நம்பியிருந்த நண்பர்களை நயவஞ்சமாக அளித்த நயவஞ்சகன் இதற்குள்… ஓருவன்..!
நடைபோட்டு விளக்குகளாய்
நல்வெளிச்சம் தந்தவர்களை
நரித்தந்திரவலை பின்னி கொன்றவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??
நச்சுப்பாம்பு ஓன்று தங்கள் பக்கம்
நகர்ந்து வருவது தெரியாமல்
நண்பனே பெரிதென்று மகிழ்தவரை
நசுக்கி மண்ணில் புதைத்தவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??
நாற்பக்கமும் பொதுநலமாய் செறிந்திருக்கும்
நல் மனிதர்களை இனங்கண்டு
நற்பயிர்கள் விளையும் மண்ணில்
நஞ்சுனை சோற்றில் பிசைந்து
நடுத்தொண்டைக்குள் அனுப்பியவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??..
நல்விடியல் தேடிகொடுக்க களமிறங்கிய
நாணயம் கொண்ட நமது தோழர்களை
நாலு பேருக்கு தெரியாமல் அன்று
நகரம் முழுதும் துர்நாற்றம் வீச்செய்து
நச்சுப்புகையில் கலக்க வைத்தவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??
நடுங்கிய மக்களை கண்ணில் வாங்காமல்
நற்சோறு தந்தவரை நீவீட்டு வைக்கவில்லை
நடுவான் வரை தீப்பிழம்பு சுவாலைவிட்டு எரிய
நரம்பு புடைக்க உத்தரவு இட்டவனை
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??
நன்றியுள்ள நாய்கூட (வீட்டுப்பிராணி) செய்யாதப்பா
நாழிகை ஒன்றுகூடி பல ஆண்டு ஆனாலும்
நல் மக்களுக்கு நீ அள்ளித்தந்த வேதனை
நன்நீர்சுரக்கும் வரை நாவில் உன் தீயநாமம்
நமக்கு வேண்டாம் மணக்கவும் வேண்டாம்
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??
நாம் கூறுவது தவறென்றோ இல்லை சரியென்றோ
நம்மக்களின் தீர்ப்புக்கு நாம் அடிபணிவோம் என்று
நடைபோட்ட மன்னர்களை நம் கண்முன்னே
நாசகர ஆயுதங்களை கையிலேந்தி அளித்த
நம்பிக்கைதுரோகி ஓருவனை இனம்கண்டு
நல்மனிதர்களே கூறுங்கள் அவன் யாரென்று??
கிளியின் ஓர் கிராமத்து நாயகன்.. வவீதரன்
Athirady
0 விமர்சனங்கள்:
Post a Comment