கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட கே.பி. இரகசியமான முறையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்-- உறுதியான தகவல்கள் வெளியாகின
மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட கே.பி. தற்போது இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் கீழ் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருவதாக இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வப் பிரிவின் இரகசியத் தகவலொன்று
Lanka News Web இணையத்தளத்திற்கு சற்று முன்னர் தெரியக்கிடைத்தது.
கே.பி. மலேசியாவிலிருந்து கடத்தப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னரே, அவர் கைதுசெய்யப்பட்ட செய்தியை இலங்கை அரசாங்கம் அறிவித்தது என்ற செய்தியையும் அந்த நம்பகரமான தகவல் உறுதிப்படுத்தியது.
கே.பி. கடத்தப்பட்டு, கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், சற்றுமுன்னரே எமக்கு அந்தத் தகவலை முழுமையாக உறுதிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது.
Lanka News Web






0 விமர்சனங்கள்:
Post a Comment