உயிராபத்தை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டதை அடுத்து ஜனாதிபதியின் புகழ்பாடும் ஷமாமன்னர்| என்ற பாடல் ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டுள்ளது
மஹிந்த ராஜபக்~வின் ஆசைக்கும், மகிழ்ச்சிக்குமாக நாளொன்றுக்கு இரண்டு மூன்று முறை, அரச ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட ஷமாமன்னர்| என்ற பாடல் ஒளிபரப்பாவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியினால் அரச ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பல காலமாக ஹம்பாந்தோட்டையில் ராஜபக்~ பரம்பரைக்கும், சிறிய வயது முதல் மஹிந்த ராஜபக்~விற்கும் சோதிடங்களைக் கூறிவந்த, புந்தலநிலமல என்ற பிரதேசத்திலுள்ள பௌத்த துறவிகளின் மடத்தில் வாழ்ந்துவரும் சோதிடரான பௌத்த பிக்கு வழங்கிய ஆலோசனையின்படியே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்தப் பாடலில் வெளிப்படுத்தப்படும் புகழாரம் உகந்தது அல்லவென பௌத்த பிக்கு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அந்தப் பாடலைப் பாடும் பாடகி மேல் இருக்கும் ஈர்ப்பு காரணமாகவும், ஷமாமன்னர்| என்ற வார்த்தையைக் கேட்பதற்கான ஆசையும், அந்த சோதிடரின் அறிவுரையைப் புறந்தள்ளிவிட்டு எந்தநிலையிலும் அதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி முனைப்புக்களைக் காட்டவில்லையென ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் டுயமெய நேறள றுநடி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிருப்தியடைந்த குறித்த பௌத்த பிக்கு, அண்மையில் மீண்டும் தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளார். ஷமாமன்னர்| என்ற பாடல் வஸ்கவி எனப்படும் தீங்கான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு இணையானது எனவும், இந்தப் பாடல் தொடர்ந்தும் ஒளிபரப்பாகுமானால் உயிருக்கும் ஆபத்து ஏற்படக் கூடும் என அந்தப் பிக்கு கூறியுள்hளர்.
எதிர்வரும் காலங்களில் பாரிய கிரக தோ~ங்கள் இருப்பதால், இதுகுறித்து உரிய புரிந்துணர்வோடு செயற்படுமாறும், அவ்வாறு இல்லாது, நினைத்தவாறு செயற்பட்டால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் எனவும் கூறி அந்த பௌத்த பிக்கு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
இந்த எதிர்வு கூறலின் பின்னர் மிகவும் குழப்பமடைந்த ஜனாதிபதி ஷமாமன்னர்| என்ற அந்தப் பாடல் ஒளிபரப்பாவதை உடனடியாக நிறுத்துமாறும், ஷமாமன்னர்| என்ற வார்த்தையை எந்தவொரு இடத்திலும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அரச ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்பின்னர் புந்தல தேரரைத் தொடர்புகொண்டு ஜனாதிபதி அவரின் சொற்படி நடப்பதாகக் கூறியுள்ளார்.
தனக்கிருக்கும் தோ~ங்களைத் தவிர்ப்பதற்காக எவ்வாறான பரிகாரப் ப+ஜைகளைச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி அவரிடம் இதற்கு முன்னர் ஆலோசனை கோரியிருந்தார். இந்தக் கிரக தோ~ங்களை ஓரளவிற்கேனும் குறைக்க வேண்டுமாயின் தலதா மாளிகைக்கு, யானைக் குட்டியொன்றை நேர்த்திக்கடனாக செலுத்துமாறு அந்தப் பிக்கு கூறியுள்ளார்.
இதன்பின்னரே, பின்னவல யானைகள் சரணாலயத்திலிருந்து இரண்டு யானைக் குட்டிகள் கடத்திச் செல்லப்பட்டு தலதா மாளிகைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டதாகவும் எமக்குத் தகவல் வழங்கிய ஜனாதிபதியுடன் நெருக்கமான நண்பர் மேலும் தெரிவித்தார்.
அரச தலைவர்களுக்கு ஏற்படும் கிரக தோ~ங்கள் மற்றும் யானைக் குட்டிகள் தொடர்பாக இவ்வாறான செய்தியொன்று ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்திலும் வெளியாகியிருந்தது. தலதா மாளிகையில் இருக்கும் ஷராஜா| என்ற யானைக்கு உயிர் இருக்கும் வரை ஜே.ஆர். ஜயவர்தனவும் உயிராபத்தின்றி இருப்பார் என சோதிடர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்பட்டுவந்த ஜே.ஆர்.ஜயவர்தன, ஷராஜா| என்ற யானைக்கு ஏதேனும் நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக சிகிச்சையளிக்கும் வகையில், உலங்குவானூர்த்தி மூலம் வைத்தியர்கள் குழுவொன்றை அனுப்பி சிகிச்சையளித்து வந்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment