ருத்ரகுமார் உள்ளிட்ட முக்கியர்களை நாடுகடத்த முனைப்புக்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவு தகவல்
விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகரும், நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினருமான சட்டத்தரணி ருத்ரகுமார் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் ஞானகோன் சகோரர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான இலங்கைப் புலனாய்வுத் துறையினர் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதனடிப்படையில், ருத்ரகுமார் வசிப்பதாக சந்தேகிக்கப்படும் நாடுகளிடம் அவரைக் கைதுசெய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரிவருவதாக புலனாய்வுத் துறையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ருத்ரகுமாரை எவ்வாறு கைதுசெய்வது என்பதே குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தற்போதைய கேள்வியாக உள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கே.பி.யிடம் பெற்றுக்கொண்ட தகவல்களுக்கமைய ருத்ரகுமார் உள்ளிட்டோரை கைதுசெய்ய திட்டமிட்டு வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன. எனினும், இந்த விடயம் இலகுவானதல்லவென புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment