முகாமிலுள்ள விடுதலைப் புலிகளை விடுவிக்கக் கூடாது - தேவ ஆதித்யா
வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவ ஆதித்யா தெரிவித்துள்ளார்.அவ்வாறு அந்த உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டால் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்க சந்தர்ப்பம் ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
சுமார் 16,000 விடுதலைப் புலி ஆதரவாளர்கள் தற்போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி அகதிகளிடமிருந்து தமிழீழ விடுலைப் புலிகளை வேறுபடுத்திய பின்னரே மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் எனவும், வெளிநாடுகளில் வசித்துவரும் தமிழ் புத்தி ஜீவிகள் இலங்கை நிலவரத்தை தெளிவாக புரிந்து வைத்துள்ளனர் என்றும் அவர் வியாக்கியானம் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்கள் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராகப் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும். எனினும், இந்தப் போலியான செய்திகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் மட்டுமே நம்புகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய நடாளுமன்றத் தேர்தல்களின்போது விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு பலத்த தோல்வி ஏற்பட்டதாகவும், தாம் 80,000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment