படையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானது என்கிறது அரசாங்கம்
இலங்கை அரசாங்கப் படையினர் தமிழ் மக்களை சித்திரவதை செய்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இராணுவப் படைவீரர்கள் போன்று சீருடை அணிந்த நபர்கள் இரண்டு பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இயங்கி வரும் செனல் ‐ 4 தொலைக்காட்சி சேவை இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது.
நிர்வாண நிலையில் கண்கள் கட்டப்பட்ட இரண்டு பேரை இராணுவ சீருடையணிந்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலை செய்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்த காட்சி கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் ஒளிப்பதிவு செய்ததாக குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராக மட்டுமே யுத்தம் புரிந்ததாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மட்டுமே படையினர் முன்னெடுத்ததாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
அநேகமான ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளையும், வீடியோக் காட்சிகளையும் அரசாங்கத்திற்கு எதிராக வெளியிட்டு வருவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment