நீச்சல் தடாகமும் நிறைவற்ற தமிழீழமும்..

தளிர் விட்ட பிஞ்சுகள்
தனல் தனில் கருகிட
தலைவனும் தனையனும்
தண்ணியில் நீச்சல் அடித்தனர்
தலைக்கொதிப்பு அடங்கிட
தலை விரி கோலமாய்
தாய்மார்கள் வீதியினில்
தனையனை கேட்டு
தவித்து நின்ற போதும்
தடாகத்தில் உல்லாசம் கண்டனர்
தனித்தேசியம் உருண்டோடிட
தமிழ் தேசியம் தலைக்கேறிட
தமிழீழம் தள்ளாடிட
தலைவரெல்லாம் கெண்டாடிட
தரை நீச்சல் அடித்தனர்
தாகம் பறந்திட தந்தையும் தனையனும்..
தன் வாரீசு பட்டப்படிப்பினில்
தரணியெங்கும் காயமில்லாமல்
தன்நலம் இல்லா தமிழன்
தன்நிலை இழந்த நிலையினில்
தாழ்வார ஓரத்தில்
தார்மீகம் என்று கூறும் நீ
தன்னார்வம் கொண்டு புன்னகையுடன்
தனித்துவம் கொண்டு அலைகின்றாய்
தண்ணீரில் சுகம் பெறுகின்றாய்
தாமரை மீது தண்ணீரில் மோகம்
தளர்ந்த தலைவா உனக்கு நீச்சல்
தடாகத்தில் மோகம்
தாகம் உனக்கெடுத்தால்
தவித்திடும் மக்களின் உயிரையல்லவா பருகின்றாய்
தனித்தமிழீழம் பெற்றுத்தருவாய் என்று
தன்நம்பிக்கை இல்லா உனது கூட்டம்
தவித்திருந்தது காத்திருந்தது
தண்ணிர் நிரம்பிய தொட்டியை காட்டி
தலைகுனிய வைத்து விட்டாய்
தங்கத்தலைவா என்று உனை போற்றி
தகரங்கள் எல்லாம் சிந்தை குலைந்து
தரங்கெட்ட செயலில் இறங்கினர்
தனையனுடன்டன் நீ நீராடுகையில்
தலைவர்கள் எல்லாம் புன்னகைத்தனர்
தமிழினத்தை அசுத்தப்பட வைத்தவனே
தாகம் அடங்கியதா..உனக்கு
தவிக்கும் மக்களை பார்…….
தலைகனத்தை சுமந்தவிட்டாய்
தமிழீழம் எமக்கு வேண்டாம்
தற்கொலை படையாய்
தரைக்கு தாரை வார்த்த
தளிர்விட்ட குஞ்சுகளை மீளவும்
தருவாயா…. எப்போது??
தமிழர்கள் தலைகள் என்ன மொட்டையா
தவிடு வைத்து தேய்ப்பதற்கு
தளராத உறுதி கொண்ட எம் மக்களை
தரங்கெட்ட தகடு என நினைத்து
தனிக்கணக்கு போட்டு விட்டாய்..
தரவில்லை பதில் இன்றுவரை
தலைபிளக்க பறிகொடுத்தாய்
தனியாக தரணிதனில் அம்மணமாய்..!!!
இம்சை இலக்கிய கவியரசன்.. இலங்கைமாணிக்கம்
அதிரடி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment