விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான கப்பல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்குச் சொந்தமான, குறித்த கப்பல்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் மாற்றப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிட்டியுள்ளன.
குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணகளின் போது இந்த தகவல்கள் திரட்டப்பட்டதாக திவயின செய்தித் தாள் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சில கப்பல்கள் இன்னமும் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பல்கள் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment