தமிழ்ச்செல்வா…. உன் கைத்தடியை நீ இழப்பினும் குற்றம் குற்றமே…
தமிழ்செல்வா உன்
தாய்பிறந்த நாட்டினை
தாக்க வேண்டும் என்று
தட்டினாய் உன்மார்பு தனை
தலையில் குண்டடி பட்டு
தரணிதனில் உன்னுடல்
தரைதனை பார்த்தபடி…..
தண்ணியுடன் உன் அஸ்தி கலக்குமுன்
தலைவனும் மாண்டனர் உன்
தளபதிகளும் மாண்டனர்
தலைக் கர்வமில்லாமல்
தலைநிமிர்ந்து நிற்குதடா
தாய்நாடு எனும் இலங்கை…..
தனிமை பட்டு வாழ எண்ணி
தாவரம் ஒன்றை நட்டீர்கள்
தழைத்ததா? உங்கள் பயிர்
தராசு போல் பேணவில்லை
தரையில் வாழ்ந்த மக்களை
தனிசுகத்திற்காக நீங்கள்
தலைகளை மொட்டையடித்தீர்கள்
தலைநிமிர்ந்து நிற்குதடா
தாய்நாடு எனும் இலங்கை….
தங்கம் விழைகற்கள் விழைந்திடும்
தரமான நாடு எங்கள் நாடு
தார்மிக கடமைகளை சுமந்த
தத்துவங்கள் தாங்கிய நாட்டை
தாட்டுவிட நினைத்தாய் என்றும்
தலைநிமிர்ந்து நிற்குதடா
தாய்நாடு எனும் இலங்கை…
தவம் பெற்று உனை ஈன்ற
தாயின் கருவறைதனை
தகர்க்க நினைத்தவனே
தத்தளிக்கும் மக்ளை சுமந்த
தன்னிகரில்லா நம்நாடு
தலைநிமிர்ந்து நிற்குதடா
தாய்நாடு எனும் இலங்கை….
தமிழரின் போராட்டம் உன்
தனிநபர் சொத்தல்ல
தத்துவஞானிகளால் அன்று
தடவிக்கொடுத்து எங்கள் மத்தியில்
தலைக்கனமில்லாமல் தரப்பட்டவை
தனியொரு மனிதன் செய்த வினையால்
தமிழர்கள் எல்லாம் அனாதைகளாய்
தடம்புரண்டு ஒடினாலும்
தலைநிமிர்ந்து நிற்குதடா
தாய்நாடு எனும் இலங்கை….
தலைவராக யார்வந்தாலும்
தாவித்திரியும் மந்திகள் போல
தலைமறைவாக இருந்து உன்
தலைவன் வரைந்தவன் கையெழுத்து
தழைக்காத மரமென்று தெரிந்திருந்தும்
தண்ணீரை ஊற்றினான் உன்தலைவன்
தன்னை காப்பாற்ற…தன்னலமாய்
தாய்மை சுமக்கும் பெண்களை
தற்கொலை படைகளாய் அனுப்பிய போதும்
தலைநிமிர்ந்து நிற்குதடா
தாய்நாடு எனும் இலங்கை….
தவறுகளை திருத்தி வாழ்ந்திருந்தால்
தண்டனைகளிலிருந்து நீங்கள்
தப்பித்து வாழ்ந்திருக்கலாம்
தமிழ்செல்வா.. .தண்டனை பெற்று
தரணியை விட்டு சென்றாலும்
தமிழ்ச்செல்வா தமிழ்மக்களுக்கு
தன்னலமாக நீ செய்தது துரோகம்
குற்றம் குற்றமே…..!!!
கிளியின் ஓர்கிராமத்து நாயகன்.. வவிதரன்
Athirady






0 விமர்சனங்கள்:
Post a Comment