மீண்டும் ஒரு செப்டம்பர் - 11 தாக்குதலா?
Visit msnbc.com for Breaking News, World News, and News about the Economy
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ. ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவருக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்ப தாகவும், அவர்கள் மீண்டும் ஒரு செப்டம்பர் 11 போன்ற தாக்குலுக்கு தயாராகி வருவதாகவும் அமெரிக்கா சந்தேகமடைந்துள்ளது.
அந்த இளைஞரின் பெயர் நபிபுல்லா ஜசி, கடந்த 1999ம் ஆண்டு நியூயோர்க் வந்த அவர் டென்வர் விமான நிலையத்தில் வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
அவர் இதுவரை பாகிஸ்தானுக்கு நான்கு முறை போயுள்ளார் என்பதும், அவரது மனைவி தற்போது பாகிஸ்தானில் இருக் கிறார் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த எப்.பி.ஐ. அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொள்வது இது இரண்டாவது முறை யாகும்.
மேலும், அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தாக்குதல் நினைவு நாளுக்கு முன்னதாக நியூயோர்க்கில் இருந்து கொலரடோ மாநிலத்தின் அரோரா நகருக்கு சென்றுள்ள சில சந்தேகத்துக்கிடமான நபர்களை சந்தித்து ள்ளார். இது தொடர்பாகவும் எப். பி. ஐ. அவரிடம் துருவி துருவி விசாரித்து வருகிறது-
எப்.பி.ஐ.க்கு சமீபத்தில் நியூயோர்க் நகரில் அல்-கொய்தாவுடன் நெருங்கிய நபர் ஒருவர் தங்கியிருப்பதாகவும், அவரும் அவரது கூட்டாளிகளும் செப்டம்பர் 11 போன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்தலாம் என்றும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பொலிஸார் நியூயோர்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வீடு வீடாக அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தான் அவர்கள் நபிபுல்லாவை பிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் சட்ட அமுலாக்க பிரிவினர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபிபுல்லாவிடம் சதி திட்டம் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இது குறித்த எப். பி. ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில் :-
நபிபுல்லாவுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் என நம்புகிறோம். அவர்கள் கடந்த 2005ல் லண்டனில் 56 பேரை பலிவாங்கிய ஹைட்ரஜன் பெராக்ஸைட் வகை குண்டுகளை தயாரித்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கருதுகிறோம்.
இதையடுத்து அதிக அளவு ரசாயனங்களை வாங்குபவர்களை கண்காணிக்க உத்தரவிட்டு ள்ளோம்.
சமீபத்தில் அதிக அளவில் வாங்கியவர்களின் பட்டியலும் பெறப்பட்டுள்ளது.
பொலிசார் கொலரடோவில் இருக்கும் அவரது வீட்டிலும் அவரது மாமாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கணனி, மொபைல் ஆகியவற்றை கைப்பற்றினர். அவற்றை ஆராய்ந்து வருகின்ற னர் என்றார்.
இந்நிலையில் நபிபுல்லா தான் குற்ற மற்றவன் என்று தெரிவித்துள்ளார். அவரது சட்டத்தரணி கூறுகையில் :-
அவர் அடுத்த மாதம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறார். அவர் அல்-கொய்தாவுக்கு நெருக்கமானவர்களை இதுவரை சந்தித்ததே கிடையாது.
அவர் கொலரடோவில் ஒரு கடையை வாங்கவிருக்கிறார். அதற்காக தான் அங்கு சென்றார். இதை அவரிடம் அந்த கடையை விற்பனை செய்ய இருப்பவரும் உறுதி செய்து ள்ளார் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment