சர்வதேச பொலிஸாரிடம் கே.பி.யை காட்டிக் கொடுத்தவர்
சுவிஸ் நாட்டின் தேசிய தின வைபவம் கடந்த 30ம் திகதி இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதுவர் திருமதி ரூத் ப்ளின்ட் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்த தரப்பினரும் இதன்போது அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த தேசிய தின வைபவம் நடப்பதற்கு முன்பதாக – அதாவது கடந்த 27ம் திகதி டெமில் போரம் எனத் தங்களை இனங்காட்டிக் கொண்டுள்ள புலிகளுக்கு நெருக்கமான சுவிஸ் அமைப்பின் இணைப்பு அதிகாரி எனக் கூறப்படுகின்ற கிருஸ்ணா அம்பலவாணர் என்பவர் சுவிட்ஸர்லாந்து தலைவர் ஹென்ஸ் மர்ஸ_க்கு மகஜர் ஒன்றை அனுப்பி இருந்தார்.
இலங்கை இராணுவத்தினர் 20,000 க்கும் அதிகமான தமிழர்களை பதுங்குக் குழிகளுக்குள் உயருடன் புதைத்து கொலை செய்திருப்பதாகவும் மேலும் 10,000 க்கும் அதிகமானவர்கள் இரகசிய இடங்களில் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்றும் இவர் இந்த மகஜரில் தவறான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதனிடையே சுவிஸ் புலிகளின் வலைப்பின்னலானது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (02) மாலை சுவிஸ் நகரில் எல்பிஸ்கும்லி எனுமிடத்தில் புலிகளுக்கு சார்பான மாநாடொன்றை நடத்தியது. புலிகளின் சட்ட ஆலோசகர் எனக் கூறப்படும் விஸ்வநாதன் உருத்திரகுமார் இந்த மாநாட்டில் முக்கியப் பேச்சாளராகப் பங்கேற்றுள்ளார்.
நாட்டுக்கு வெளியே தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்க முயற்சிக்கும் அமெரிக்க பிரஜையான உருத்திரகுமார் சுவிஸ் வருவதற்கு சுவிஸ் உயர்மட்டம் அனுமதி வழங்கியிருந்தது. பிரபாகரன் உள்ளிட்ட கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவு கூறுவதும் புலிகளின் எதிர்கால திட்டங்களும் எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுவிஸ் நகரில் இடம்பெற்ற இக்கூட்டத்தின் போது புலிகளின் கொடி ஏற்றப்பட்டிருந்தது. அத்துடன் ஏ.கே. 47 ரகத் துப்பாக்கியின் மாதிரி ஒன்று மேடையில் வைக்கப்பட்டு இறந்த புலிகள் நினைவூட்டப்பட்டனர்.
கூண்டோடு அழிக்கப்பட்ட புலிகளை நினைவுகூர்ந்து விட்டு, அங்கிருந்த மக்கள் முன் உரையாற்றிய உருத்திரகுமாரன், நாட்டுக்கு வெளியில் தமிழ் ஈழ இராச்சியத்தை உருவாக்குவது தொடர்பில் ஒருசில நாடுகளிடமிருந்து சாதகமான நிலைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும், தீர்வொன்றுக்கு வரவேண்டுமானால் புலிகளுக்கும் அரசுக்குமிடையில் சமநிலை இருக்க வேண்டும் என்றும் நோர்வே தலையிட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகளின் போது எமது யுத்த பலம் காரணமாக சமநிலை கிடைத்ததாகவும் எனினும் இன்று எமக்கு சமநிலை கிடையாது என்றும் நாங்கள் பலஹீனமான நிலையில் இருக்கின்றோம் என்றும் நாட்டுக்கு வெளியே இராச்சியமொன்றை ஆரம்பிப்பதன் மூலம் எமது இராணுவ பலஹீனங்கள் குறையும் என்றும் 2010ம் வருடமாகும் போது நாங்கள் தமிழீழ மக்களிடையே தேர்தல் ஒன்றை நடாத்துவோம் என்றும் அதன் மூலம் தமிழீழ இராச்சியத்தை உருவாக்க வாய்ப்பு கிட்டுமெனவும் தமிழீழ இராச்சியத்தை உருவாக்குவதன் மூலம் தனியானதொரு ஆட்சிக்கு வழி ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.
எனவே, சுவிஸ் உயர்மட்டத்தினர் இலங்கைக்கு எதிராக செயற்படுவதற்கு புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு இடமளித்துள்ள நிலையில் சுவிட்ஸர்லாந்து அரசு நடுநிலை வகிப்பதாகக் கூற முடியாது என கடந்தவார தென்னிலங்கை ஊடகங்கள் விமர்சனம் செய்திருந்தன.
இதே போன்று அமெரிக்க உலக வர்த்தக மத்திய நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அல்கைதா உறுப்பினர்களை நினைவு கூறுவதற்கு சுவிஸ் அரசு இடமளிக்குமா? ஆக, சுவிஸ் நகரில் நடைபெற்றுள்ள புலிகள் சார்பு மாநாடு குறித்து இலங்கையில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதுவர் என்ன கூறுகிறார்? என்ற கேள்வி கடந்தவார அரசியல் களத்தில் பலமாக எழுப்பப்பட்டிருந்தது.
சுவிஸ் நகரில் வைத்து உருத்திரகுமாரன் கூறிய தனிநாடு குறித்த திட்டத்தின் அடுத்த தரப்பினர் இலங்கைக்குள்ளேயே இருக்கின்றனர் என்பதே கடந்தவார தென்னிலங்கை ஊடகங்களின் பிரதான செய்தியாக இருந்தது.
தான் உள்ளக சுயாட்சி என்ற தொனிப்பொருளில் தீர்வொன்றைத் தயாரித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கடந்தவாரம் வவுனியாவிலுள்ள சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் வைத்துக் கூறியிருந்தார். இத்தீர்வைத் தான் இந்திய அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் முன்வைக்கப் போவதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
2003ம் வருடம் செப்டெம்பர் மாதம் இடைக்கால நிர்வாகத்தைப் புலிகள் இயக்கம் கோரியிருந்தது. இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 4ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யாழ் மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வைத்து தங்களது தீர்வுத்திட்டம் பற்றி கூறியிருந்தனர். “காணி, விவசாயம், கைத்தொழில் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து அதிகாரங்கள் கிட்ட வேண்டும். நிதி சேகரிக்கும் (சர்வதே மற்றும் தேசிய ரீதியில்) தொடர்பிலான அதிகாரங்கள் கிட்ட வேண்டும். வடக்குக் கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்வதற்கு தமிழ் டயஸ்போரா அக்கறை கொண்டுள்ளது. இதற்கென வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்” என சம்பந்தன் கூறியிருந்தார்.
நிதி சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு தங்களது பிழைப்பை நடத்த வேண்டும் என்பதில் கூட்டமைப்பு தொடர்ந்து குறியாக இருந்து வருகிறது. பொதுமக்களின் நிதியை தங்களது சொந்த நிதியைப் போல் பாவித்து தங்களது குடும்பங்களை கரைசேர்ப்பதில் தாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை கூட்டமைப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் இருக்கும் வரையில் இப்டியான எண்ணங்கள் சம்பந்தருக்கு வருவதில் ஆச்சரியமில்லை. புலிகள் இயக்கம் 6 வருடங்களுக்கு முன்பு கூறியதைத்தான் சம்பந்தர் இப்போது கூறியிருக்கிறார் என மேற்படி திட்டம் குறித்து கடந்தவார ஊடகங்கள் விமர்சித்திருந்தன.
தமிழ் கூட்டமைப்பினரின் இத்திட்டம் வெளியாகின்ற சமயத்தில் தற்போதைய புலிகளின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் கே.பி. தனது நாடு இலங்கை அல்ல என்றும் தமிழீழமே தனது நாடு என்றும் இலங்கை அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தமிழர்களது தாயகத்தின் அரசியல் நடவடிக்கைகளை தங்களுக்கு நெருக்கமான அரசியல் சக்திகளே பொறுப்பேற்றுள்ளன என்றும் இந்த சக்தியானது மக்களை ஒன்று திரட்டுவதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கே.பி. மேலும் தெரிவித்திருந்தார்.
கே.பி. கூறும் இந்த அரசியல் சக்தி எதுவென புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல.
ஆக, கே.பி.யின் ஆலோசனையின் பேரில் தமிழ் கூட்டமைப்பினர் தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினர் பல்வேறு ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் கண்nடுத்திருந்தனர்.
இதன் பிரகாரம் கடந்தவாரம் ஹெலிசைட் எனும் சீ 4 ரக வெடி பொருட்கள் 1040 கிலோவும், 6500 டெட்டனேடர்களும், ஏனைய ஆயுதங்கள் பலவும் கண்டெடுக்கப்பட்டன.
இதனிடையே புலிகளிடம் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள இரவு நேர காட்சிகளை வீடியோ படம்பிடிக்கக் கூடிய டிஜிடல் கருவி தொடர்பில் ஆராய்ந்த போது இது கனடா நாட்டின் டுப்நெல் நிறுவனத் தயாரிப்பு என இனங்காணப்பட்டது. இவ்வாறான நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு புலிகள் வசம் இருந்துள்ளமையை ஆராயும்போது புலிகளின் வளர்ச்சியில் வெளிநாடுகளின் செல்வாக்கு குறித்து அறிய முடிகிறது என தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
“இரண்டு இராணுவங்களுக்குத் தேவையான ஆயுதங்களை நாம் இதுவரையில் கண்டெடுத்துள்ளோம். ஒருசில ஆயுதங்கள் எமக்குக் கிடைத்திருக்கவில்லை. எனினும் புலிகளுக்கு அவை கிடைத்திருந்தன” என பாதுகாப்பு தரப்பின் உயர்மட்டங்கள் கூறியிருந்தன.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களிடையே தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதம் என இனங்காணப்பட்டுள்ள தர்மோபெரிக் எனப்படும் ஆர்.பீ,டி. N~டல் ரொக்கட் தாக்குதல் ஆயுதங்கள் 42ம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தாக்குதல் ஆயுதத்தை 2001ம் வருடம் இலங்கை அரசு கொள்வனவு செய்திருந்த போது கனடாவில் இருந்த ஜெயராஜ் என்பவர் இதற்கெதிராக பாரிய பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார்.
2001ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த புலிகள் இயக்கம், தர்மோபெரிக் ஆயுதத்தை இலங்கை அரசு பயன்படுத்தினால் பாரிய விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என அக்காலத்தில் இருந்த ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இலங்கை அரசு தர்மோபெரிக் ஆயுதத்தை கொள்வனவு செய்தபோது பாரிய எதிர்ப்பு காட்டிய ஜெயராஜ் என்பவர், கிபீர், மிக், தாக்குதல் விமானங்கள் மற்றும் மல்ரிபெரல் ரொக்கட் போன்ற ஆயுதங்களால் புலிகளைத் தோற்கடிக்க அரசுக்கு இயலாது எனக் கூறியிருந்தார்.
இதே நேரம் கடந்த வாரம் ஜேர்மனில் இலங்கை அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் லொக்பியர் குழுவுடன் தொடர்புள்ள இரு பெண்கள் இரகசியமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவர்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இரகசியப் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் ஜேர்மன் பிரஜையாவார். வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று அங்குள்ள தகவல்களை அரச சார்பற்ற நிறுவனமொன்றின் துணையுடன் ஜேர்மன் அரசுக்கு வழங்குவதே இவரது நோக்கம் எனக் கூறப்படுகிறது. ஜேர்மன் மன்னிப்பு அமைப்பின் தலைவியான பாபரா லொக்பியரின் செயலாளராகவும் இப்பெண் பணியாற்றி வருவதாகவும் தெரிய வந்திருந்தது.
இலங்கை இராணுவம் புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த சமயத்தில் அதற்கெதிராக ஜேர்மனியில் எதிர்ப்புக் கூட்டங்களை இந்த லொக்பியர் குழு நடாத்தியிருந்தது.
