நொந்துபோயுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டைவிட்டுச் செல்ல தயாராகிறார்!
ராஜபக்~ சகோதர்களினால் இழைக்கப்பட்ட அநீதி காரணமாக மிகவும் சலிப்படைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இலங்கையைவிட்டு அமெரிக்காவில் குடியேற தயாராகி வருவதாக அவரது நெருங்கிய நண்பரொருவர் டுயமெய நேறள றுநடி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கெதிராக போர் வெற்றியைப் பெற்றுக்கொண்ட சரத் பொன்சேகாவிற்கு சிங்கள மக்களிடையே கிடைக்கப் பெற்ற வரவேற்பைப் பார்த்து அச்சமடைந்த ராஜபக்~ சகோதரர்கள், அவரை இராணுவத் தளபதிப் பதவியிலிருந்து அகற்றி, பாதுகாப்பு தலைமை அதிகாரியாக பதவியமர்த்தி அவரது அதிகாரங்களை முடக்கினர். அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவிற்கு எதிரான அழுத்தங்களை அத்துடன் நிறுத்தாத பாதுகாப்புச் செயலர், ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கும் அதிகாரத்தையும் தடைசெய்தார். அவரது புகைப்படம் அல்லது அறிக்கைகளை லேக் ஹவுஸ் நிறுவனம் வெளியிடாதவாறு உள்ளகத் தடையை பாதுகாப்புச் செயலர் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், மிகவும் மனக் கவலையுடனுள்ள சரத் பொன்சேகா, உயிர் பாதுகாப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்தத் தீர்மானத்தைக் கைவிடுமாறு பலதரப்பிலிருந்தும் வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி, பாதுகாப்பை அதிகரிக்க முனைப்பு மேற்கொள்வதாகவும் இவர்களில் சிலர் உறுதியளித்துள்ளனர்.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக ராஜபக்~ சகோதரர்களினால் செய்யப்பட்ட சதித் திட்டம் தொடர்பாக ஜே.வி.பி. நாடாளுமன்றக் குழுத் தலைவர் எதிர்வரும் வாரத்தில் விசேட உரையொன்றை நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ளதாகத் தெரியவருகிறது. அத்துடன், சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்கத்தரப்பினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பவுள்ளதாகவும் தெரியவருகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment