பிரபாகரனின் தயவில் பாராளுமன்றத்தினுள் காலடி பதிக்கும் வாய்ப்பினை தமதாக்கிக்கொண்ட ஈழத்தின் வேந்தன் கனடாவில் தஞ்சம் கோரல்

மேடைப்பேச்சுக்களின் மேதாவிகளில் ஒருவரும் தமிழீழம் என்னும் தாரக மந்திரத்தினை தினம், தினம் உச்சரித்ததன்மூலம் தமிழகத்தில் தனது வாரிசுகளுக்கு வழமான வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஈழவேந்தன், தமது தேசியத் தலைவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டமையால் பாராளுமன்றப் பதவி பறிபோனது. இந்நிலையில் கனடாவில் புலி ஆதரவு தமிழ் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் வேந்தன் நடந்துகொண்ட காடைத்தனச் சம்பவமொன்றின் காரணமாக அங்கிருந்து ஏற்கனவே நாடு கடத்தப்பட்டார். தாயகத்திலிருந்து துரத்தப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்து பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பிரபாகரனின் தயவில் இருவருடகாலம் பாராளுமன்றப்பிரதிநிதிக்கான சுகபோகங்களை அனுபவித்தநிலையிலேயே பதவி பறிக்கப்பட்டது.
இறுதியில் கடைசித் தமிழனும் தஞ்சம் கோரும் நாடான கனடாவில் ஈழத்தின் வேந்தனும் தஞ்சம் கோரியுள்ளார்.
மஹாவெலி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment