வீ. ஆனந்தசங்கரி – வீ. சகாயதேவன் முறுகல்!
வடக்கத்தையான் என்று துவேசம் பேசிய சங்கரிக்கு எதிராக கூட்டணியின் வன்னிக்கிளை போர்க்கொடி!!
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்களுக்கும், அக்கட்சியில் நிர்வாக செயலாளர் வீ. சகாயதேவன் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாநகர சபைக்கான தேர்தல் முடிந்த கையோடு விமானம் மூலம் கொழும்பு வந்தடைந்த திரு. ஆனந்தசங்கரி அவர்கள் அங்கிருந்து வவுனியா சென்றிருந்ததாகவும், ஆனாலும் வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தினுள் ஆனந்தசங்கரி அவர்களை நுழைய அனுமதிக்காது தமிழர் விடுதலை கூட்டணியின் வன்னி பிராந்திய கிளையினர் தடுத்து நித்தியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
இதே வேளை கட்சியின் நிர்வாக செயலாளர் மீது அவதூறு பொழிந்த திரு. ஆனந்தசங்கரி அவர்கள் அது குறித்து விளக்கம் அளித்து விட்டு வரும் பட்சத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்து மட்டும் கட்சி அலுவலகத்தில் இருந்து பேசுவதற்கு தாம் தயார் என்று கூட்டணியின் வன்னி பிராந்திய கிளையினர் தெரிவித்திருந்ததாக அறியப்படுகின்றது.
இதே வேளை திரு. ஆனந்தசங்கரி அவர்கள் வவுனியா Nஐhசப் படை முகாமில் தங்கியிருந்து
தனது மெய்ப்பாதுகாவலர்களான பாதுகாப்பு பொலிசாரின் மூலம் கட்சியின் நிர்வாக செயலாளர் வீ. சகாயதேவன் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் மீது விசனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த முறுகல் நிலை குறித்து அறியப்படுகையில் கடந்த தேர்தலின் போது வவுனியாவில் தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் நியமனப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் வன்னி பிராந்திய கிளையினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி யை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தனர். இதை கண்ட திரு ஆனந்தசங்கரி அவர்கள் கட்சியின் நிர்வாக செயலாளர் வீ. சகாயதேவன் அவர்களை வடக்கத்தையான் தன் புத்தியை காட்டிவிட்டான் என்று தூற்றியதாகவும் அறியப்படுகின்றது.
வீ. சகாயதேவனின் தந்தை வழியினர் ஈரேட்டை சேர்ந்த இந்திய சம்சா வழியினர்! அவரது தாயார் திரு ஆனந்தசங்கரி அவர்களின் ஒன்று விட்ட சகோதரி என்பதும் குறிப்படத்தக்கது.
இந்நிலையில் வீ. சகாயதேவன் அவர்கள் தனது சகோதரியின் பிள்ளையை போல் இல்லாமல்
அவரது தந்தை வழியை போல் செயற்பட்டுள்ளதாக திட்டி தீர்த்த திரு. ஆனந்தசங்கரி அவர்கள் வீ. சகாயதேவன் தனது இந்திய புத்தியை காட்டி விட்டார் என்றும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக வன்னி பிராந்திய கூட்டணி கிளையினர் சங்கரிக்கு எதிராக போர்க்கொடி ஏந்தியுள்ளனர்.
இதே வேளை ஏனைய கட்சிகளை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சுமத்தி வரும் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் தனது கட்சிக்கூட்டத்தை வவுனியா Nஐhசப் படை முகாமில் கூட்டியுள்ளார். படையினர் புடை சூழ Nஐhசப் முகாமில் குந்தியிருக்கும் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் அங்கிருந்து தனது கட்சி உறுப்பினர்களுக்கு சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தும் ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே அவரது அழைப்பை ஏற்று சென்றிருந்தனர்.
இதில் கிளிநொச்சி வீஆர்.ரி நிறுவனத்தின் சார்பாக சென்றிருந்த ஒருவர் தனக்கு கிளிநொச்சியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்ததோடு அதற்கு சம்மதம் தெரிவித்த ஆனந்தசங்கரி அவர்கள் இது குறித்து தான் அமைச்சர் பௌசி அவர்களுடன் பேசுவதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
இதே வேளை வவுனியா திருப்பதி களஞ்சிய உரிமையாளர் திரு செல்வரட்ணம் பரராஐசிங்கம் அவர்களும் அந்த ஐவரில் ஒருவராக சென்று ஆனந்தசங்கரி அவர்களிடம் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி தமது பாரவூர்தி சென்று வருவதற்கான ஒழுங்குகளை செய்து தருமாறு கோரியுள்ளதாக அறியப்படுகின்றது.
குறித்து இரு வர்த்தகர்களிடமும் அதற்கு கைமாறாக தனது கட்சிக்கு பெருந்தொகை பணத்தை தருமாறு திரு. ஆனந்தசங்கரி அவர்கள் கோரியுள்ளதாக இரு வர்த்தகர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, கூட்டணியின் நிர்வாக செயலாளர் வீ. சகாயதேவன் வைத்திருக்கும் வாகனம் தனக்குரியது என்று தெரிவித்து அவர் மீது ஆனந்தசங்கரி அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து வவுனியா பொலிஸாரிடம் தனது நியாயத்தை எடுத்து விளக்கியிருந்த வீ. சகாயதேவன் அவர்கள் வவுனியா அலுவலகம் தனது சொந்த செலவில் ஒழுங்கு செய்யப்பட்டது என்றும் அதற்கு கைமாறகவே ஆனந்தசங்கரி அவர்கள் அந்த வாகனத்தை தனக்கு எல்லோர் முன்னிலையிலும் வழங்கியிருந்ததாக குறிப்பிட்டிருந்ததோடு அந்த வாகனத்தை அவர் ஆனந்தசங்கரி அவர்களிடம் மீளக்கையளிக்க வேண்டிய அவசியம் இல்லை இல்லை என்றும் தெரிவித்துள்ளதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு செவ்வி வழங்கியுள்ள திரு ஆனந்தசங்கரி அவர்கள் வழமை போல் ஈ.பி.டி.பி யினர் மீதும், தம்மோடு கூட்டுச்சேர்ந்திருக்கும் இன்னொரு இமைப்பான புளொட் அமைப்பின் மிதம் அவதூறு பொழிந்திருந்ததோடு இப்போது தனது கட்சியின் நிர்வாக உறுப்பினர் மீதும் அவதூறு பொழிந்து வருவதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா நட்பு நாடு என்றும், இந்தியன் மொடல்தான் எமக்கு தீர்வு என்றும் கூறி வரும் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் தன்னோடு கூட இருந்தவரை நோக்கி இந்திய புத்தியை காட்டி விட்டார் என்று வசை பாடி வருகின்றார். இதே வேளை அரசாங்கத்தை எதிர்ப்பதாக வெளியில் ஒரு தோற்றத்தை காட்டி வருகின்ற அவர் படை முகாமில் தனது கட்சிக்கூட்டத்தையும் நடத்தி வருகின்றார்.
ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி சீமாட்டி என்ற பாணியில் இவரது செயற்பாடுகள் அமைந்திருப்தாக பலரும் இவர் மீது விசனம் கொண்டுள்ளதாக பரவவலாக பேசப்படுகின்றது.
வவுனியாவில் இருந்து
ஆதவன்!
நன்றி… எங்கள் தேசம் இணையம்!
0 விமர்சனங்கள்:
Post a Comment