110 இலட்சம் ரூபா வரை இலஞ்சம் கொடுத்து இதுவரை அகதிமுகாம்களிலிருந்து 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்?
வவுனியாப் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த வன்னிப் பிராந்தியத்தைச் சேர்ந்த அகதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் தற்போது அரசியல் கட்சிகளாக செயற்படும் அரச சார்பு முன்னாள் போராளிக்குழுக்களுக்கு பெருந்தொகை பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"லக்பிம நியூஸ்' பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
முகாம்களை விட்டு வெளியேற ரூபா 1 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபா வரை அகதிகள் இலஞ்சமாக கொடுத்ததாக ஞாயிற்றுக் கிழமை இப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது இடம்பெறுவதாக கூறப்படுவதை தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி.சிவநாதன் கிஷோர் உறுதிப்படுத்தியாக எக்ஸ்பிரஸ் நியூஸ் சேவை நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.
இதேவேளை, கடந்த இரு மாதங்களில் பலர் தப்பிச்சென்றுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஞாயிறு ஐலன்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஆனால், அவர் எண்ணிக்கை தொடர்பாகக் குறிப்பிட்டிருக்கவில்லை.
இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் வவுனியா மாவட்ட பொலிஸாரை உத்தியோகபூர்வமாக கேட்டுள்ளார். ஏனெனில், தப்பியோடியவர்கள் பலரில் புலி உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் இவர்கள் மக்கள் குடியிருப்புகளில் ஊடுருவியிருக்கலாமெனவும் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் தமிழ் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க ஊடுருவியிருக்கலாமெனவும் இதனால், விசா ரணைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அகதி முகாம்களிலிருந்து விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவிக்க சில சக்திகள் முன்வந்தமை குறித்து பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்ததாக ஞாயிறு ஐலன்ட் பத்திரிகை அவரை மேற்கோள்காட்டியிருந்தது. தப்பிச் சென்றோரில் சிலர் அந்தப் பகுதியிலுள்ள இராணுவப் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பதன் மூலம் தப்பிச்சென்றுள்ளனர். அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாக எக்ஸ்பிரஸ் நியூஸ் தெரிவித்தது.
இதேவேளை, அகதிகள் மத்தியில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, கடற்படை அதிகாரி திகம்பதன ஆகியோர் படுகொலைகளுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணை திணைக்கள குழுவால் வேதநாயகம் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர இந்து பத்திரிகைக்கு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார். புலி உறுப்பினர்களில் ஒருவர் வழங்கிய தகவலின் பேரில் அவர் விசாரிக்கப்படுவதாக ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார்.
இன்னமும் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்திருந்தார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment