மகளை 30 ஆண்டுகளாக கற்பழித்த தந்தை
பெற்ற மகளை 30 ஆண்டு காலமாக கற்பழித்ததால், அந்த பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இது தொடர்பாக, அவுஸ்திரேலிய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், தனது மகளை, 11 வயது முதலே கற்பழித்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த பெண், நான்கு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்த குழந்தைகள் அனைத்துமே குறைபாடுகளுடன் பிறந்துள்ளன. இவற்றில் ஒரு குழந்தை இறந்து விட்டது.
தந்தையின் கொடுமையை பொறுக்க முடியாத மகள்,கடந்த பிப்ரவரி மாதம் மெல்போர்ன் நகரில் உள்ள மோர்வெல் பகுதி போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து தந்தை கைது செய்யப்பட்டார். தற்போது 60 வயதுக்கு மேலாகி விட்ட இந்த காமுகன், தான் கற்பழிக்கவில்லை என கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தான். மரபணு பரிசோதனையில் நான்கு குழந்தைகளும் இந்த நபருக்கு பிறந்தது நிருபிக்கப்பட்டது.
சிறுமியை தாக்கியது, தகாத முறையில் நடந்தது, கற்பழிப்பு என 13 வழக்குகள் இந்த நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. “குடும்பத்தின் கவுரவம்(!) கருதி யாருடைய பெயரையும் வெளியிடக்கூடாது’ என, கோர்ட் கூறியுள்ளது. மகளை 30 ஆண்டுகளாக கற்பழித்த நபருக்கு, வரும் நவம்பர் மாதம் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.மகளும், மூன்று குழந்தைகளும் தற்போது தொண்டு அமைப்பினரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment