தயா இளையதம்பியைப்பற்றி இலங்கை அரசு வெளியிடுள்ள செய்தி தவறானது
ரொறன்ரோ
இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசு
இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கு சட்டவாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையில ஓரு மதியுரைக் குழு அமைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.
இது தொடர்பாக அண்மையில் தமிழ் இணைய தளங்களில் வெளிவந்த ஒரு செய்தியில் "விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் சிறிலங்கா அரசுக்கு விடுதலைப்புலிகளின் ஆயுத வணிகம் தொடர்பாகவும், அந்த அமைப்புடன் சம்பந்தப்பட்டுள்ள சில வெளிநாடுகளை சேர்ந்த சார்பாளர்கள் குறித்தும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகளின் சட்ட மதியுரைஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருப்பதுடன் மற்றுமொரு தலைவரான தவா இளையதம்பி கனடாவில் இருப்பதாகவும் அறியமுடிகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், இவர்கள் இருவரும் பத்மநாதனுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தற்போது அந்த சகல தகவல்களையும் கேபி வெளியிட்டுள்ளதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
மேலும் ‘எஞ்சியவர்களையும் விரைவில் சிக்க வைக்க முடியும் என்பது உறுதி. இவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர், விடுதலைப்புலிகள் அமைப்பு அனைத்துல மட்டத்தில் வீழ்ச்சியடையும்' என கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி கொழும்பில் இருந்து வெளியாகும் செய்தித்தாள்களிலோ அல்லது இணைய தளங்களிலோ வெளிவந்ததாகத் தெரியவில்லை.
இருந்தும் இங்குள்ள ஊடகங்கள் சில இந்தச் செய்தியை ஒலி, ஒளிபரப்புச் செய்துள்ளன.
செய்தி வெளிவந்ததோ இல்லையோ இதில் குறிப்பிட்டுள்ள தயா இளையதம்பி நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி கேபியோடு மட்டுமல்ல வேறு யாரோடும் அவர் தொடர்பு கொண்டது கிடையாது. அவர் கனடாவில் தலைவரும் அல்லர். இந்தச் செய்தி முற்றிலும் புனையப்பட்ட செய்தியாகும்.
சிறிலங்கா அரசு தமிழ்த் தேசியத்துக்கு எதிரான பரப்புரையில் மும்மரமாக ஈடுபட்டு வருவது தெரிந்ததே. இதற்காக பல முகவர்களை அது மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. சிறிலங்கா திட்டமிட்டுச் செய்யும் பொய்ப் பரப்புரைக்கு தமிழ்த் தேசிய ஊடகங்கள் பலியாகாமல் பொறுப்போடு ந்டந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
எந்தச் செய்தியையும் அச்சு ஏற்றுமுன் அல்லது ஒலி, ஒளி பரப்பப்படும் முன்னர் அதன் மெய்மை - பொய்யை உறுதிப்படுத்திவிட்டு வெளியிடுயுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
0 விமர்சனங்கள்:
Post a Comment