இதே நேரம் நேபாள நாட்டின் கம்யூனிஸக் கட்சியின் தலைவர் (மாஓயிஸ்ட்) பிரச்சன்டா புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு இராணுவத்தைப் பயன்படுத்தியதை விமர்சித்திருந்தார்.
பிரச்சன்டா ஒரு பயங்கரவாதி என்றும் பிரபாகரனைப் போல் அச்சுறுத்தல்களை விடுக்கும் முறைமையைப் பின்பற்றி வருபவர் என்றும் ஊடங்கள் விமர்சித்திருந்த நிலையில், நேபாள அரசு உடனடியாக இராணுவத் தளபதியை சேவையில் இருந்து நீக்க வேண்டும் என பிரச்சன்டா அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கை அரசு இதுவரையில் 152 மி.மீ, 130 மி.மீ, 122 மி.மீ, ரக பீரங்கிகள் 22, மி.மீ. 120 ரக மோட்டார்கள் 54, 6 குழாய்களைக்கொண்ட மல்ரிபெரல்கள் 3, எஸ்.ஏ. 8 ரக விமானத் தாக்குதல் ஏவுகணைகள் 11, பாரிய தாக்குதல்களை நடாத்தக் கூடிய ரிகொய்லன் ஆயுதங்கள் 8, ஏவுகனைகள் 14, மி.மீ. 12 7 ரக விமானத் தாக்குதல் ஆயுதங்கள் 91, ரி 56 ரகத் துப்பாக்கிகள் 1340, ர~;ய தெல~pதனோவ் ஆயுதங்கள் 40, மி.மீ. 9 ரகத் கைத்துப்பாக்கிள் 365, எப்.என்.சி. ஆயுதங்கள் 60 என்பற்றைக் கடந்த வாரம் வரையில் கண்டுபிடித்திருந்தன. இவற்றைத் தவிர இஸ்ரேல் தயாரிப்பான உசி ரக ஆயுதங்கள் 10, 10,000 கிலோ வெடி பொருட்களை கடந்த வாரம் கண்டெடுத்திருந்தது.
இவ்வாறு அமெரிக்க, ர~;ய, இஸ்ரேல், பெல்ஜியம், சீன ஆயுதங்கள் புலிகள் இயக்கத்திற்கு கிடைத்திருந்தன. எனவே இந்த நாடுக்ள தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டால் இந்த ஆயுதங்களை வழங்கியவர்கள் யார் என்பதனைக் கண்டு பிடிக்க இயலும் எனவும் கடந்தவார ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
புலிகள் இயக்கத்திடமிருந்த ஒருசில தகவல் பரிமாற்ற உபகரணங்கள் மற்றும் கடற்புலிகளது படகுகளில் பொருத்தப்பட்டிருந்த ரேடார் கருவிகள் என்பவை பிரித்தானிய மற்றும் ஜப்பான் தயாரிப்புகள் என இனங்காணப்பட்டுள்ளன.
இதனிடையே கடந்த 2ம் 3ம் திகதிகளில் நாட்டுக்கு வெளியே தமிழீழத்தை உருவாக்கும் புலிகளின் ஆலோசனைக் குழு சுவிஸ் நகரில் கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன்போது மூன்று விடயங்களை இலங்கை அரசைக் கொண்டு நிறைவேற்றுமாறு உருத்திரகுமாரன் உள்ளிட்ட புலிள் குழுவினர் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் முக்கிய விடயம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களைப் பார்வையிட வாரந்தோறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதாகும். அதேபோல் புலிகள் இயக்க உறுப்பினர்களை விசாரணை செய்வதை நிறுத்தும் படியும் அவர்கள் கேட்டுள்ளனர்.
அமெரிக்க மேரிலன்ட் பகுதியில் புலிகளின் ஆதரவாளர்கள் சுமார் 30 பேர் இணைந்து கடந்தவாரம் ஐக்கிய நாடுகள் சபையின் சீன தூதுவராலயத்தின் முன்பாகக் கூடி இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கக் கூடாதெனக் கோரிக்கை விடுத்திருந்தனர். சீன நாட்டு ஆயுதங்களால் புலிகள் தோல்வி கண்டனர் என்க கூறி இவர்கள் பதாதைகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கொழும்பிலுள்ள புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்கள் இப்போது மீண்டும பொட்டுஅம்மானின் இணையத் தளத்தை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.
“ஒரு மாதத்திற்கும் கூடுதலான காலமாக எமது குழுவினர் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். எமது வலைப்பின்னலும் ஒளிபரப்பும் தற்போது பாதுகாப்பானதொரு பகுதியில் செயற்படுகிறது” என அந்த இணையத்தளத்தில் காணக் கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் புலிகளின் தற்போதைய தலைவர் எனக் கூறப்படும் கே.பி. எனும் குமரன் பத்மநாதனை கடந்த 5ம் திகதி சர்வதேச பொலிஸ் குழுவொன்று மலேசியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்து தாய்லாந்துக்குக் கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின.
கே.பி.யின. செய்மதி தொலைபேசியே அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்தது எனக் கூறப்படுகிறது.
மலேசியாவில் கோலாலம்பூர் நகரின் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ள கே.பி.யைச் சந்திப்பதற்காக பிரித்தானியாவிலிருந்து புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் இருவர் வந்துள்ளனர். இதன் பின் சற்று நேரம் கழித்து கே.பி.யின். செய்மதி தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. இந்த அழைப்பை செவிமடுத்துள்ள கே.பி. சில நிமிடங்கள் கழித்து வெளியில சென்று வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். அதன் பின் அவர் அங்கு வரவே இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் குழப்பமடைந்த அவரது சகாக்கள் புலிகளது மலேசிய வலைப்பின்னலுக்கு அறிவித்து, கே.பி.யைத் தேடியுள்ளனர்.
கே.பி. இருந்த ஹோட்டல் அறையை ஆராய்ந்து பார்த்தபோது இன்சியுலின் சிலின்ஜர் ஒன்றும் ஒருசில மருந்து வகைகளும் அங்குக் காணப்பட்டுள்ளன. இதனை அறிந்தவுடன் இலங்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவானது விN~ட குழுவொன்றை பெங்கொக் நகருக்கு அனுப்பி தாய் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்றில் கே.பி.யை கொழும்பிற்குக் கொண்டு வந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
கே.பி. கைதாவதற்கு முன்பதாக வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து கிடைத்துள்ள பிரபாகரனின் இரகசிய ஆவணங்களில் இருந்து கே.பி.யின். செய்மதி தொலைபேசியின் இலக்கம் கிடைத்திருந்தது. அவ்வாறே கே.பி. மலேசியாவில் இருப்பதாகவும் தெரியவந்திருந்தது. புலிகள் இயக்கத்தினர் தங்களது செய்மதி தொலைபேசி கட்டமைப்பு தொடர்பில் மலேசிய துரேயா தொலைபேசிகளையே பயன்படுத்தி வந்தனர். இதனால் கே.பி. இருந்த இடத்தை அறிந்து கொள்வதற்கு சர்வதேச பொலிஸாருக்கு இயலுமாக இருந்தது.
புலிகளது 500 டொலர் மிலியன் நிதியை நிர்வகித்து வந்த கே.பி. பிடிபட்ட விடயமானது மாபெரும் அழிவை கொண்டு தரக் கூடிய விடயமாகுமென புலிகளது ஐரோப்பிய இணையத்தளங்கள் தெரிவித்திருந்தன.
இதே நேரம், கே.பியின் எதிரி எனக் கூறப்படும் புலிகளது நோர்வே முகவரான சிவபாலன் எனும் நெடியவன்தான் சர்வதேச பொலிஸாரிடம் கே.பி.யை காட்டிக் கொடுத்தார் என்றொரு சந்தேகம் வலுவாக உருவெடுத்துள்ளது.
கே.பி.யைப் போன்றே குர்தி~; தலைவர் அப்துல்லா ஒச்சலானும் செய்மதி தொலைபேசியைப் பயன்படுத்தியதன் மூலம் அகப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
- டி.எம். பாருக் அசீஸ்
0 விமர்சனங்கள்:
Post a Comment