தலையாட்டி போல் இயங்கும் ஒரு தொலை இயக்கி ஊடகவியலாளர்
மாமனிதர் சிவராம் பற்றி, சோமிதரன் எழுதும் தொடரை படிக்கும் போது, அவரது இழப்பு ஈழத்தமிழ் ஊடகத்துறைக்கு, எத்தகைய பாதிப்புகளை ஏறபடுத்தியிருக்கிறது என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. உண்மையில் சிவராமின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. அதற்கு அவர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் (புளொட்) இணைந்திருந்த போது மேற்கொண்ட சில நடவடிக்கைகள் காரணமாக இருக்கலாம். அவரது தனிப்பட குணவியல்புகள், அல்லது அவர் மீது கொண்ட தொழிற்துறைசார்ந்த பொறாமை, காழ்ப்புணர்வு எனப்பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு ஊடகவியலாளனாக, அதுவும் தனது இனத்தின் மீது பற்றுறுதி கொண்ட ஒரு தமிழ்தேசியவாதியாக அவரிடம் நாம் நிறைளையன்றி, எவ்வித குறைகளையும் காணமுடியாது.
சிவராம் தமிழ், ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இரண்டு மொழியிலும் சமனான ஆளுமை கொண்டவர். அடிமட்ட மக்களிலிருந்து அரசியல் தலைவர்கள் வரை அவர் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தாhர். விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சிலருடனும் அவர் நட்பு ரீதியான தொடர்புகளைக் கொண்டிருந்தது போல், சிங்கள அரசியல்வாதிகளுடனும் பழகியிருக்கிறார். வெளிநாட்டு இராச தந்திரிகள், கல்வியாளர்கள், சிந்தனை மையங்கள் என அவர் பல மட்டங்களிலும் நேரடியான தெர்டர்பாடலைகளை ஏற்படுத்தி வந்;தார். தாயகத்தில் வாழ்ந்தபோதும், புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிற்கும் பலமுறை பயணம் மேற்கொண்டு, இங்குள்ள செயற்பாட்டாளர்களுடனும், தமிழ் உணர்வாரள்களுடனும் அளவளாவிச் செல்வார்.
அவருக்கு சிங்கள அரசியல் பற்றியும் தமிழ்த்தேசியம் பற்றியும, தமிழ் மக்களது அபிலாசைகள் பற்றியும் சரியான புரிதல் இருந்தது. இவற்றிற்கு மேலாக அவர் ஒரு செயற்பாட்டாளர். ஆதலால்தான அவரால் தெளிவான அரசியற் கட்டுரைகளை எழுத முடிந்தது. அவரது கட்டுரைகளில் பலசெய்திகள் இருக்கும். பெரும்பாலும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையே அவர் முன்வைப்பார் அவற்றிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கும். சிவராமிற்கு நிகரான, அல்லது அவருடன் ஒப்பிடக்கூடிய இன்னொருவரை தமிழ் ஊடகப்பரப்பில் இப்போது காணமுடியாது. நாங்கள் அவரது முக்கியத்துவத்தை அறிந்து வைத்திருந்ததைக் காட்டிலும், எதிரி நன்கு உணரந்திருந்;தான். விழைவு அவர் பலிகொள்ளப்பட்டார்.
இப்போது நான் சொல்ல வந்தது சிவராம் பற்றியது அல்ல. சிலரால் சிவராமுடன் சேர்த்து வைத்துப் பேசப்படுகிற இன்னொருவர் பற்றியது. அவர் வேறு யாருமில்லை, நான் சிவராமுக்கு நேரெதிரானவராகக் கருதும்; டிபிஎஸ் ஜெயராஜ் என அறியப்பட்ட டேவிட் பியுவல் சபாபதி ஜெயராஜ். 1954ம் ஆண்டு மே 21ம் திகதி பிறந்த ஜெயராஜ், வடமராட்சி உடுப்பிட்டியைச் சேரந்தவர். தந்தையார் ஒரு பிரபலமில்லாத சாதாரண சட்டத்தரணி, கொழும்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் வாழும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் அவரது தந்தையார் தொழில் புரிந்தார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் கல்வி கற்ற ஜெயராஜ். சாதாரண தரம் வரை கல்விகற்றதாக அறியக் கிடைக்கிறது. 1977ல் வீரகேசரி பத்திரிகையில் பயிற்சி செய்தி நிருபராக இணைந்த அவர், சில ஆண்டுகள் அங்கு பணிபுரிந்து விட்டு, சிங்கள தொழிலதிபர் உபாலி விஜயவர்தனவால் (லேக் கவுஸ் விஜயவர்தன குடும்பத்தைச் சேரந்தவர்) புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “த ஐலண்ட்” பத்திரிகையில் சேர்ந்து கொண்டார்.
1988ல் திரு. நீலன் திருச்செல்வத்தின் உதவியினால், ஊடகத்துறை சம்பந்தமான குறுகிய கால கற்கை நெறி ஓன்றிற்காக அமெரிக்காவிற்கு வந்த அவர், அங்கிருந்து கனடாவிற்கு சென்று அகத்pத்தஞ்சம் கோரினார். சிறிது காலம் விடுதலைப்புலிகளின் கனடாப் பணியகத்தால் பிரசுரிக்கப்பட்ட “Voice of Tigers” ஆங்கில இதழின் ஆசிரியர் குழுவில் இணைந்திருந்தார். பின்னர் “செந்தாமரை” வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவிருநதார். சிறிதுகாலம் “மஞ்சரி” என்ற பத்திரிகையை நடாத்தினார்.
இப்போது, ஏரிக்கரை நிறுவனப்பத்திரிகைகள் தவிர்ந்த, கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகளில் அவ்வப்போது, பத்திகளை எழுதி வருகிறார். சென்னையிலிருந்து வெளிவரும் கஸ்தூரி ஐயங்கார் குடும்பத்தின் “த இந்து” பத்திரிகை, “புரொண்ட்லைன்” சஞ்சிகை போன்றவற்றிலும் எழுதிவருகிறார்.
இத்தனை அனுபவங்கள் கொண்ட ஒருவரை, முறையான ஊடகப்பயிற்சி அற்ற சிவராமுடன் ஒப்பிட்டுப் பேசமுடியாது என யாராவது வாதிட்டால், ஆதற்கான எதிர்வாதமாக இந்தப் பத்தி அமையுமே தவிர, ஜெயராஜ் மீது சேறு பூசுவது எனது எண்ணமல்ல.
ஜெயராஜ் பற்றி இத்தனை விடயங்களை எழுதிய நான் ஜெயராஜை என்றுமே சந்தித்ததில்லை, ஒரு தடவை TVI தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்ததைத் தவிர அவர் எப்படியிருப்பார் என்று எனக்குத் தெரியாது. நான் அவருடன் தொலைபேசியில் பேசியதும் கிடையாது, மின்னஞ்சலில் தொடர்பு கொண்டதும் கிடையாது.
அவரது கட்டுரைகளில்; பெரும்பாலானவை பொதுவாழ்வில் உள்ள பிரபலமான மனிதர்கள் பற்றியவையாக அமைந்திருக்கின்றன. அவர் மற்றவர்களைப்பற்றி எழுதும் முறையை பின்பற்றி, அவரைப்பற்றி அறியப்பட்ட தகவல்களை இங்கு தொகுத்துள்ளேன். இருப்பினும் அவர் எழுதுவது போலன்றி அவர் பற்றிய சில தனிப்பட்ட தகவல்களை நான் தவிர்த்துள்ளேன்.
ரொறொன்ரோவில், town house எனப்படும் தொடர்வீடு ஒன்றில் வசிக்கும் ஜெயராஜ், வீட்டை விட்டு அதிகமாக வெளியே செல்வது கிடையாது, இது அவரே எழுதிய தகவல்தான். ஆனால் பல ஆயிரம் மைல்களிற்கு அப்பால் இருவர் காதுக்குள் குசுகுசுத்தது பற்றியெல்லாம், தான் நேரில் கண்டது போன்று எழுதிக் தள்ளுகிறார். அவர் எழுதுபவற்றை வேண்டுமானால் தொலை இயக்கி பத்திரிகைத்துறை (remote control journalism) அல்லது ஆக்க எழுத்துத்துகள் (creative writing) என்ற வகையில் அடக்கலாம். அவற்றை செய்தியாக எடுக்கமுடியாது. ஏனெனில் அவர் எழுதுகிற தகவல்கள் சரியா, தவறா, என்பதனை அவரால் உறுதிப்படுத்த முடியாது.
யாரோ சொல்வதை வைத்து இவர் எழுதுகிறாரே தவிர, ஒரு. ஊடகவியலான் கடைக்கொள்ள வேண்டிய அறம் பற்றியல்லாம் இவர் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. அவருக்கு தேவைப்படுவது (பணம்) கிடைக்கிறது என்றால் யாரைப்பற்றியும் அவர் எழுதுவார்.
எண்பதுகளின் நடுப்பகுpயில் ஐலண்ட பத்திரிகையில் அவர் முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த “Behind the cadjan curtains” (கிடுகுவேலிக்கு பின்னால்) பத்தி ஆகட்டும், 1991ம் ஆண்டு ஐ{லை மாதம் புரொன்ட்லைன் சஞ்சிகையில் போராளிகள் சிவராசன், நளினி பற்றிய கட்டுரையாகட்டும், இன்று வரை அவர் எழுதுவது எல்லாமே இறுக்கமான சமூக அமைப்பைக் கொண்ட தமிழ் சமூகத்தின் உள்ளகத்தில் மட்டும் அறியப்பட்ட செய்திகளை வெளியாருக்கு தெரிவிக்கும் முயற்சிகளே. கொஞ்சத் தகவல்கள், கொஞ்சப் புனைவு, கொஞ்சம் வம்பளப்பு (gossip) என்பதாக அவரது கட்டுரைகள் அமைந்திருக்கும்.
தான் எழுதும் தவறான தகவல்களால், சம்பந்தப்பட்வர்களின் அப்பாவி உறவினர்கள் பாதிக்கப்படக்கூடும் என்கிற தார்மீக அக்கறை எதுவும் ஜெயராஜுக்கு கிடையாது. இவ்விடயத்தில், பயத்தால் அல்லது பணத்திற்காக சிறிலங்காப்படைகளுடன் இணைந்து செயற்படும் முகமூடியணிந்த தலையாட்டிகளுடன் ஜெயராஜை சேர்த்துப் பார்க்க முடியும்.
கொழும்புப் பத்திரிகை ஒன்றுக்காக, அவர் இப்போது எழுதியிருக்கும் ஒரு கட்டுரை விடுதலைப்புலிகள் அமைப்பின்; தலைமைச் செயலாளராக நியமிக்கப்ட்டிருக்கும் திரு. செல்வராசா பத்மநாதனுக்கு, அமைப்பின் வெளிநாட்டு ஆதரவாளர்கள் மத்தியல் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புப் பற்றியது. “LTTE Cabal opposes "KP" as leader of re-structured Tigers” என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் இக்கட்டுரையில், அவர் வாழ்நாளிலே சந்தித்திருக்காத, குறைந்தபட்சம் தொடர்புகளையாவது கொண்டிருக்காத பலருடைய விபரங்களைத் வெளியிட்டு, அவர்கள் எல்லாம் திரு. பத்மநாதனுக்கு எதிராகவ் செயற்படுவதாக விபரித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் செயற்பட்டாளர்கள், ஆதரவாளர்;கள் மத்தியில், திரு பத்மநாதனின் தெரிவு தொடர்பில் அதிருப்தியிருந்தது இரகசியமான விடயமல்ல. அதுபோல் அவ்வாறு எதிர்ப்பு ஏற்படும் சாத்தியப்பாடு என்பதும் ஊகிக்க முடியாத ஒரு விடயமுமல்ல. திரு. பத்மநாதன் வெளியிட்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட அறிக்கைகள், அவரது நிலைப்பாட்டில் உறுதிப்பாடின்மையை காட்டியது. அவரை நேரடியாகத் தொடர்பு கொள்வதிலுள்ள சிக்கல்கள், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. அவரது இந்திய சார்பு நிலையும் பல்வேறு ஊகங்களுக்கு வழி சமைத்தது. ஆனால் இந்த அடிப்படைகள் மறைக்கப்பட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அதிகாரப்போட்டி ஏற்பட்டுள்ளதாக நிறுவுவதும், அதன் மூலம் தமிழ் மக்களை, விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது வெறுப்படையச் செய்வதுமே ஜெயராஜுக்கு ஊதியம் கொடுப்பவர்களது (Pay Masters) எதிர்பார்ப்பாக உள்ளது.
விடுதலைப்புலிகளின் தாயகக் கட்டமைப்புகள் முற்றாகச் சிதைக்கப்பட்டு, உயர்மட்டத் தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். பல போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் பொது மக்கள்; மத்தியில் குழப்ப நிலை ஏற்படுவது இயற்கையே. தமிழின எதிரிகளோ, ஒரு குத்து-வெட்டு நிலை ஏற்பட்டு சில தலைகளாவது உருளும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் சிறிலங்கா. இந்திய உளவு அமைப்புகள் எதிர்பார்த்தது போல் இல்லாமல், நிலைமை மிகவும் அவதானத்துடன் கையாளப்பட்டு வருகிறது. புறநடையாக சில சம்பவங்கள் நிகழந்ததும், ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கைகள், கட்;டுரைகள் வெளியிடப்பட்டமையையும் மறைப்பதற்கில்லை. ஆனால் தமிழ்த் தேசியவாதிகள் மத்தியில் காணப்படும் அசாத்தியமான பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றால், பிளவுகள் அதிகரிக்காமால், கட்டமைப்புகள் தக்க வைக்கப்ட்டுள்ளன. இது மேற்கண்ட சக்திகளிற்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.
மேற்படி கட்டுரையினைத் தமிழில் மொழிபெயர்த்து, “கே.பி. வருவதை எதிர்க்கும் சதிக்கூட்டம்” என்ற தலைப்பில் யாழ் உதயன் பத்திரிகையில் பிரசுரித்திருகிறார் அதன் பிரதம ஆசிரியர் வித்தியாதரன். அவர் வெளிச்சக்திகளின் அழுத்தம்; காரணமாக அக்கட்டுரையை பிரசுரித்தாரா அல்லது அவரும் இந்தச் சக்திகளுக்கு விலைபோய் விட்டாரா என்பதனையிட்டு அவருக்க நெருக்கமான வட்டாரங்களில் பல்வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஜெயராஜின் கட்டுiரையில் திரு. பத்மநாதனுக்கு எதிராக செயற்படுவர்கள் எனக்குற்றம் சாட்டபட்டுள்ளவர்களில் சிலர், வித்தியாதரனுடன் நித்திய தொடர்பில் உள்ளவர்கள், அதிலும் ஒருவர் அவரது நெருங்கிய உறவினர், இவர்கள் யாருடனும் அவர்களது நிலைப்பாடு தொடர்பில், ஜெயராஜின் குற்றச்சாட்டுக்கள் நியாயமானதா என வித்தியாதரன் சரிபார்த்துக் கொள்ளவில்லை. வழமைக்கு மாறான அவரது இந்நடவடிக்கை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயராஜ் வரிசையில், வித்தியாதரனும் சேர்ந்து கொண்டிருந்தால், “போர்க்களத்தில் பேனாவுடன் சமராடும் ஒரு ஊடகவியலாளர்” என்ற வகையில் அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த மரியாதை சிதறடிக்கப்பட்டுவிடும்.
எழுபரிதி
0 விமர்சனங்கள்:
Post a Comment