தலைமைக்குத் தகுதியுடைய அம்மானின் கருத்துக்குச் செவிசாய்க்காதது ஏன்?
அறிக்கை -
இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையிலமைந்தவையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வினா
- ஏற்கனவே அரசிற்கும் புலிகளுக்கும் பல பேச்சுவார்த்தைகளும் முடிவுகளும் ஒப்புதல் அளிக்கப்பட்டும் அதை புலிகள் மீறியதும் கைவிட்டு மீண்டும் சர்வாதிகாரப் போக்கிற்குச் சென்று, இத்தனை இழப்பிற்குப்பின் ஜனநாயகத்திற்குப் போகின்றோம் என்றால், ஏன்இந்த முப்பது வருட இழப்பு? மேலும் ஜனநாயக கொள்கையில் புலிகளிடம் இருந்து பிரிந்த கருணாவை ஏன் துரொகி என்று புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டது? அப்படிப்பார்க்கும் போது தற்போது புலிகள் தேசத் துரோகிகளாகவும், மக்களை வைத்துப் பந்தாடிய நாசதாரிகளாகவும் அல்லவா இருக்கின்றனர். தமிழ்ச்செல்வன் வெளிநாடுகளுக்குப் பேச்சுவார்த்தைக்கு வரும்போது கள்ளக்கடவுச்சீட்டிலா, தமிழீழக்கடவுச்சீட்டிலா அல்லது இலங்கைக்கடவுச்சீட்டிலா பிரயாணஞ்செய்தார்?… அப்படியென்றால் எமது தேசியம் எது??? … எனவே தேசியத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் பார்க்க எமக்கு இலங்கை அரசிடம் இருந்து சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவே முக்கியம் தேசியத்தைப்பற்றி பிறகுபார்ப்போம். முதலில் எமக்கு அரசிடம் இருந்து உரிமைகள் சிங்களவர்களைப்போல் கிடைக்க ஜனநாயக ரீதியில் போராடுகின்ற அமைப்புக்களுக்கு புலிகள் ஆதரவு வழங்கட்டும். தற்போதைய ஆளுங்கட்சியில் எதிர்க்கட்சியினர் இணையும் செயற்பாடு, ஜனநாயகப்போக்கிற்குச் செல்ல எத்தணிக்கும் புலிகளுக்கு ஒருபாடமாக எடுத்துக்கொள்ளலாம்.
அறிக்கை -
1. 1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும்இ 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும்இ பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும்இ 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய
தமிழர் ஓர் தேசிய இனம்
வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்
ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை
போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது
தமிழர்களின் வினா
- மக்களை ஒன்றிணைப்பது இருக்கட்டும், முதலில் தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் தலைவர்களையும் தமிழ் அமைப்புக்களையும் ஒன்றிணையுங்கள். மக்கள் தானாகவே இணைவார்கள். அப்போது மேற்குறிப்பிட்ட உரிமைகளில் குறைபாடு எங்கிருக்கின்றதோ அங்கு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
அறிக்கை -
2. 2001ம் ஆண்டு, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத்தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.
தமிழர்களின் வினா
- தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏன் உருவாகவேண்டும்? அப்படி ஒரு தேசிய கூட்டமைப்பு உருவாகியபின்னும் வேறு கட்சிகள் காணப்படுவதற்குக்காரணம்??? அதே கூட்டமைப்புடன் நாடுகடந்த தமிழீழ செயற்பாட்டின் தலைமை செயற்படாது, உருத்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது ஏன்??? பிரபாகரனுக்கடுத்த தலைமைக்குத் தகுதியுடைய அம்மானின் கருத்துக்குச்செவிசாய்க்காதது ஏன்? மீண்டும் மீண்டும் தவறின்மேல் தவறுசெய்து மக்களுக்கு அழிவினை ஏற்படுத்துவதற்குப்பதிலாக அரசுடன் ஒத்துபோய் மக்களைக்காக்கும் அம்மானுடன் ஒரு சமரசம் மேற்கொள்ளாதது ஏன்??? தன்னுடைய பிரிவின்போது, புலிகள் அவருக்கு எதிராக போர்தொடுத்த போது கூட, மோதலுக்கு இடங்கொடுத்து தனது போராளிகளையும், புலிகளின் போராளிகளையும் இழக்காது விலகிக்கொண்டதிலிருந்து பலவிடயங்கள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதே!!! இதைக்கூட ஊகிக்காத தாங்கள் எப்படி எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றீர்கள்???
அறிக்கை -
3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.
தமிழர்களின் வினா -
இதில் உங்களை நிறுத்தி, வரலாற்றைப்புகுத்த விரும்புகின்றேன்… சிங்கள தேசம் என்ற வார்த்தை தவறானது… சிங்களதேசம் என்ற ஒன்று இல்லவே இல்லை… இலங்கை தமிழர்களுக்குச் சொந்தம் அது முழுதும் அவர்களுடைய தேசம்… தமிழர்களாகிய நாம்தான் விஜயனுக்கு தங்க இடமும் கொடுத்து அரசாட்சியையும் கொடுத்தோம்… நீங்களே வெளியுலகிற்கு தவறான வரலாற்கைக் கொடுக்காதீர்கள்.! ஜனநாயகத்தின்பின் ஏற்படுத்தப்பட்ட தவறினால்தான் எமக்குக்கிடைக்க வேண்டிய உரிமையில் குறைவைஏற்படுத்த அன்றைய சிங்கள ஆட்சியாளர்கள் முடிவெடுத்தனர். அதன்விலைவே இலங்கையின் யாப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளது அவற்றைத்திருத்தினால் மட்டும் போதும், தமிழீழம் தானாகவே கிடைத்துவிடும்.
அறிக்கை
- 4. உலகனைத்தும் பரவி வாழும் ஈழத்தமிழர் மத்தியில் பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப் பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும்; தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.
தமிழர்களின் வினா
- பிரித்தானிய அரசபரம்பரைக்கே கல்விகற்பித்த தமிழர்கள்பரம்பரைநாம், எம்மிடம் இல்லாத அறிவா பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனத்திடம் இருக்கப்போகின்றது? நோர்வே ஆதரவு வழங்கியும் சமாதானத்திற்கு ஒத்துக்கொள்ளாத தலைவனைக் கொண்ட தாங்களா இன்னொருவனை நம்பி தமிழீழத்தை அமைக்கப்போகின்றீர்கள்… வெளிநாட்டு அரசுகளுக்கே அரசியல் கற்பிக்கும் தமிழர்களை விட்டு புதிதாக எங்கு போகின்றீர்கள் தமிழீழத்தை அமைப்பதற்கு???… 30 வருட தமிழீழத்திற்கு போராட்ட முறையினை மாற்றச்சொல்லி கருணா அறிவித்தும் செவிசாய்க்காத தாங்கள் இன்னொருவரை நம்புவீர்கள்!!!…
அறிக்கை
- 5. ஈழத்தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும்இ நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.
தமிழர்களின் வினா
- உலகத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் என்கின்றீர்கள் அதில் தங்கள் அமைப்பின் பாகங்கள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கின்றன… வேறு பொதுத் தமிழ் அமைப்புக்களின் பெயர்கள் எங்கே??? இங்கே நெடுமாறன் எதற்கு??? வைகோ எதற்கு??? அவர்கள் இந்திய மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளட்டும் எமக்கு ஆதரவுதரட்டும் அது போதும்…
அறிக்கை
- 6. அரசுகளுடனும், பல்அரசுகள்சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
தமிழர்களின் வினா
- இத்தனைகாலமும் ஒரு தனி அரசாட்சிபுரியும் இலங்கை அரசுடனே ஒத்துப்போக முடியாதவர்கள், பல் அரசு சார்ந்த நிறுவனங்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதமுடியும் என்பதனை நாம் எப்படி நம்பமுடியும்???
அறிக்கை
- 7. உலகெங்கும் பரவிவாழும் ஈழத்தமிழரின் சமூகஇ பொருண்மியஇ பண்பாட்டு மேம்பாடுகளைத்
துரிதப்படுத்தல்.
தமிழர்களின் வினா
- இத்தனைகாலமும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் இல்லாமல் இல்லை, திடீரென துரிதப்படுத்த எத்தணிப்பதிலும் பார்க்க ஏற்கனவே கலை கலாசார நிகழ்வுகள் தங்கள் அமைப்பையுந்தாண்டி நடந்துகொண்டுதான் இருக்கின்றது அவற்றிற்கு ஆதரவுகொடுங்கள் அது தானாகவே வழரும்… தங்களையும் மீறி பிற அமைப்புக்களில் இருக்கும் தமிழர்களையும் பாராட்டுங்கள் பரிசு வழங்குங்கள் கௌரவியுங்கள் தமிழர்களின் பொருண்மிய மேம்பாட்டு தானாக உயரும்.
அறிக்கை
- தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கெதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லீம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.
தமிழர்களின் வினா
- தமிழீழப் பகுதியில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியமை இன்னமும் முஸ்லீம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கின்றது, அமைச்சர் முரளிதரன் அவர்கள் முஸ்லீம் மக்களுக்கு தகுந்த அதிகாரங்களை வழங்கி வருகின்றார்… நீங்கள் திட்டம் போடுகின்றீர்கள்… எது சாத்தியமானது? திட்டமா அல்லது செயலா???
அறிக்கை
- 9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன் பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.
இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக பன்னாட்டு அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.
தமிழர்களின் வினா-
உள்நாட்டில் வெளிநாட்டில் அரசு அரசாசார்பற்ற அமைப்புக்களுடன் நேரடித்தொடர்பு முதலில் பலப்படவேண்டும்.
அறிக்கை
- இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத்தழிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திர வதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற் கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.
தமிழர்களின் வினா
- புலிகளுக்கு ஆதரவானவர்களைத்தவிர முன்னைய புலிகள் உறுப்பினர்களும் மற்றைய தமிழர்களும் இலங்கையில் தற்போது நலன்களை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்… விரைவில் அனைத்து இடத்திலும் பதுங்கியிருக்கும் புலிகள் செயலிழக்கும்வரை தமிழர்களை அரசு மீழக்குடியேற்றுவதை மேற்கொள்ளாது என்பது சாதாரண மக்களாலே உணரமுடியும்போது மீண்டும் மீண்டும் மேற்குறிப்பிடுவது போல், சிங்கள அரசு என்று இனிசுட்டிக்காட்டுவது பொருத்தமற்றது என்று எண்ணத்தோன்றுகின்றது…காரணம் அரசில் இருக்கும் தமிழர்கள் சிங்களவர்கள் அல்லவே!!! மேலும் பல அமைச்சர்கள் எமது தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும். அதிகாரமுடைய அமைச்சுக்கள் தமிழர்களின் கரங்களில் வரவேண்டும் அதற்காக புலிகளின் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.
அறிக்கை
- தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள அமைப்புகளுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச் செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவியரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உபகுழுக்களை கொண்டியங்கும். இச் செயற்பாட்டுக்குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.
இச் செயற்பாட்டுக்குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா) பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா) பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்) கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா) வைத்தியக்கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர்(அமெரிக்கா) திரு செல்வா சிவராசா(அவுஸ்திரேலியா) திரு போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) ஆகியோர் இவ் ஆலோசனைக்குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.
தமிழர்களின் வினா
- படித்தவர்கள் மட்டும் அறிவாளிகள் என்றால்!, முன்னைய தமிழரசுக்கட்சியில் இருந்தவர்களும், தற்போதுதமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்களும் யார்? இதற்கும்மேலாக பிரபாகரனின் கல்வி தரம் என்ன???
அறிக்கை
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.
இக்குழு 2009ம் ஆணடு மார்கழி மாதம் 31ம்; திகதி வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக் குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும். இத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org
தமிழர்களின் வினா
- இந்த மின்னஞ்சல் செயலுடையாதா இதனை நிர்வகிப்பதற்கு யாரும் நியமிக்கப்பட்டுள்ளனரா? இம்மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பப்படுமா
???
அம்மான் இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment