காந்தி தங்கியிருந்த வீட்டை கொள்ளுப் பேத்தி வாங்கத் திட்டம்
தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீட்டை, அவருடைய கொள்ளுப் பேத்தி வாங்கத் திட்டமிட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவுக்கு மகாத்மா காந்தி சென்றிருந்த போது, ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆர்சர்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில்தான் தங்கியிருந்தார். இதை, காந்தியின் நம்பிக்கைக்குரியவரும், கட்டடக் கலை நிபுணருமான ஹெர்மன் ஹெலன்பெர்க் என்பவர் வடிவமைத்திருந்தார்.
இந்த வீட்டில்தான் 1908 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் காந்தியும் நான்சிபோல் என்பவரும் தங்கியிருந்தனர். இப்போது, அந்த வீட்டை விற்பனை செய்ய நான்சிபோல் முடிவு செய்துள்ளார்.
நான்சிபோல், கேப்டவுன் நகருக்குக் குடிபெயரத் திட்டமிட்டுள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளார். வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த வீட்டை வாங்க யாருமே முன்வரவில்லை என நான்சிபோல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் காந்திஜியின் கொள்ளுப் பேத்தி கீர்த்தி மேனன் இந்த வீட்டை வாங்க முடிவு செய்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் காந்திஜி தங்கியிருந்த வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒன்றரை கோடி ரூபாவுக்கு இந்த வீடு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வீட்டை வாங்கி மேம்படுத்தி நினைவுச் சின்னமாகப் பாதுகாக்க கீர்த்தி மேனன் திட்டமிட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment