தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல்!
வவுனியா குருமண்காடு பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமது வேட்பாளர்கள் மீது அரசகட்சியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்குழு ஒன்று இரு வாகனங்களில் வந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வன்னி பா.உ சிவசக்தி ஆனந்தன் முறையிட்டுள்ளார்.
நேற்று மாலை 5:15 மணியளவில் குருமண்காடு பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த கூட்டமைப்பு வேட்பாளர் அருணகிரிநாதன் ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் மாலை 5:30 மணியளவில் அதே பகுதியில் கூட்டமைப்பு வேட்பாளர் எம்.எம்.ரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
குருமண்காடு பிள்ளையார் கோயிலடியில் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது அரசுடன் கூட்டுவைத்துள்ள தமிழ்கட்சி ஒன்றின் தலைவரும் அவரது ஆதரவாளர்களும் தமது கட்சி ஆதரவாளர்களையும் கடுமையாக தாக்கியதுடன் அவர்கள் வைத்திருந்த துண்டு பிரசுரங்களையும் பறித்து கிழித்தெறிந்துள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் வவுனியா பொலிஸில் முறையிட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment