பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கை இராணுவத்தின் உதவி தேவை - பிலிப்பைன்ஸ்
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் என பிலிப்பைன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை எவ்வாறு யுத்த ரீதியாக தோற்கடிக்க முடிந்ததென்பதனை இலங்கை உயர் இராணுவ அதிகாரி பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளார்.
தற்போது பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவ மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க விளக்கமளித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்பொன்றை இல்லாதொழிக்க வெளிநாடொன்று முதல் தடவையாக இலங்கையிடம் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment