தமிழர்களை ஏலம் போடும் தமிழ்த்தலைமைகளும் ஊடகங்களும் – அருகன்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
ஈழம் பெற்றெடுத்த பல தவப்புதல்வர்கள் மாபெரும் சாதனைகளை உலகளாவிய ரீதியில் மேற்கொள்கின்றபோது, தாயின் பெயரைச் சொல்லி தம்மைத்திடப்படுத்துவோர்கள் அவர்களின் பெருமையினையிட்டு அடிவயிறு இனிக்காதோ??? மாறாக, அடிவயிறு எரியுமேயானால் அவர்கள் எப்படி ஈழத்தாயின் தலைவர்களாக இருக்கமுடியும்? அவர்கள் எப்படி தாயின் சார்பில் தனையன்களை காக்கமுடியும்? தாயின் விடுதலைக்காக போராடி மடிந்தோரை இனி எப்படி நினைக்கப்போகின்றோம்? தானைத்தலைவனாக இன்றுவரை ஏற்றோனின் பின்னடைவை மறைத்து சம்மந்தமற்றோரை தலைவனாக்குவதா??? காலங் காலமாகத் திட்டமிட்டு போராட்டத்தில் வித்திட்ட தனையன்மார் இன்னும் உயிரோடு இருக்கும்போது, தூரதேசத்தில் தூபம்போட்டோரை முன்வைப்பதா?
தலைவன் தேவைப்படும்போது தொண்டனாகக்கூட மாறவேண்டும். தலைமறைவாக இருந்து தைரியம் தருவோரை எப்படி தலைவராக ஏற்பது? அடிமட்டத்தில் இருக்கும் பிரஜைகூட தலைவனைச்சந்திப்பதற்கு வழிசமைக்கவேண்டுமேயொழிய, தகுதிவாய்ந்தோர் அவரைச்சந்திப்பதற்கு இரகசிய வழிதேடக்கூடாது? இப்போது செல்லுங்கள் தமிழ் ஈழத் தலைவர் யார்? தமிழர்களின் விடிவிற்கு வழிஎன்ன??? கடந்த காலத்தினைத்திரும்பிப்பார்க்கவேண்டும் அப்போதுதான் வருங்காலத்தில் திடமாகக்கால் பதிக்கமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் மாத்தையாவின் நிலை என்னவாச்சு? அதற்கும்முன் ஒபெரேதேவனின் வரலாறு என்ன? அதற்கும்பின் கிட்டுவின் சதிவலைஎன்ன??? தற்போது தமிழ்ச்செல்வனின் மரணம் எத்தகையது?? கருணாவின் பிரிவிற்குக் காரணம் என்ன?
டக்ளஸ் மற்றும் பின்னாள் தமிழ் அரசியல் கட்சிகளான முன்னைய போராட்டக்குழக்களுக்கு நிகழ்ந்ததென்ன??? போராட்டமே இல்லாது முஸ்லீம் மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான காரணம்தான் என்ன??? உலகத்தமிழர்களின் நாடுதழுவிய அரசு அமைக்கும் திட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் மக்கள் நலன்விரும்பிகள் இல்லாது ஒரு கூட்டுக்குள் 1500 (அவர்களின் அறிக்கை) பேருடன் பிரகண்டனம் மேற்கொள்வது முறையா??? ஜனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய விடையத்தை மனணமுறையில் மண்டைகளுவப்பட்டவகையில் தெரிவுசெய்வதோடு ஒருபக்கச்சார்பில் தான்தோன்றித் தனமாக இயங்குவது முறையோ??? இதற்கிடையில், இறுதிக்கட்டப்போரில்ல் நடந்த தகவல் அனைத்தும் அறிந்திருந்தும் பலர் அவற்றை மறைத்து நடைமுறைகளை மேற்கொள்வதேனோ???
நல்லவேளை கருணா அவர்கள் முன்பே இதிலிருந்து விலகிவிட்டார் இல்லாவிட்டால் புலிகளின் தோல்விக்கு அவரே காரணம் என்று முடிவுகட்டியிருப்பர் ஒருதலைப்பட்சமானோர். காரணம் போராட்டத்தில் அவரின் பங்களிப்பு எத்தகையது என்பதும், அவரின் ஆலோசனைகள் எத்தனை வலுவானது என்பதனையும் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களும், ஒருசில மக்களும் அறிவர்கள். அதேபோன்று அருகனின் 2006ம்ஆண்டு வெளியிடப்பட்ட “மலருமா தமிழீழம்” என்ற நாவலின் அறிவுறுத்தல்களை புலிகளின் ஆதரவாளராக புலத்தில் செயற்பட்டவர்கள் உதார்சீனப்படுத்தியதன் விளைவு என்னவாச்சு? டக்ளஸ் மேற்கொள்ளும் நன்முயற்சிகள் ஏன் புலிகளின் ஆதரவாக செயற்படும் தளங்களில் சிறப்பாக வெளிவருவதில்லை? நாடுதளுவிய தமிழீழம் ஞனநாயகமுறையென்றால் டக்ளஸ் மேற்கொள்வது என்ன? 1500 போருடன் (கணிப்புமட்டுமே) அமைக்கப்பட்ட 02-08-2009ல் நாடுகடந்த தமிழீழ பிரகண்டனம் ஜனநாயகம் என்றால், பலலெட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாட்டின்முதல்மனிதனால் தெரிவுசெய்யப்படும் ஒரு அமைச்சரை தகாதமுறையில் விமர்சிப்பது சரியானதோ??? இந்த அமைச்சின் செயற்திட்டத்திற்கு தமிழர்களுக்காகப்போராடும் எந்த அமைப்பு ஆதரவு வழங்கியது?
இந்த அமைச்சின் அமைச்சரான அம்மான் என்று அழைக்கப்படும் கருணா அவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளை வெளிக்காட்டாதது ஏன்??? புலிகளுக்கு ஆதரவாகச்செயற்பட்ட அரச அதிபருக்கு விளமக்கமறியல் என்றால் அதற்கும்மேலாக அமைச்சில் இருப்போர் தமது நகர்வினை தவறாக நகர்த்தி பாதிக்கப்பட்டால் எமக்காக ஆதரவுதர யாரிருப்பார் என்னு கருதியதுண்டா?? தற்போது அரசின் அதிகாரங்களை எமக்காகப்பரிந்து பேசக்கூடிய, போராட்டத்தில் ஈடுப்பட்ட பெரும் சாதனைகளில் முன்நின்ற, மற்றும் மக்கள்சார்பில் ஆரம்பத்தில் இருந்து பேச்சுக்களை நடாத்திய ஒரு மூத்த உறுப்பினரின் சார்பில் ஒருவர் இருக்கிறார் என்றால் அது புலிகளை ஆதரிக்கும் மக்களுக்குக்கூடப் பெருமையே!!! கருணாவின் பிரிவு தமக்கு இழப்பில்லை என்று புலிகளின் தலைவர் அறிவித்ததை இப்போது நினைவுகூற விரும்புகின்றேன்.
புலிகளின் தலைமை விட்ட தவறினை தற்போதைய அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழர்களுக்கு விடமாட்டார் என்று நம்புகின்றேன். அவரின் ஆதரவாளர்கள் கிழக்கு வடக்கு என்று தளங்களில் பிரிவு காட்டுவது மீண்டும் மீண்டும் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்துவதாக அமையுமே தவிர உரிமைகள் கிடைக்கப் போவதில்லை. மேலும் அமைச்சுப்பதவி என்றாலும் அது ஆளுமைக்கும் அதிகாரத்திற்கும் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சல்ல, வடக்குப்பிரதேசத்தில் முக்கிய பொறுப்புக்கு சிங்களவர்களை அரசு தெரியும்போது அதை எதிர்த்து குரல்கொடுக்கக்கூடிய அதிகாரம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கவில்லை என்பதும், தமிழர்களுக்கென இராணுவ உயர் அதிகாரிகள் இல்லாமையும், அரச சார்பற்ற பல அமைப்புகள் இருந்தும் அதற்கு தமிழ் அரச அதிகாரிகள் தகுந்த ஆதரவு வழங்காமையும் தமக்குச் சாதகமான அமைப்புகளை மட்டும் உயர்த்திப் போசுவதும் புலிகள் செய்த அதே தவறான போக்கில் காணப்படுகின்றது. அம்மான் என்ற அழைப்பு, புலிகள் அமைப்பில் மதிப்பினை கொடுக்கின்றபோதிலும் அது நிலைத்து நின்றது ஒருவருக்கே என்றால் அது தற்போதைய அமைச்சர் வி.முரளிதரன் அவர்களுக்கே!!!
அரசியல் சதுரங்கத்தை மக்கள் எல்லாரும் வெளிப்படையாக அறியமுடியும் என்றால், எமக்குக்கிடைக்கவேண்டிய உரிமைகள் கானல்ரீராகத்தான் போகும் என்பதில் ஐயமில்லை. அரசியல் அறிவென்பது “தூரநோக்கில் பார்வை செல்லும்போது, பாதங்கள் யதார்த்தத்தை நோக்கி பக்குவமாக எடுத்துவைக்கபடுதல்” ஆகும். புல கழுகுகள் பாதங்களைக்கொத்த நினைக்கின்றது அது ஒருதாய்வயிற்றில் பிறந்த புதல்வர்களால் ஏற்படும்போது மிகுந்த வேதனை தருகின்றது. புலிகளின் பெயரைசெல்லி புலத்தில் தம்மை திடப்படுத்தியவரைப்போன்று கருணாவின் பெயரைச்சொல்லி தம்மைத்திடப்படுத்துவோரையும், பிரிவுகளை ஏற்படுத்துவோரையும் கருணா அவர்கள் கண்காணித்து அதனைக் கழைவதில் முன்நிற்கவேண்டும். இல்லாவிட்டால் கட்டப்படுகின்ற தமிழீழத்தில் பாரிய விரிசல்விழுந்து அதில் நீதியும் மனித நேயமும் தங்காது கண்சிந்தோடிவிடும். புலத்தில் இருந்து இயங்குகின்ற இணையங்களுக்கு வருவோம். புலிகளுக்கு ஆதரவான இணையம் கருணாவிற்கு ஆதரவான இணையம், டக்ளசுக்கு ஆதரவான இணையம், தற்போது அரசியல் குழுவாக மாறியிருக்கும் மற்றைய தமிழ் அமைப்புக்களுக்கு ஆதரவான தளங்கள்… இப்படி பல இருக்கும்போது, பொது நிலையில் இயங்குகின்ற ஊடகம் எது???
தற்போது, புலிகள் அமைப்பின் சிதைவில் பலர் குளிர் காய்கின்றனர்… மேலும் புலிகளின் தலைமைக்குப் பிளவுகள் ஏற்பட்டு அதை வெளிக்காட்ட முடியாமல் பலர் பொறுத்திருக்கின்றனர் மீண்டும் எழுந்து வெளிப்படும் வரை… பலத்த ஆதரவான தளங்களில் பத்மநாபனால் ஏற்படுத்தப்பட்ட(02-08-2009) ஞயிறுதினக்கூட்ட முடிவுகள்பற்றி வெளிவராததற்குக் காரணம் யாது??? மேலும் புலிகளின் ஆதரவான தளப் பக்கங்கள் மேன்மேலும் புதிய தகவல்களை தொடராதது ஏன்??? இக்கூட்டத்திற்கு அழைப்பு யாருக்குவிடப்பட்டது? இக்கூட்டத்தில் யார் யார் பிரதி நிதித்துவப் படுத்தப்பட்டனர்? இக்குழுவுடன் மக்கள் தொடர்பு கொள்ள வழிஎன்ன? உண்மை நிலையினை அறிந்துகொள்ள கருவிகள் என்ன???
மாறாக கருணாவைப்பற்றி தவறாகவும், பிள்ளையானைப்பற்றித்தவறாகவும் ஆளுக்கு ஆள் மாறி எழுதுவது ஏன்? கருணாவிற்கு முன்னர் பிள்ளையான் பதவியில் இருப்பவர் ஒப்பீட்டளவில் யாரின் சேவை முன்னோக்கியுள்ளது? டக்ளஸ் பலவருடங்களாக அரசில் அங்கம்வகிக்கின்றார் அவர் வடக்கினை ஒருபிடிபிடிக்கமுனைகின்றார் எனினும் அவரின் வேகத்திலும் கருணாவின் வேகம் கிழக்கில் அதிகரிப்பதையிட்டு அவரின் ஆதரவாளர்கள் அச்சப்படுவதும் தகாதது… வேண்டுமென்றால் டக்ளஸ் தனது வேகத்தையும் அரசியலையும் அதிகரிக்கலாமே!!!
கருணாவின் ஆதரவாளர்கள் கருணாவின் சிறப்புகளை எடுத்துச்சொல்லட்டும். டக்ளஸின் ஆதரவாளர்கள் அவரின் சிறப்பினை எடுத்துச் சொல்லட்டும். பொது ஊடகங்கள் இருவரின் சிறப்புகளையும் இருவரின் தவறுகளையும் எடுத்துச் சொல்லட்டும். இதற்கிடையில் புலிகளின் பெயரைச்சொல்லி செயற்படும் தற்போதைய நகர்வினையும் எடுத்துக்கூறட்டும். அப்போது, மக்கள் எது சரி எது தவறு என்பதனையும், யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதனையும் யாரை நம்ப வேண்டும் என்பதனையும் புரிந்து கொள்வார்கள். மேலும் என்மனதில் புண்பட்ட செய்தி ஒன்றைச் சொல்கின்றேன். புலிகளின் சிதைவினை மறைத்து மக்களுக்கு தகுந்த உண்மைகளைக் கொடுக்காமல் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆதரவாளர்கள், தமது இணையங்களில் தலைவர் அவர்களுக்கு வீரவணக்கம் என்று அறிவித்துள்ளனர். பத்மநாபனும் தனது உரையில் அறிவித்துள்ளார் புலனாய்வுத்துறையும் அறிவித்துவிட்டது. ஆனால் மக்கள்மத்தியில் மாறுபட்ட கருத்தினை தெரிவித்து அவர்களை நிலைகுலைத்து இலாபத்தினை ஈட்டுவதற்கான மாற்று வழிகளையும் பொருத்தப்பட்ட படங்களை வெளிக்காட்டியும் வருகின்றனர்.
புலனாய்வுத்துறை ஒருபுறமும் சர்வதேச ஒருங்கிணைப்பு ஒருபுறமும் மக்களை குளப்புவதுபோலில்லை?!!. புலனாய்வுத்துறையே மிகத்துல்லியமாக ஆராய்ந்து தலைவரின் மரணத்தை ஒப்புக்கொண்டபின்னர் (அவர் வீரகாவியமானார் என்பதனை மிகத் திடமாக ய்திவிக்கின்றோம் – அறிக்கையினைப்பார்க்கவும்) அவருக்கு உலகம்தழுவிய ரீதியில் அஞ்சலி செலுத்தாதது ஏன். மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல் திடமில்லாது இருப்பதில் இருந்தே தலைவரின் மரணம் உறுதிப் படுத்தப்படவில்லையா???. இல்லை அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அவரின் உடல் என்று இலங்கை அரசால் எடுக்கப்பட்ட உடலுக்கு என்ன நடந்தது என்ற தகவலை வெளிக்கொணராதது ஏன்??? இவ்வாறான விடயங்களால் மக்களை மேலும் மேலும் குழப்பத்திற்குள்ளாக்கி தம்மை மீண்டும் திடப்படுத்த எத்தணிக்கின்றனர் பலர்… கருணா அவர்களும் இப்போரில் இறந்திருந்தால், தமிழர்களின் நிலை என்னவாயிருக்கும். இன்று புலிகளில் இருந்து அரசிடம் சரணடைந்துள்ள பல பச்சோந்தித்தமிழர்கள் செய்த செயலிலும் பார்க்க கருணா எவ்வளவோ மேல். புலிகளின் அழிவில் போராட்டங்களை மேற்கொண்ட புலத்தின் புலிகளின் ஆதரவாளர்கள், தற்போது மக்களின் அபிவிருத்தியில் அக்கறைகாட்டாது வாளாவிருப்பதிலும்பார்க்க கருணா எவ்வளவிற்கோமேல், இத்தனைகாலமும் கூட்டணியினரின் கூச்சலுக்குக் கொடுக்காத செவிகள் கருணாவின் குரலுக்குச்செவிகொடுத்ததால் கூட்டணியினரையும் கூட்டமைப்பையும்விட கருணா எவ்வளவிற்கோமேல்.
பலத்தோடு புலிகள் இருக்கும்போது அவர்களின்பால் அடிதழுவியவர்கள் அவர்களின் இழப்பின்பின்னர் அவர்களைக் குறைகூறித்திரிகின்றனர். இது மரணபயமா அல்லது அரசியலில் அடிவைக்க அத்திவாரமா? மக்களை எவ்வளவு ஈசியாக ஏமாற்றிவிடலாம் என்பதனை நன்கு அறிந்துவைத்திருக்கின்றனர். அணுவணுவாய்ச் சிதைந்துகொண்டிருக்கும் மக்களை இடைநிறுத்தி தற்கால அழிவில் இழப்பை ஏற்படுத்தினாலும் நிலையான வாழ்விற்கு வழிவகுத்த கருணா மற்றை அமைப்புக்களைவிட எவ்வளவோ மேல். புலத்தில் தமிழர்கள் பக்கம்… நாடுகடந்த தமீழீழ அரசு (இணைப்பினைப்பார்க்கவும்) என்ற பதத்தை தமிழர்கள்மத்தியில் பேசுகின்றனர். மக்களின் தூக்கத்தில், தங்கள் தாகத்தைத்ததீர்க்கத் தடம்தேடுகின்றனர்.
வரலாறு தெரியாத மக்கள் பலருண்டு, குறிப்பாகச் சொன்னால், ஒருவர் காலை 5 அல்லது 6 மணிக்கு எழும்பி காலைக்கடனை முடித்து 6.30 தன்னைத்தயார்ப்படுத்தி, 7மணிக்கு காலை தொலைக்காட்சியில் ஆரம்பித்து, மாலைவரை தொடர்கின்றோர் பலருண்டு, 7க்கு வேலைக்கு போகின்றோர் மாலை 6மணிவரைக்கும் தொழிலில் தனது காலத்தைக்கழிக்கின்றார், மாலை 6 மணிக்கு பின்னர் 7மணி அல்லது 8,9 மணிவரை அரட்டை அடித்துவிட்டு தெரிந்த விடயத்தை திரும்பித்திரும்பி பேசிவிட்டு வீடு திரும்புகின்றார் பலர். வீடு திரும்பியதும் உணவின்பின் படுக்கைக்குச் சென்று மீண்டும் பழைய பல்லவிதான் தொடர்கின்றது. இதில் உண்மை தெரிய வாய்ப்பேது சுயமாகச் சிந்திக்க அறிவேது??? ஒருவர் தனது சுய அறிவு வழர்ச்சிக்காகத் தன்னைத் தயார்ப்படுத்துகின்ற செயற்பாட்டை இப்போது பெரும்பாலும் யாரும் செய்வதாகத்தெரியவில்லை. இது இவ்வாறு இருக்க, எமது மக்கள் எப்படி வரலாற்றை அறிவார்கள்.
தமிழ் தொலைக்காட்சிகளில் பல தவறான விவாதங்களை தொடுக்கின்றனர். இது தவறு என்பதனை அறிவாளர்கள் தெரியப்படுத்த முன்வருவதில்லை, காரணம் அப்படி வந்தாலும் அதற்கு மதிப்பளிப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களின் ஒருங்கிணைப்பில், அமைச்சர் ஆகியுள்ள புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர் பல களத்தில் வெற்றிவாகைசூடிய கேணல் கருணா அவர்களே முறையாக பங்கெடுக்கவேண்டும். அதற்கான முழுப்பொறுப்பும் அவரையே சாரும். அதற்காகவே அவர் புலிகளின் தவறான பாதையில் இருந்து தனது சரியான பாதையினைத்தெரிந்தார். விடுதலைக்காக 35வருடங்கள் பொறுத்து ஆதரவு கொடுத்த மக்களும் அமைப்புக்களும், இன்றில் இருந்து சிலவருடங்கள் இவர் தலைமையில் ஆதரவு கொடுத்து பொறுத்துப்பார்த்தால் என்ன??? அவருடைய போக்கில் தவறு அல்லது தாழ்வு தெரிந்தால் உங்கள் விமர்சனங்களை அவருக்குத்தெரிவியுங்கள். அதைவிடுத்து வஞ்சக வலைவீசுவதிலோ மக்கள்மனதில் மாசுபதிப்பதிலோ மேலும் பிளவுகளை ஏற்படுத்தி தமிழர்களின் பலத்தினைக் குறைப்பதிலோ முன்நிற்க வேண்டாம் என்பதனைத்தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.. மீண்டும் தொடரும்வரையில்
அன்பன்
அருகன்
0 விமர்சனங்கள்:
Post a Comment