பதவி வெற்றிடம் பாய்ந்து விண்ணப்பிக்கவும்
பதவி வெற்றிடம்
அமைப்பின் பெயர்: "புதிய தமிழ் புலிகள்" (New Tamil Tigers - NTT)( (பழைய பெயர் "தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்" - LTTE)
பதவி : தலைவர்
தகமைகள்:
கல்வித் தகமை:
பாடசாலைப் படிப்பு, வாழ்க்கை அனுபவப்படிப்பு ஏதும் இருக்கக் கூடாது. தேசியம், தாயகக் கோட்பாடு, சுயநிர்ணயம் என்ற சொற்களை உச்சரிக் தெரித்திருத்தல் வேண்டும். இவைபற்றிய தெளிவு, விளக்கம் ஏதும் அறிந்திருக்க தேவையில்லை. வருடம் ஒருமுறை கார்த்திகை 26ம் நாள் யாரோ எழுதிக் கொடுக்கும் ‘மாவீரர் உரை’ ஐ தடக்கித் தடக்கி தனக்கும் பிறருக்கும் பொருள் விளங்காமல் வாசிக்க தெரித்திருத்தல் வேண்டும். இதற்கான விளக்க உரையை விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செய்து காட்ட உலகில் பலர் உள்ளார்கள். அவர்கள் விளக்க உரைபற்றி நீங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
அம்புலிமாமா புத்தகம் மேதகுவின் ‘தத்துவப்புத்தகம்’. எனவே அதனைத் தவிர்த்து வேறு ‘சுட்டி விகடன்’ போன்ற புத்தகங்களை உங்கள் தத்துவப்புத்தகங்களாக ஏற்று படித்திருத்தல் வேண்டும் அல்லது இனிப்படிக்க வேண்டும் (விகடன் குழுமம் இதனை உங்களுக்கு இனாமாக விநியோகம் செய்யும் நன்றியறிதலுடன்).
கிளின்ரிஸ்வூட் படங்களைப் பார்த்து இராணுவ உத்திகளை ‘தலைவர்’ கற்றார். எனவே அவருக்கு மரியாதை செலுத்தும் முகமாக கிளின்ரிஸ்வூட் படங்களைத் தவிர்ந்த வேறுயாராவாது ர்ழடலறழழன யுஉவழச நடித்த ஆங்கிலப் படங்களை படங்களை பார்த்து இராணுவ உத்திகளை, அறிவுகளை நீங்கள் கற்றிருக்க வேண்டும்.
தொழில் தகமை:
உடல், மூளை உழைப்பில் நிச்சயமாக கடந்த காலங்களில் ஈடுபட்டிருதல் கூடாது. இனிமேலும் ஈடுபடக் கூடாது. போதவஸ்து கடத்தலில் நல்ல அனுபவம் இருத்தல் வேண்டும். நேரடி அனுபவம் விரும்பத்தக்கது. ஆனால் தலைவரின் சிந்தனை வழியில் மறைமுக அனுபவமும் போதுமானது. ஆயுதக்கடத்தலில் சர்வதேச பயங்கரவாதிகளின் தொடர்பும், அனுபவமும் இருத்தல் வேண்டும்.
உடல் தகமை:
உடலை வளைத்து வியர்வை சிந்தி வேலை நிச்சயமாக செய்யதிருக்கக் கூடாது. எனவே உங்களுக்கு ‘செல்ல’ தொந்தி இருக்க வேண்டும். சக்கரை வியாதி, இரத்த அழுத்தம், கொலஸ்ரறோல் போன்ற வருத்தங்கள் இருக்கலாம். என்ன கழுத்தில் ஒரு பாரத்தை தினமும் இறக்காமல் காவ வேண்டும். இது தான் சற்று கஷ்டமான விடயம். ஆம் சயனைற் குப்பியை கூறுகின்றோம். உங்கள் மெய்பாதுகாவலர்கள் தேவை ஏற்படும் போது கட்டுக் கோப்பான இயக்கக் கொள்கைபடி சயனைற்றை கடித்து உயிர் துறக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும். நீங்கள் ‘இராஜ‘ மரியாதைக்காக கடத்தப்படும் போது கோதபாயவிடம் இதனைக் கழற்றிக் கொடுத்தால் போதும்.
கடமைகள் :
உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழரிடம் மிரட்டி ஏமாற்றி பறித்த சொத்துக்களை ஏற்கனவே தனி நபர்கள் சுருட்டியவை தவிர ஏனயவற்றை மிரட்டி காப்பாற்றி, முள்ளக்கம்பிக்கு பின்னால் நிற்கும் மக்களை தவிர உங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொண்டு வேலை செய்து உழைக்காமல் ஆயுள் பூராக ஜீவிக்க ஆவன செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் ‘நாடு கடந்த தமிழ் ஈழம்’ என்ற பதாகையை பிடிக்க வேண்டும். ‘நாடு கடந்த தமிழ் ஈழம்’ இற்கான ஆங்கில வரைபுகளை உருத்திரனும், சந்திரனும் வெளிநாட்டு வெள்ளைத் தோல் ‘நண்பர்கள்’ மூலம் பார்த்துக் கொள்ளுவார்கள். மக்களை நிச்சயமாக எக்காலத்திலும் சந்தித்திருக்கவே கூடாது. இனிமேலும் சந்திக்கக் கூடாது. (புகைப்படங்களில் வயது முதிர்ந்தவர்களை கட்டியணைக்கும் ‘போஸ்’ கொடுக்லாம்.) தினமும் நீச்சல்தடாகத்தில் நீச்சல் அடிக்க தயாராக இருத்தல் வேண்டும். அதுவும் உதவியாளர் சகிதம், உங்கள் செல்லப் பிள்ளையுடன். பிரச்சனைகளை பேசித்தீர்க்கும் அணுகு முறையில் உங்கள் சக்தியை விரயமாக்கக் கூடாது. பதிலாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் ‘இலகு’ அணுகு முறையை மட்டும் கையாண்டால் போதுமானது.
உங்களை மிரட்ட சர்வ தேசப் புலனாய்வு ‘நெடியவன்’ போன்ற உங்களுக்குள் இருந்து உருவாகிய ஓட்டுக்குழு (நன்றி: சொல் உபயம்: தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்) உறுப்பினர்கள் முனையலாம். இதனை சமாளிக்க விசுவநாதனின் மகன் ஆவன செய்வார். சுரேஸ், சம்மந்தர் போன்வர்களுக்கு தேர்தல் நிதி, வைகோ…. சீமான் போன்றவர்களுக்கு மாதா மாதம் கொடுப்பனவுகள் போகின்றனவா என்றும் நன்றிக் கடனாக அவர்கள் நன்றாக வால் ஆட்டிக் குலைக்கின்றனரா என்பதை அவதானிக்க வேண்டும். கூடவே சமாதான தூதுவர், பிரபா - ரணில் ஒப்பந்த மத்தியஸ்தருடனும் அவர் சகாக்களுடனும் முடிந்தளவு ‘நல்ல’ உறவைப் பேண வேண்டும். ரணிலுக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்ப வேண்டும்.
பதவிக்காலம்:
மிகக்குறுகிய காலம். (Short Term Assignment)
காரணம் கோதபாய ராஜபக்ஷ தனது ‘இராஜ‘ கவனிப்பிற்காக உங்களை நீங்கள் வாழும் வெளிநாட்டில் இருந்து ‘கடத்தி’ விடுவார் நீங்கள் பதவி ஏற்று சில தினங்களில். இக் ‘கடத்தல்’ பற்றி சர்வதேச பத்திரிகைகள் நல்ல coverage கொடுத்து உங்களை பிரபல்யப்படுத்திவிடும். நீங்கள் எப்படியும் ‘History’ இல் இடம் பெற்றுவிடுவீர்கள். புலிகளின் நாலாவது தலைவர் என்ற குறுநில மன்னன் வரிசையில் இடம் பெற்று விடுவீர்கள். கோதபாயாவின் ‘இராஜ‘ கவனிப்பில் உங்கள் துணுக்காய் வதைமுகாம் போன்ற அனுபவங்களை இனி நீங்கள் பெறப்போவதில்லை. இதையிட்டு கவலைப்பட வேண்டாம்.
ஏற்கனவே முள்ளிவாக்காலில் தலைவர் முழந்தாள் இட்டு காட்டிக் கொடுதலில் ஆரம்பித்து பொட்டன், கேபி வரை சகலதையும் ‘கக்கி’ விட்டார்கள் கோதபாயவிடம். இனியென்ன புதிதாக உங்களிடம் இருந்து அறிந்து கொள்ள கோதபாயாவிற்கு இருக்கின்றது. மிச்ச சொச்சங்களை தலைவர் வழியில் சயனைற் கடிக்க மறந்த 10 ஆயிரம் புலிகளும் தினமும் பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரை புதைத்ததை தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.
சம்பளம்:
வேண்டியளவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நந்திகடல் ‘ஆயுத மௌனிப்பு’ இற்கு முதல் இருந்த கலக்ஷன் தற்போது வெளிநாடுகளில் இல்லை. எனவே இருக்கிறதில் ‘எவ்வளவு முடியுமோ அவ்வளவை’ எடுத்துக் கொள்ளலாம்.
இன்னும் ஒரு சுனாமி அடித்தால் அது உங்கள் அதிஷ்டம். TRO ஒரு பெரும் தொகையை கலக்ஷன் செய்து தரும். வெளிநாட்டு ஊர்சங்கங்களை மிரட்டி கலக்கஷன் செய்ய இன்னும் சில ‘புலன் பெயர்ந்தவர்கள்’ ஊர் சங்கங்களில் உள்ளனர். இதற்கு புலிகளின் கொலை வெறி வானொலி, ரிவி கள் தமது வரலாற்று கடமைகளை செய்யாமலா இருப்பர். எதற்கும் உங்கள் அதிஷ்ட்ட ரேகைபற்றி சீமான் ஊடாக தமிழ் நாட்டில் உள்ள ‘நல்ல’ ஜோதிடரிடம் உங்கள் (ரே)கையை காட்டவும். அவ்வேளை நீங்கள் தமிழ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டால் தமிழ் நாட்டில் நெடுமாறன், வைகோ, திருமா போன்றவர்கள் இந்தியாவின் துரோகத்தனத்தை சுட்டிக்காட்டி போராடாமலா இருக்கப் போகின்றனர்.
மேற் கூறிய தகுதிகள் உள்ளவர்கள் வெளிநாடுகளில் உள்ள ‘தமிழ்’ என்ற முதல் சொல்லுடன் ஆரம்பமாகும் அமைப்புக்களுடாக அல்லது சிவப்பு - மஞ்கள் நிறத்துடன் அமைந்த துவக்குகளுக்கிடையே புலி பாயும் கொடியை காவி நிற்கும் யாருடனாவது தொடர்பு கொண்டு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
எதிர்காலத்திலும் இப்பதவி நிரப்பல் அடிக்கடி ஏற்படலாம் என்பதினால் இம்முறை நீங்கள் தெரிவு செய்யப்படாவிட்டாலும், அடுத்த முறை தெரிவு செய்யவதற்கான வாய்புக்கள் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு இன்றே முந்திக்கொண்டு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்.
‘புலம்பெயர் தமிழரின் தாகம் நாடு கடந்த தமிழீழ தாயகம்’
புதிய தமிழ் புலிகள் (வெளிநாடு)
(ஊர்க்குருவி) (ஆவணி 21, 2009)
0 விமர்சனங்கள்:
Post a Comment