இலங்கை மந்திரி பண்டுல குணவர்த்தனே கூறிய தகவல் உண்மை, தமிழ்வின்னில் ஒட்டப்பட்ட தகவல் தவறானது
இன்று காலையில் எதேச்சையாக தமிழ்வின் இணையத்தில் வெளியான பழைய செய்தி ஒன்றை காண நேர்ந்தது... அந்த தகவலை அவர்கள் மாலைமலர் இணையத்தில் இருந்து பெறப்பட்டதாக சுட்டி காட்டுகிறது..அச்செய்தியின் விபரம் இதுதான்: பிரபாகரன் பாவித்த போன் துராயா (Thuraya) வகையச்சேர்ந்தது. அந்த துராயா வகையைச்சேர்ந்த ஒரு போனின் விபரம் அடங்கிய இணைப்பை இணைத்துள்ளேன்... பார்த்து முடிவெடுங்கள் உண்மையில் யாருக்கு மந்த அறிவு என்று Thuraya Satellite Phone - 2510 Package incl Marine SIM Card
சாட்டிலைட் போனில் பிரபாகரனுடன் பேசிய அரசியல் தலைவர்கள்; “சிம்” கார்டில் ரகசியம் அம்பலம் (சாட்டிலைட் தொலைபேசிக்கு சிம் காட் இல்லை?..)
[ புதன்கிழமை, 27 மே 2009, 10:01.15 PM GMT +05:30 ] [ மாலைமலர் ]
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவர் வைத்திருந்த சாட்டிலைட் போன் துப்பாக்கி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சாட்டிலைட் போன் சிம்கார்டை எடுத்து இலங்கை ராணுவ உளவு பிரிவினர் ஆராய்ந்தனர். அந்த போனில் அவர் பேசிய எண்கள் அவருக்கு வந்த போன்களின் எண்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன.
இதன் மூலம் பிரபாகரனுடன் யார்-யார்? பேசியுள்ளனர். அவர் யாருக்கெல்லாம் போன் செய்து பேசி இருக்கிறார் என்ற விவரங்களை கண்டு பிடித்து உள்ளனர்.
தமிழக மற்றும் தென் மாநில அரசியல் தலைவர்கள் அவருடன் பேசியிருப்பதும் சிம் கார்டு மூலம் தெரிய வந்துள்ளது. அந்த தலைவர்கள் யார்? எந்தெந்த தேதிகளில் பேசி உள்ளனர். எந்த எண்ணில் இருந்து பேசி இருக்கிறார். போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இது பற்றி இலங்கை மந்திரி பாண்டுலா குண வர்த்தனே கூறும் போது பிரபாகரன் போன் சிம் கார்டு மூலம் அவருக்கு யார்-யாருடன்? தொடர்பு இருந்தது என்பதை கண்டு பிடித்துள்ளோம்.
தென் இந்தியாவில் முக்கிய தலைவர்கள் அவருடன் பேசி இருப்பது தெரியவந்துள்ளது என்றார்.
குறிப்பு: மேலேயுள்ள செய்தியில் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது போன்று சாட்டிலைட் தொலைபேசிக்கு சிம் காட் இல்லை என்பது யாவரும் அறிந்த உண்மையே!. அவர்களின் மந்த அறிவு இதனுாடாக தெளிவாகின்றது.
Tamilwin
உண்மையில் சற்றலைட் தொலைபேசிக்கும் “சிம்” கார்ட் உள்ளது. அந்த சிம்கார்ட் கீழே உள்ள படத்தைப்போன்றதாக இருக்கும்.
These sim cards only work with Satellite phones and will not work with a standard GSM handset.
ஊர்க்குருவி
0 விமர்சனங்கள்:
Post a Comment