அகதி முகாம்களில் உள்ளோர் தரகர்களுக்கு பணம் கொடுத்தால் வேறு இடங்களுக்குச் செல்லலாம் வன்னி எம்.பி.கிஷோர் வெளிப்படுத்துகிறார்
வவுனியா அகதி முகாம்களில் உள்ள மக்கள் தரகர்களுக்கு பணம் கொடுத்து அங் கிருந்து வேறு இடங்களுக்குச் செல்கின் றனர். அதற்காக அவர்கள் பெருந்தொகை பணத்தைச் செலுத்துகின்றனர்.
தமிழ்த் தேசியக் கட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் இதனை வெளிப்படுத்திஉள்ளார்.
நலன்புரி முகாம்களில் உள்ள இடம் பெயர்ந்த மக்கள்பணத்தைக் கொடுத்தால் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப் படுகின்றனர் .இவ்வாறு மக்கள் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப் படுகின்றமை சில காலமாகவே நடை பெற்று வருகிறது. இது எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு வெளியேறுவதற்கு மக்கள் பெருமளவு பணம் கொடுக்கின்றனர் என வும், ஒரு சிலர் விமான நிலையம் வரை அழைத்து செல்லப்பட்டு வெளிநாடுக ளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் என வும் கிஷோர் பி.பி.ஸிக்கு வழங்கிய பேட் டியில் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக எந்த அரசியல் கட்சி மீதோ, எந்த ஒரு தனிநபர் மீதோ குற்றம் சுமத்தாத கிஷோர், தனக்கு இதுதொடர் பில் உறுதியான நம்பிக்கைக்குரிய தகவல் கள் இருக்கின்றன எனவும், முகாம்களில் இருந்து மக்கள் நோயாளிகள் என்ற போர்வையில் வெளியில் கொண்டு செல்லப்படுகின்றனர் எனவும் கூறினார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, இவ்வாறு மக்கள் தப்பியிருப்பது தொடர்பில் தங்களுக்கு ஆதாரம் இருக்கின்றன எனவும், சிலரை தாங்கள் கைதுசெய்திருக்கின்றனர் எனவும் கூறினார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment