இலங்கை அரசிடம் ரகசியங்களை உடைக்கிறார் செல்வராசா பத்மநாதன்
விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் ஆயுதம் மற்றும் பணம் திரட்டி கொடுக்கும் மிக முக்கிய பணியை செல்வராசா பத்மநாதன் செய்து வந்தார். கே.பி. என்றழைக்கப்பட்ட அவர் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த 2-வது இடத்தில் இருந்தார்.
கடந்த ஆகஸ்டு மாதம் கோலாலம்பூரில் இலங்கை போலீசார் கைது செய்தனர்.
கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். வெளி நாடுகளில் விடுதலைப்புலிகள் பெயரில் உள்ள சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்று அவரிடம் சிங்கள ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்மநாதன் மூலம் விடுதலைப்புலிகள் தொடர்பாக கணிசமான தகவல்களை சிங்கள அரசு திரட்டி விட்டதாக கருதப்படுகிறது. அடுத்தக் கட்டமாக ராஜீவ் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த இந்திய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அரசுடன் செல்வராசா பத்மநாதன் சமரசம் ஆகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பெரிய தண்டனையில் இருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் அவர்தன் நிலையை மாற்றிக்கொண்டதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இலங்கை அரசு அதிகாரப் பூர்வமாக இதுவரை எதையும் சொல்லவில்லை.
நக்கீரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment