சுந்தரக்குளியல்… ஆகா சுகமான குளியல்.. ஆகா தந்திரத்தால் மக்களை மந்தையென நினைத்தவன் நீ..!!

சுந்தரக்குளியல்… சுகமான குளியல்..
சுடுநீரில் மக்களை தள்ளிவிட்டு
சுற்றம் முழுவதும் காவலாளிகள்
சுத்தமான நன்னீரில் நீந்தும்
சுத்தமற்ற மானிடன் -இவன்
சுந்திரம் வேண்டும் என்று
சுடுமண்ணை கல்பதித்து வடுக்களை
சுமந்த நம் காளைகளை
சுடலைக்கு அனுப்பி விட்டு
சுவை பொங்க நீராடுகின்றாய..:
சுந்தர புருசர்களை தந்திரமாக
சுடு சாம்பலோடு கலக்கவிட்டு
சுமைகளை பாவங்கள் என்று
சுயநலமாக நினைத்தவன் -நீ
சுவடுகளை தேடிப் பார்க்காமல் -நீ
சுக சொர்ப்பனத்தில் மிதந்தவன்..
சுமைதாங்கியாக இருக்க வேண்டிய நீ
சுடுநீரை மக்களின் மீது ஊற்றியே விட்டாய்
சுமை கூடி கனக்கின்றது நெஞ்சம் -காரணம்
சுயநலவாதியாய் மாறியதால் -நீ
சுகம்தேடி காட்டுக்கு வந்த குடாநாட்டு ராஜா
சுந்தர வடிவாய் பல வகையான கணவு கண்டு
சுழித்து விழையாடியவன் -நீ.. அன்று
சுரணையில்லாத வடிவில் நீந்தும் ஓர் விலாங்கு
சுருக்கு பைதனை (கிழவிகள்) சுமந்த மாதுக்களின்
சுருக்குத்தாலி விழும் கழுத்தில் உதைக்க உத்தரவிட்டு
சுகமாக சத்திமில்லாமல் கரும்புலிகளுடன்
சுழியோடி நீராடியவன் -நீ.. மறக்குமா எங்கள் நெஞ்சம்
சுதந்திரம் வாங்கி தருவாயென்று சொர்ப்பனம் கண்ட
சுத்தமான மக்களிடம்.. சுயசலமாய் பணம் சேர்த்த -பினாமிகளே
சத்தம் போட்டு நீங்கள் தரும் இலக்கண விளக்கம்?????
சலசலப்பு இல்லாமல் காத்திருக்கிறோம் பதில் கிடைக்குமா???
கிளியின் ஓர் கிராமத்து நாயகன்.. வவீதரன்
அதிரடி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment