சரத்பொன்சேகாவை நிராகரிக்குமாறு ரூபவாஹினி மற்றும் ஐ.ரி.என். தொலைக்காட்சி சேவைகளும் உத்தரவு
தேசிய ரூபவாஹினி மற்றும் ஐ.ரி.என். சுயாதீன ஆகிய தொலைக்காட்சி சேவைகளில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் படங்களுடன் ஒளிபரப்பான பாடல்கள் மேலிடத்திலிருந்து உத்தரவை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுடனான போரை வெற்றிகொண்டதை அடுத்து சிங்கள மக்களினால் மாபெரும் வீரராக கொண்டாடப்பட்டு வந்த சரத் பொன்சேகாவின் காட்சிகள் அடங்கிய பாடல்கள் அரசாங்க ஊடகங்களில் ஒளிபரப்பாகிவந்தன.
கடந்த காலங்களில் ஒருநாளைக்கு இரண்டு, மூன்று முறை ஒளிபரப்பப்பட்ட பாடல்கள் தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனந்தக் கல்லூரியின் பழைய
மாணவர் ஒன்றுகூடலின் போது ஐ.ரி.என். தொலைக்காட்சியின் சுதர்மன் ரதலியகொட இதனை சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஐ.ரி.என். தொலைக்காட்சியின் சுதர்மன் ரதலியகொட இதுகுறித்து சக பாடசாலை நண்பர்களிடம் கலந்துரையாடிய போது சரத் பொன்சேகா தொடர்பான மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவும் ஆனந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்ற போதிலும், அவர் தற்போது ஜனாதிபதியின் வெறுப்பிற்கு ஆளாகியிருப்பதாகவும், இந்த நிலையில் சரத் பொன்சேகாவுடனான தொடர்புகள் தற்போது அற்றுப்போயுள்ளதாகவும் சுதர்மன் இதன்போது கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் இலத்திரனியல் ஊடகங்களுக்கு மட்டுமன்றி அரசாங்க அச்சு ஊடக அமைப்பான லேக்ஹவுஸ் நிறுவத்திற்கும் சரத் பொன்சேகாவிற்கு சார்பான செய்திகளை வெளியிடுவதற்கு உள்ளகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment