பி பிறப்பிடமான திருகோணமலை, தம்பலகாமத்தை நாக்கிச் செல்வதாக கூறினார். ஏனெனில், வாழ்வாதார உதவிகளுக்கான எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லையென அவர் விசனம் வெளியிட்டார்.
இதேபோல், வாசுகியும் (வயது 37) தனது கணவர் மற்றும் 4 பிள்ளைகளுடன் உறவினர் வீட்டை நம்பிய திருகாணமலை செல்கின்றார்.
அத்துடன், 22 வயது தாயான நந்தினி வவுனியாவில் முகாமைத்துவ பட்டப்படிப்புக் கென விண்ணப்பித்து விட்டு அனைத்தும் கூடிவரும் வேளையில், அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் தனது கணவர் கந்தசாமி சிவகுமார் (வயது 33) மற்றும் 2 வயது பிள்ளைகளுடன் யாழ்ப்பாணம் காரைநகருக்குச் செல்கிறார். அங்கு சென்று மீண்டும் எப்படி தனது படிப்பைத் தொடர்வது என்பத அவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இவ்வாறாக பலரும் பல எதிர்பார்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் மத்தியிலேயே முகாம்களை விட்டு செல்கின்றனர். எனினும், முகாம்களை விட்டு வெளியற விரும்பும் வன்னியில் குடியற நேர்ந்த வெளியிடங்களை பிறப்பிடமாகக் கொண்ட மக்களை விண்ணப் பிக்க அறிவுறுத்தி, விண்ணப்பித்ததன் பின்னர் சம்பந்தப்பட்ட (அரச), தரப்பின ரால் தெரிவுசெய்யப்பட்டவர்கள புதன்கிழமை யன்று விடுவிக்கப்பட்டதாக அங்கிருந்த மக்கள் கூறினர். இவ்வாறானதொரு நடைமுறையின் பிரகாரம இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
எனினும், தற்போதைக்கு முகாம்களில் இருப்பதை விட அங்கிருந்து விடுபட்டு செல்வதே திருப்தியாக இருப்பதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அதை மலும் உறுதிப்படுத்துவது பால், "முகாம்களில் எவ்வளவுதான் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டாலும் மக்கள் அதில் சந்தாஷப்படப் போவதில்லை' என வவுனியா நிகழ்வில் பேசிய பசில் ராஜபக்ஷ எம்.பி.யும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறிருப்பினும் முகாம்களிலிருந்து வெளியறுவது அம் மக்களுக்கு தற்காலிக திருப்தியை தந்தாலும அவர்களது எதிர்காலம் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அம்மக்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டாலும் வாழ்வாதார பிரச்சினையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. அன்றையதினம் சொந்த இடங்களுக்கென அனுப்பிவைக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகள் எதுவும் உறுதியளிக்கப்படவில்லை என்றும் பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டுமென்றும் கூறினர்.
""வடக்கின் வசந்தம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் வடக்கின் முதலாவது மீள்குடியற்றத் திட்டம் மற்கொள்ளப்பட்டபாது, அங்கு வாழ்வாதார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், இம்முறை அப்படி எதுவும் செய்யப்படவில்லை. முசலியில் மக்கள் அவரவரது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். ஆனால், இங்கோ பெரும்பாலான மக்கள் அவர்களது உறவினர்களை நம்பிய சென்றுள்ளனர். அம் மக்கள் வெகு நாட்களுக்கு உறவினர்களைய நம்பிக் கொண்டிருக்க முடியாது.
அத்துடன், அவர்களின் பிறப்பிடம் எதுவாக இருந்திருந்தாலும் வாழ்வாதாரம் அனைத்தும் வன்னியிலேயே தங்கியிருந்திருக்கின்றன. இதில் சிலருக்கு பிறப்பிடங்களில் காணி, வீடுகள் இருந்தாலும வசதிகளை கொண்டிருப்பவர்கள் பலராக இருப்பினும் வசதிகள் எதுவும் இல்லாதவர் ஒருவராக இருப்பினும் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது இங்கு முக்கியமாகும்.
அது மட்டுமல்லாது, தற்போது முகாமிலிருந்து விடுபட்டு சொந்த இடங்களுக்குச் சென்றதும் மீண்டும் வன்னிக்குச் செல்ல சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டால் அங்கு செல்லவே விரும்புவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம், யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தர்தல்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அரசாங்கத்தினால் முகாம்களிலிருந்த மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எப்படியிருப்பினும் தேர்தலொன்றுக்கான பிரசாரமாக மீள்குடியற்றம் இருந்துவிடக் கூடாது.
அதேபோல், வன்னியிலிருந்து வாழ்வாதாரங் களை இழந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது ஏனைய பிரதசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வன்னியில் கண்ணிவெடிகள் அகற்றி மீள்குடியற்றம் ஆரம்பிக்கப் படும் போது, இம் மக்கள் மீண்டும் வன்னி திரும்ப விரும்புவார்களாயின் அவர்க ளையும் அங்கு மீள்குடியற்றம் செய்ய வேண்டுமென்பத கட்டாயம், அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment