வவுனியா ஸீரோ| (0) முகாமைக் காண்பித்து அரசாங்கம், சர்வதேசத்தை ஏமாற்றிவருகிறது
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிடச் செல்வதாகக் கூறி, சர்வதேசத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகவயிலாளர்கள் ஆகியோர் வவுனியாவிலுள்ள மெனிக்பார்ம், ஷ~pரோ| (0) முகாமிற்கே அழைத்துச் செல்லப்படுவதாக அரசாங்கத்தின் மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
2008ம் ஆண்டின் மத்தியிலிருந்து 2009ம் ஆண்டு ஜனவரி - பெப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வந்த மக்கள் இந்த ஷ~pரோ| முகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இறுதிநேரத்தில் வந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்க்கிலும், அரசாங்கம் இந்த ~pரோ முகாம் மீது அதிக அக்கறை செலுத்திவருகிறது.
இந்த முகாமிலுள்ள மக்களுக்கு தகரத்திலான கூடாரங்கள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளோருக்கு இந்தக் கூடாரங்களைச் சுற்றி, ப+ஞ்செடிகள் மற்றும் மிளகாய், கத்தரி போன்ற மரக்கறிச் செடிகளை வளர்ப்பதற்கும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உதவிச் செயலர் எரிக் பீ. ஜோட்ஸ் கடந்த ஜூலை 26ம் திகதி குறித்த ~pரோ முகாமைப் பார்வையிட்டிருந்தார். அதன்பின்னர் கருத்துரைத்த அவர், வவுனியாவிலுள்ள அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்துள்ளதாகக் கூறினார். அதன்பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியாவின் ஷத இந்து| பத்திரிகையின் ஆசிரியர் ராம், ஷ~pரோ| முகாமைப் பார்வையிட்ட பின்னர் அவரும் அவ்வாறான ஒரு கருத்தையே தெரிவித்திருந்தார்.
எனினும், இறுதிக் கட்டப் போரின் போது வெளியேறிய மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களில், குடிநீர், போதுமான சுகாதார சேவை, மலசலகூட வசதிகளைக் கூட அரசாங்கம் உரிய முறையில் செய்துகொடுக்க தவறியுள்ள அரசாங்கம், இந்த முகாம்களுக்கு இதுவரை எந்தவொரு ஊடகவியலாளரும் சர்வதேச அதிகாரிகளும் அனுமதியளிக்கவில்லை.






0 விமர்சனங்கள்:
Post a Comment