"தென்னிந்திய சக்திகளின் ஆதரவுடன் "தமிழீழ மன்னராக' பிரபாகரன் விரும்பினார்'
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கைக்கு அப்பாற்பட்ட நோக்கங்களைக் கொண்டிருந்ததாகவும் தென்னிந்தியாவில் உள்ள சில சக்திகளின் ஆதரவுடன் "தமிழ் ஈழத்தின் மன்னராக' வருவதற்கு விரும்பி இருந்ததாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
புலிகளின் தலைவர் சேகரித்து இருந்த பெருந்தொகையான ஆயுதங்கள் தனது சொந்த தேசத்தை நிர்வகிப்பதற்கு அப்பால் அதாவது இலங்கைக்கு அப்பாற்பட்ட விருப்பத்தை அவர் கொண்டிருந்ததை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அவர் (பிரபாகரன்) பெரிய கனவை கொண்டிருந்தார். இலங்கை... நான் நினைக்கவில்லை. (இது இலங்கை மட்டுமென) அவர் பாரிய நோக்கத்தை கொண்டிருந்தார். அவர் தமிழ் ஈழத்தின் மன்னராக வர விரும்பியிருந்தார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இல்லாவிடில் எமது இலங்கை இராணுவத்துடன் சண்டையிட இவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு தென்னிந்தியாவில் சில அனுதாபிகள் இருந்தனர். அவருடைய திட்டம் இலங்கைக்கு அப்பாற்பட்டது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கே.பி.கைதானமை இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை நவீன ஆயுதங்கள் எவ்வாறு புலிகளுக்கு கிடைத்தன என்பது தொடர்பாக அவர் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த தலைவர்கள் சிலர் இவற்றுக்கு பதில் கூறக் கூடும் என்று நான் நினைக்கிறேன். கே.பி.இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.
யார் ஆயுதங்களைப் பெற்றனர்?, யார் அவர்களுக்கு பணம் கொடுத்தனர்?, யார் அவர்களுடன் பேசினர்? அவரால் எமக்கு கூறமுடியும். முழு கட்டமைப்பு தொடர்பான உண்மையும் வெளிவரும் என்று நான் நினைக்கிறேன். ஆகக்குறைந்தது இந்த விபரமாவது வெளிவரும் என்று நான் கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்தியாவின் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment