கொழும்பில் பதுங்கியுள்ள புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பதுங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிரதான நகரங்களில் பதுங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் உத்தியோகபூர்வமாக சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய சாத்தியம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தற்கொலைக் குண்டுதாரிகள் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பல சிரேஸ்ட உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் சாதாரண பொதுமக்களுடன் கலந்து வாழ்வதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு மறைந்து வாழும் விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment