வன்னியில் தமிழ் மக்களுக்கு புலிகள் என்ன செய்தார்கள்?: அகதியாகியுள்ளவர்களின் அவலக்கதை
கொழும்பிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு வாகனமொன்;றில் புறப்பட்டுச்சென்றோம். அனுராதபுரம் கடக்கும்வரை எங்கள் பிரயாணம் சுமுகமாக இருந்தது. வழியில் எதுவித இராணுவ செக்கிங்கும் இல்லை. தம்புள்ளையில் நாங்கள் காலை உணவை சாப்பிட்டோம் மதவாச்சியை அடையும் முன்பே வழியெங்கும் இராணுவத்தினரை காணமுடிந்தது. அவர்கள் எமது வாகனத்தை நிறுத்தி விசாரிக்க ; ஆரம்பித்ததும், .எங்கள் பாஸ்போட்டை தயாராக வைத்திருக்கத ்தொடங்கினோம். கொழும்பில் ஒவ்வொரு பயணத்தின் போதும் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இராணுவபொலிஸாரால் தடுத்து விசாரிக்கப்பட்டோம் ஆரம்பத்தில் சற்று எரிச்சல் மனத்துக்குள் ஏற்பட்டாலும் பின்பு அவர்கள் தங்களில் கடமையை சரியாக செய்வதைப்பார்த்து மதிப்பு வந்தது. மிகவும் மரியாதையாகவும் தொழில் முறையாகவும் நடந்து கொண்டார்கள்.
மதவாச்சியில் நான் மூன்று வருடங்கள் முன்பு வாழ்ந்திருக்கின்றேன்;. இப்பொழுது அந்தப் பகுதி முற்றாக அடையாளம் மாறிவிட்டது. பெரும்பாலான பிரதேசம் இராணுவமயமாகிவிட்டது. அந்தப்பாதையால் வந்த சகல வாகனங்களும் சோதனைக்காக நிறுத்தப்பட்டு, பயணிகளுடன் அவர்களின் உடைமைகளும் கீழே இறக்கப்பட்டு பரிசோதித்து மீண்டும் ஏற்றினார்கள்.
இந்தச் சோதனைக்கு நாங்களும் எங்கள் வாகனமும் இலக்காகினோம். வெளிநாட்டு அமைச்சின் வாகனமாக இருந்தபோதிலும் எங்கள் வாகனத்துக்கு எந்த சலுகையும் இல்லை. சாதாரண மக்கள்போலத்தான் நாங்களும் நடத்தப்பட்டோம்.
எங்கள் வாகனத்தின் உள்பகுதி மட்டும்ல்லாது, அது ஒரு கிடங்குக்கு மேல் செலுத்தப்பட்டு செசியின் கீழ்பகுதியும் பரிசோதிக்ப்பட்டது. கமராவை எடுத்துச் செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள அதிகாரியை தொடர்பு கொண்டபோது எங்களுக்கு கமராவை எடுத்து செல்ல அனுமதி கிடைத்தாலும் படங்கள் எடுக்கக்கூடாது என்ற உறுதி மொழி எங்களிடம் இருந்து பெறப்பட்டது
மதவாச்சியில் பரிசோதனைகள் முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆகி மதியமாகிவிட்டது. மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி பிரயாணம் செய்யுபோது நூறுமீட்டர்களுக்கு சில இராணுவத்தினர் பாதையின் இருமருங்கும் முள்பற்றைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இந்த இந்தவீதியில் 80-83 ஆண்டுகளில் நடு இரவை கடந்த பின்பும் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறேன். ஒருநாள்; போட்டார் சைக்கிளை ஓட்டமுடியாமல் தள்ளிக்கொண்டு சென்றதும் நினைவுக்கு வந்தது.
நடந்த போர் மிகவும் உக்கிரமானது. இரண்டு பகுதியினரும் வாழ்வா சாவா எனும் நிலையில் யாராவது ஒருபகுதி அழிந்தால்தான் போர் முடியும் என்ற நிலையில் போராடி இருக்கிறார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகள் தரப்பில் சிறுவர்கள் இணைக்கப்பட்டது போல் இலங்கை இராணுவத்திலும் பல மீசை முளைக்காத சிறுவர்கள் பலர் இருப்பதாக எனக்குத் தென்பட்டது. இவர்களுக்கு வயது பதினெட்டாக இருக்கலாம் ஆனால் பச்சைப்பாலகர்போல் எனது கண்ணுக்கு தெரிந்தார்கள். உலக சரித்திரத்தில் இழப்பை மட்டுமே நிகரலாபமாக பெற்றது மட்டுமல்ல முழு சிங்கள மக்களையும் இராணுவ மயப்படுத்திய போரை நடத்தியதற்கு இலங்கைத்தமிழர் பெருமை கொள்ளமுடியும் என்ற எண்ணம் ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
வவனியாவில் இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்வதற்கு முன்பாக இந்த முகாம்;களின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பவரான பிரிகேடியர் இலக்ஸ்மண் பெரேராவை தேடிச்சென்றோம். இவரிடம் பலகேள்விகளை கேட்பதற்கு தயாரகவும் இருந்தோம். நாங்கள் கொழும்பில் நிற்கும் போது சுமார் 35 பேர் மூளைக்காய்ச்சலினால் முகம்களில் இறந்திருப்பதாக ஒரு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனம் மூலம் கேள்விப்பட்டிருந்தோம். இதுசம்பந்தமாக முகாம்களில் வேலை செய்யும் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுடனும் தொடர்பு கொண்டதுடன் அமைச்சர் ஒருவரிடமும் இதைப் பற்றி விசாரித்திருந்தோம். அத்தோடு இங்கிலாந்து பத்திரிகை ஒன்றில் 1500 பேர் இறந்தார்கள் என்ற சேதியும் எமது மனதில் குடைந்து கொண்டிருந்த விடயமாகும். முகாம் பொறுப்பதிகாரி முகாம்களில் நடந்த இறப்புகள் பதிந்த பதிவு பத்தகத்தை எடுத்து காண்பித்து இதுவரையில் முகாம்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 800 க்கும் குறைவாக இருக்கிறது என்று கூறினார். இவரது கூற்று எமக்கு ஆறுதல் தந்தாலும் இதே விடயத்தை நாங்கள் சந்தித்த வவுனியா அரசாங்க அதிபரிடமும் அதே வேளையில் முகம்களில் வேலை செய்யும் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் விசாரித்து உறுதிப்படுத்தினேம்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் பல நிறுவனங்கள் உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் மூலம் வேலை செய்கின்றன.. இப்படிப்பட்ட 54 உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் இங்கு வேலை செய்கின்றன. வுவனியாவிலும் மற்றும் சுற்றுப் பகுதியிலும் உள்ள உறவினர்கள் இங்கு வந்து பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் விரும்பத்தகாத விடயங்களை அரசாங்கம் எளிதில் மறைக்கமுடியாது.
நாங்கள் அங்கிருந்து வவுனியா கச்சேரிக்குச் சென்று அரசாங்க அதிபரான திருமதி சார்ள்ஸ் அவர்களைச் சந்தித்தோம். இதற்கு முன்பும் அவுஸ்திரேலியாவில் இருந்து அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கின்றேன். இந்தப் பெண்மணி மிகவும் மரியாதைக்குரியவராகவும் தோற்றம் அளித்தார். ஏழு நாளும் வேலைசெய்யும் இவரது வார்த்தைகள் தங்கு தடையின்றியும் தன்னம்பிக்கையாகவும் வெளிவந்தன.
சொந்த நாட்டைவிட்டு ஓடி பல பொய்களை உரைத்து வாழ்வும் வசதிகளையும் பெற்ற பின்பு தாங்கள்தான் தமிழ் ஈழத்தின் தாய்க்;குலம் எனக் கூறி வருடத்துக்கு சிலதடவை மஞ்சள்சேலை கட்டும் பலரையும் பார்த்திருக்கின்றேன். அத்துடன் இரவு நேர வானொலிகளில் விடுதலை வீராவேச வசனங்களை அள்ளித் தெளித்துவிட்டு குறட்டை விட்டு தூங்கி விடுபவர்களையும் அறிந்துள்ளேன்.
புலம்பெயர் சூழலில் இப்படியான தாய்க்குலங்கள் நிறைந்த சமூகத்தில், நெருக்கடியான காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் துணிவாகவும் மிகத்திறமையாகவும் பணியாற்றும் திருமதி சார்ள்ஸ் போன்றவர்களே எமது சமுதாயத்தில் கௌரவிக்கப்படவேண்டியவர்கள்.
போர் நடந்து கொண்டிருக்கும் போது பல தடவை ஐக்கிய நாட்டு தொண்டு நிறுவனங்களை சந்தித்து பெருந்தொகையான மக்கள் அகதிகளாக வருவார்கள் அதற்கு ஆயத்தமாக முகாம்களை தயார் படுத்த வேண்டும் என தாங்கள் கேட்டதாகவும் ஆனால் அவை அதைச் செய்யவில்லை. போர் இப்படி சடுதியாக முடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை என திருமதி சார்ள்ஸ் கூறினார்
அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வவுனியா கலாச்சார நிலையத்துக்கு சந்திக்கச் சென்ற போது வழி எங்கும் அவர் தேர்தல் சுவரொட்டிகளில் அவர் காட்சி தந்தார். மதியம் இரண்டு மணியாகியதால் அமைச்சரின் அலுவலகத்தில் மதிய உணவு தரப்பட்டது. மீன் குழம்பும் சோறும் அந்தநேரப் பசிக்கு அருமையாக இருந்தது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நானும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே அறிமுகமானவர்கள். சாதாரண மிருகவைத்தியராக இந்தியாவுக்கு இலங்கைநெருக்கடியிலிருந்து தப்பி இந்தியாவில் தமிழகம் சென்ற என்னை தமிழர் நல மருத்துவ நிதியத்தின் செயலாளராக 84 இல் பிரேரித்ததன் மூலம் என்னை தமிழர் அரசியலில் ஞானஸ்த்தானம் செய்து வைத்தவர் டக்ளஸ் தேவானந்தா..
மதிய உணவை உட்கொண்டவாறே நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் “ இந்தத் தேர்தலை அரசாங்கம் வைத்திருக்கக் கூடாது. இது மிகவும் விரைவில் வந்துவிட்டது. மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து முகாம்களில் இருக்கும்போது நீங்கள் ஒரே ஒரு தமிழ் அமைச்சர் அமைச்சர் மட்டும்தான் உள்ளே சென்று மக்களைப் பார்த்து அவர்களின் குறைநிறைகளைப் பற்றி அரசாங்கத்துடன் பேசும் வாய்ப்புள்ளவர்;. தேர்தல் பிரசாரத்தில் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் நீங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் இடம் பெயர்ந்த மக்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்” என்றோம். தமிழர்கள் மத்தியில் அரசியல்தலைமை ஏற்படுத்த இந்தத் தேர்தல் வாய்ப்பளிக்கும் என்பது அவரதும் அவர் சார்ந்தவர்களதும் பதிலாக இருந்தது.
வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கி பிரயாணம் செய்தபோது வழியெங்கும் இராணுவத்தினர் தொடராக துப்பாக்கிகளுடன் நின்றார்கள். சிங்கள இனத்தின்; முழுச் சக்தியும் இந்தப்போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான ஒரு இராணுவ தயார் நிலைக்கு கொண்டு வருவதற்கு விடுதலை பலிகளின் பன்முகத்தன்மையான தாக்குதல்கள் வழிவகுத்துள்ளது. இப்பொழுது விடுதலைப்புலிகள் காற்றில் நீராவி போல் மறைந்து விட்டார்கள் ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் யுத்தம் இல்லாத நாட்டில் உள்ள இராணுவமாக மீண்டும் திரும்புவது பாரிய சவாலாக இருக்கும்.
இந்தப்பிரதேசம் கிடுகால் வேயப்பட்ட கொட்டில்களும் பிளாஸ்ரிக் கூடாரங்களும் நிறைந்த வெளியாக மன்னார்- மதவாச்சி வீதியின் இருமருங்கும் காட்சியளித்தது. மனிதர்கள் ஆங்காங்கு கூட்டமாக வெட்டாமல் விடப்பட்ட மரங்களின் கீழ் நின்றார்கள். சிறுவர்கள் விளையாடிக் கொண்டு நிற்பது எனது கண்களுக்குதெரிந்தது. எண்பதுகளில் சென்னையில் நான் பார்த்த சேரிகளை நினைவுக்கு கொண்டுவந்தது. இங்கு பிளாஸ்ரிக் கூடாரங்களும் கொட்டில்களுக்கு முன்பாக உள்ள திறந்த வெளியும் வித்தியாசமாக இருந்தது.
செட்டிகுளத்தைச் சுற்றிய பிரதேசம் மிகவும் அடர்ந்த காடுகளைக் கொண்டது. மதவாச்சியில் வேலை செய்த காலத்தில் சிங்கள நண்பர்களோடு பன்றி வேட்டைக்கு வரும்போது இந்த காடுகளுக்குள் பல இடங்களில் நிமிர்ந்தபடி நடந்துசெல்ல முடியாது. மரக்கிளைகளை வெட்டாமல் செல்வதாயின் தவழ்ந்தபடிதான் செல்ல வேண்டும்.
இந்தக் காடுகள்தான் இலங்கை அரசுடன் போராட ஆரம்பித்த தமிழ் இளைஞர்கள் 70 களில் கரந்துறைந்த பிரதேசம். இங்குதான் இன்ஸ்பெக்டர் பஸ்ரியாம்பிள்ளையும் அவரது சில சகாக்களும் கொலை செய்யப்பட்டனர். இதேபிரதேசத்தில் தமிழ் மக்களை அகதிகளாக வைத்திருப்பது என்பது முப்பத்தைந்து வருடங்களுக்குப்பின்னர், ஒரு முரண்நகையான விடயம் என்பது தெரியவில்லையா?
கடைசிப்போரில் முள்ளிவாய்க்கால்; பகுதியில் இருந்து உயிர் தப்பி வந்தவர்கள் தங்கியிருந்த முகாமைப் பார்க்க வேண்டும்; என நாங்கள் கேட்டுக்கொண்டோம் .அவர்களைப் பார்க்கச் செல்லும் வழியில் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கதிர்காமர் முகாமுக்குச் சென்றோம்.
டொக்டர் நரேந்திரன், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், செல்லையா மனேரஞ்சன் ஆகிய மூவரும் இந்த ஆண்டு (2009) ஏப்பிரல் முதல் வாரத்தில் இந்த முகாமுக்குச் சென்றிருந்தார்கள். இந்த முகாம் பலவசதிகளைக் கொண்டதாக ஒரு கிராமம் போல் காட்சி அளித்தது. இராணுவத்தினர் இங்கும் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
நாங்கள் அங்கே சென்றதும் எங்களைச் சுற்றி மக்கள் கூடினார்கள். மக்களுடன் பேசுவதற்காக ஆரம்பித்ததும் ஆறுபேர் தொடர்ச்சியாக தங்களுக்கு நடந்தவிடயங்களைப் பற்றி கூறத்தொடங்கினார்கள். இவர்களது சகல குற்றச்சாட்டுகளும் விடுதலைப்புலிகளுக்குஎதிராகவே இருந்தன. இவர்கள் குரல்களில் இருந்த ஆவேசம் அழுகை ஆத்திரம் என்பன இவர்கள் இராணுவத்தால் இப்படி விடுதலைப்புலிகளின் மீது குற்றம் கூறும்படி பழக்கப்பட்டவர்களாக எனக்கு தோன்றவில்லை. மேலும் இவர்கள் கூறிய சம்பவங்கள் சிலவற்றிற்கு நடந்த நாட்கள் கிழமை எனக் குறிப்பிட்டார்கள்.
இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளில்; சில:-
அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் நடேசனும் கடற்படைக்கு பொறுப்பான சூசையும் இளவயதான பிள்ளைகளைப் பிடிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல பெற்றேர்கள் இதற்கு மறுத்த போது அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். சில பெற்றோர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஓரு தகப்பன் சொன்னார்:- தனது படித்த மகளுக்கு வங்கியொன்றில் கொடுக்கப்பட இருந்த வேலை விடுதலைப்புலிகளின் வற்புறுத்தலின் பேரில் இறுதி நேரத்தில் அவர்கள் சார்ந்த ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாம் தனது பதினாறு வயது மகனை இயக்கத்துக்கு அழைத்து சென்று தேவிபுரத்தில் இரண்டு நாள் வைத்திருந்து விட்டு ஏதோ காரணத்திற்காகப் புலிகள் சுட்டுக்கொன்றதாகவும் கண்ணீர் சொரிய அந்தத்தந்தை சொன்னார்.
கிளிநொச்சி அருகேயுள்ள தர்மபுரத்திலிருந்து விடுதலைப்புலிகள் பின் வங்கும் போது அங்குள்ள தங்களின் உணவுக் குதத்தை எரியூட்டினார்கள். இதே வேளையில் மக்கள் உணவற்றிருந்தார்கள். இச்சம்பவத்தின்போது மக்கள் உணவை மீட்பதற்காகப்; போராடியபோது சிலர் அந்த நெருப்பில் எரிந்தார்கள்.
விடுதலைப்புலிகளின் ஆட்சேர்ப்புக்குப் பயந்த பல பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள், பக்குவப்பட்டதும் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள்;. இதனால் பல குழந்தைகள் குழந்தைகளை பெற்றிருப்பதை காணமுடிந்தது..
சில இளம் பெண்கள் திருமணமாகி கர்ப்பவதியாகியிருப்பின் தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்காக புலிகளே கிளிநொச்சி வைத்தியசாலையில் கர்ப்பச்சிதைவை செய்திருக்கிறார்கள். இப்படிகருச்சிதைவின்போது இறந்தயுவதிகளை வீராங்கனைகளாக வீர மரணம் அடைந்ததாக பெற்றோரிடம் பொய் சொல்லி சடலத்தை கொண்டுவந்து கொடுப்பார்களாம்.
சாமத்தியப்பட்ட பெண்பிள்ளைகளை வீட்டின் பின்னால் கூடுபோல் கட்டி அதற்குள் வைப்பது யாழ்ப்பாண தமிழ்மரபு. அந்த கூட்டுக்குள் புகுந்த புதுக்குடியிருப்பு அரசியல் துறை பொறுப்பாளர் இளம் பரிதியின் ஆட்களினால் ஒரு சிறுமி பக்குவப்பட்டு ஏழே நாளில் இயக்கத்திற்கு கடத்தி செல்லப்பட்டதாக ஒருவர் சொன்னார்.
வலைஞர்மடத்தில் உள்ள தேவாலயத்தில் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக கத்தோலிக்க மத குருமாரிடம் பொறுப்பு கொடுத்;திருந்தவர்கள் சொன்னது:-. மார்ச் மாதம் இருபத்தினான்காம் திகதி விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் இளம்பரிதியின் ஆட்கள் வந்து அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதரை தள்ளி விழுத்திவிட்டு அவரை பயமுறுத்தி பிள்ளைகளை பலாத்காரமாக கடத்திச் சென்று விட்டனர்;. இளம்பரிதிக்கு தகவல் கொடுத்து வரவழைத்தது மற்றைய பாதிரிமார்கள்தான் என்பது எங்களுக்குத் தெரியும்.
இந்த சம்பவத்தின் பின்பு இந்தத் தேவாலயம் பீரங்கியால் தாக்கப்பட்டது
விடுதலைப்புலிகளின் வரிக்கொடுமை தாங்க முடியாதது. கத்தரிக்காய் தேங்காய் எல்லாவற்றிற்கும் 10 வீதம் வரி போடுவார்கள். நாங்கள் பத்தாயிரம ரூபாய்க்கு ரைப்ரையிட்டர் வாங்கியபோது 1000 ரூபாய்; வரி போட்டார்கள்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க நிலத்தில் கிடங்குகளை கிண்டி அவர்;களை உள்ளே இறக்கி விடுவோம். புலி;கள் பிள்ளை பிடிக்க வரும்போது அதன் மேல் இருந்து விடுவோம். சிலவேளையில் அதிக நேரம் விடுதலைப்புலிகள் நின்று விசாரித்ததனால் சுவாசிக்க முடியாமல் பிள்ளைகள் இறந்துவிட்ட கொடுமையும் நடந்திருக்கிறது.
இந்தக்காம்பில் இருப்பவர்களின் மற்றுமொரு குற்றச்சாட்டு, லண்டன் ஐ பி சி பற்றியது. இந்த வானெலி யுத்தகாலத்தில் மட்டுமல்ல யுத்தம் முடிந்த பின்பும் பொய்ப்பிரசாரங்களைச் செய்து மக்களை குழப்புவதாக எங்களிடம் கூறினார்கள்.
இந்தக்காம்பை சேர்ந்தவர்கள் தேக ஆரோக்கியமாகவும் இருந்ததுடன் அரசாங்கத்துக்கு நன்றி கூறியதும் வியப்பானது. ஒருவர் தான் வரும்போது உடுத்த உடையோடு வந்ததாகவும்., இ;ப்பொழுது ஐந்து சோடி உடைகளுடன் இருப்பதாகவும் சொன்னார்.
நாங்கள் வலயம் 5 என்ற முகாமுக்கு சென்றோம். இந்த முகாம் இறுதியாக போர ;நடந்த இடத்தில் இருந்த மக்களை கொண்டுள்ளது. இந்த முகாமிற்கு நாங்கள் சென்ற போது மக்கள் எண்ணிக்கை கணக்கீடு நடந்து கொண்டிருந்தது. பலரை வெளியே காண முடியவில்லை. அந்த முகாமில் உள்ள சிறிய ஆஸ்பத்திரிக்கு எங்களால் சென்று பார்க்க முடிந்தது. அங்கே இருந்த மருந்துகளும் வைத்திய வசதிகளும் திருப்திகரமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. கடும்நோயால் வருந்தும் பெண்ணொருத்தியை வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் அவதானித்தோம். அங்கு தன்னார்வமாக நோயாளர்ளை கவனித்துவரும் பெண் தனக்கு எது வித உபகார சம்பளமும் தருவதில்லை என எங்களிடம் குறைபட்டுக் கொண்டாள்.
இந்த முகாமில் தண்ணீர் பிரச்சினை பொதுவாகத் தெரியவில்லை. பலர் குழாய்க்கிணறுகளில் இருந்து வரும் தண்ணீரை வாளிகளில் எடுத்து குளிப்பதையும் பலர் வரிசையாக குடங்களுடன் தண்ணீருக்கு காத்து நிற்பதையும் பார்த்தேன்.
;இங்கு குழந்தைகள் பெண்கள் மெலிந்து ஆரோக்கியம் குன்றிய நிலையில் இருந்தார்கள். ஒரு சிறுவனது கையை பிடித்து பார்த்தபோது சிரங்குப்புண் இருப்பது தெரிந்தது. இதைப்பற்றி விசாரித்தபோது எங்களோடு வந்த இராணுவ அதிகாரி, “ இது மட்டுமல்ல பொக்கிளிப்பான் செங்கமாரி போன்ற நோய்களோடு நடக்க முடியாமல்தான் இந்த மக்கள் எங்களிடம் வந்தார்கள். அவர்கள் இருந்த நிலையை நீந்கள் அந்த நேரத்தில் பாத்திருக்க வேண்டும்” என பதில் கொடுத்தார்.
அச்சமயம்; ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த டொக்டர் நரேந்திரன் ‘இதைக் கேளுங்கள்’ எனக் கூறி என்னை அழைத்தார்.
மெலிந்து வாடிபோய் இருந்த முப்பது வயதிற்கும் கீழ் உள்ள ஓரு பெண் ஆறு மாத குழந்தையை தூக்கி வைத்திருந்தாள். எத்தனை குழந்தைகள் என்ற கேள்விக்;கு ஆறு குழந்தைகள். அது மட்டுமல்ல எனது சகோதரியும் கணவரும இறந்து விட்டதால் அவர்களின் நாலு பிள்ளைகளை நான் வளர்க்கிறேன் என்றாள்
இந்தப் பெண் முகாமில் இருந்து வெளியேறும்போது இவளது குடும்பத்தின் நிலை என்ன என்ற கேள்வி எனது மனதில் எழுந்தது.
இந்த முகாமின் ஒருபகுதியில் பெரிய குடிசைகள் தொடர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் குடிசைகளுக்கு சிறிது தூரத்தில் கழிப்பறைகளும் மற்றைய முகாம் கழிப்பறைகளிலும் பார்க்க பெரிதாக இருந்தன. அவற்றின் கதவுகள் திறந்தபடி இருந்ததால் அவைகள் மிக சுத்தமாக இருப்பது தெரிந்தது.
இதைப்பற்றி நாங்கள் கேட்ட போது இது பிராமணர் வசிக்கும் குடிசைகள். இவை அவர்களுக்கான கழிப்பறைகள் என்றார் பிரி;கேடியர் லக்ஸ்மண் பெரேரா.
அவர்களது குடிசைகளை நோக்கிச் சென்ற போது குடிசைகளுக்கு அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களிடம், எங்களுடன் வந்திருந்த சிவநாதன், “நீங்கள் ஏன் கடைசிவரையும் அங்கே நின்றீர்கள்?”- என்று கேட்டபோது, “நாங்கள் அதுக்குள் அகப்பட்டுக் கொண்டோம்” என்றார்கள். அத்துடன் தங்கள் மத்தியில்; பலாத்காரமாக குழந்தைகளை இயக்கத்திற்கு சேர்க்கும் செயல்களில் புலிகள் ஈடுபடவில்லை என்றும் கூறினார்கள்; புலிகள் மட்டுமல்ல இலங்கை இராணுவமும் பிராமண சமூகத்தினரை கௌரவமாக நடத்தியிருப்;பதை அறியமுடிந்தது..
84 -87 இடைப்பட்டகாலத்தில் இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மத்தியில் சுமார் மூன்று வருடங்கள் வேலை செய்துள்ளேன். இருநாறுக்கு மேற்பட்ட அகதி முகாங்களுக்கு பல தடவைகள் சென்றிருக்கிறேன். அப்பொழுது என் மனதில் உற்சாகம் இருந்தது. பல மைல் தூரங்கள் அகதி முகாங்களுக்கு மதிய வெய்யிலில் நடந்து சென்றிருக்கின்றேன். அந்த முகாம்;கள் மக்கள் சில நாட்கள் மட்டும் தங்குவதற்காக தமிழ் நாட்டு கரையோரங்களில் அமைக்கப்பட்ட புயல் பாதுகாப்பு மண்டபங்கள். அவையோடு ஒப்பிடும் போது இவை எவ்வளவோ தரமானவை.
உற்சாகத்துடன் ஓடி ஓடி வேலை செய்ய முடிந்தது. ஆனால் வவுனியா- செட்டிகுளம் இடைத்தங்கல் அகதி முகாம்களை பார்த்துவிட்டு திரும்பும்போது மனதில் கனதியான சோகம்தான் நிறைந்திருந்தது. இந்த முகாங்களுக்கு மீண்டும் வருவது என்பது என்னால் முடியாத காரியமாக இருக்கும்.
ஏன்?
ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தை இளம்பராயத்தில் பார்த்த எனக்கு இப்போது அந்த செட்டிகுளப் பிரதேசம் போரட்டத்தின் ஈமக்கிரியைகள் நடைபெறும் பிரதேசமாக தெரிவதனாலா?
அல்லது. எமது மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் துர்ப்பாக்கிய நிலையா?
குரங்கின் கையில் சிக்கிய பூமாலையாக ஈழ விடுதலைப் போரட்டம் போய் விட்டதாலா?எனது நெஞ்சில் முள்ளாக உருத்திய கேள்விகளுக்கு விடை கிடைக்கவி;ல்லை. கனத்த இதயத்துடன் கொழும்பு நோக்கி புறப்படும்போது, சமூகத்தில் கேள்விகள் கேட்காது முட்டாளாக அந்த சமூகத்தின் போக்கில் செல்வதில் வரும் சுகத்தை தவறவிடுகிறேன் என்ற சுயபச்;சாதாபம் சிறிதாக நெஞ்சின் ஓரத்தில் குமிழிவிடுவது தெரிந்தது.
ஆஸ்திரேலியாவிலிருந்து நடேசன்
நன்றி; உதயம்






0 விமர்சனங்கள்:
Post a Comment