பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் உத்தியோகபூர்வ வீட்டில் புலிகளுக்குச் சொந்தமான வான்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து புலிகளுக்குச் சொந்தமான வான் ஒன்று புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகரவும் தெரிவித்துள்ளார். மாதிவலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஜெயானந்தமூர்த்தியின் வீட்டு வளவிற்குள்ளிருந்தே புலிகளுக்குச் சொந்தமான வெள்ளை நிற டொயாட்ட ரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கொழும்பிலும் வெளி இடங்களிலும் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி முக்கியஸ்தரான ரட்ணம் மாஸ்ரர் தற்போது பொலிசாரின் பிடியிலுள்ளதாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளிக் போது வழங்கிய தகவல்களைக் கொண்டே இந்த வாகனம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் என்.பி.ஜி.எஸ். 3140 என்னும் இலக்கம் கொண்ட வெள்ளை நிற டொயாட்ட வாகனத்தை அரச புலனாய்வுப் பிரிவினர் ஜெயானந்தமூர்த்தியின் வீட்டிலிருந்து மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ரட்ணம் மாஸ்ரர் பல கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment