ஆலடி அருணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர் கொழும்புக்குத் தப்பிச்செல்ல முயற்சி
திருச்சி விமான நிலையத்தில் கைது ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ.ராஜா நேற்று விமானம் மூலம் கொழும்புக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் அண்மையில் எஸ்.ஏ.ராஜாவுக்கு மதுரை மேல் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பபைக் கேட்டதும் நீதிமன்றத்திற்கு வந்திருந்த எஸ்.ஏ.ராஜாவும் அவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றில் மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கார் மூலம் நெல்லையிலிருந்து எஸ்.ஏ.ராஜா திருச்சி வந்தார். நேற்றுக் காலை அவர் ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமானம் மூலம் கொழும்புக்குச் செல்லவிருந்தார்.
எஸ்.ஏ.ராஜா விமானம் மூலம் தப்பிச் செல்ல முயல்வதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய பொலிஸார் எஸ்.ராஜாவைக் கைதுசெய்துள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நெல்லை பொலிஸாருக்கும் ராஜா குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லை பொலிஸார் திருச்சிக்கு நேற்றுச் சென்றுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment