இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010

Tuesday, September 8, 2009

பொழுது போகாதவர்கள் போராளி எனும் பெயரில் வெளியிடும் அறுவை அறிக்கை

வரும் நாட்களில் எங்களின் பயணப்பாதை மாறலாம். ஆனால் இலக்கு ஒன்று தான்!--ஒரு போராளியின் மடல்




என் இனமே என் சனமே என்னை உனக்குத் தெரிகிறதா......? எனது குரல் புரிகிறதா..? வணக்கம் எனது இரத்த, இன, மொழி பேசுகின்ற உறவுகளே. இங்கு எங்களை விட்டு தூரப் போய்க் கொண்டே

இருக்கிறீர்களோ? தெரியவில்லை உங்களைப் பிணைத்திருக்கும் பாசக்கயிறுகளையா? அல்லது உங்களைச் சுற்றி ஏற்பட்ட மாய வலைகளையா? என்பது எங்களுக்கு விளங்கவில்லை என் தமிழ் உறவுகளே. உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

எதிர்காலம் பற்றிய பல கனவுகளுடன் சிறகடித்த எமது தேசியம் நசுக்கப்பட்டு இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கையில் நீங்கள் எங்கு நோக்கி பயணப்படுகிறீர்கள் என்பதில் ஒரு தெளிவின்மை காணப்படுகின்றது. எங்கே எங்கள் மாவீரர்களையும் வீரர்களையும் தேசத்தின் விடுதலைக்காக உழைத்த இன்னோரன்னரையும் பழித்துரைத்த புத்திஜீவிகளே வணக்கம். இப்போ நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கிறீர்கள்?

உங்களை நினைக்கும் போது சில சந்தர்ப்பங்களில் எரிச்சல் தான் வருகிறது. உங்களை நீங்களே புத்திஜீவிகள் என்றழைத்துக் கொண்டு உங்களுக்கு நீங்களே அடைமொழிகளையும் பட்டங்களையும் பெற்று சமுதாயத்தில் உங்களை மனிதர்களாக நிலை நிறுத்த முயற்சி செய்யும் பெருமக்களே! உங்களை ஒரு கணம் வணங்குகின்றேன்.

முடிந்தால் என் தாய்நாட்டுக்காக எதையாவது செய்யுங்கள் அல்லது வாய்மூடி அமைதியாகி விடுங்கள். உங்களைப் போன்றோரால் தான் எங்கள் தாய்த்திருநாட்டுக்கு இந்த நிலை. உங்கள் மேதாவித்தனத்தாலும், கோழைத் தனத்தாலும் என் தாய் நாட்டை இன்னோரன்னவனுக்கு தாரை வார்க்க நீங்கள் எடுக்கும் பெரும் முயற்சி அப்பட்டமாக தெரிகிறது. அதனைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கமுடியாது.

உங்களால் வெறும் அரசியல் மட்டும் தான் செய்யமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கிடையில் தலைமைக்கான போட்டிகள். பண ஆசைகள் காட்டி கொடுப்புகள் எனத் தொடரும் இழுபறிகள்.

நாங்கள் இழந்தது போதும் உங்களால் தான் எங்களது கட்டுப்பாட்டு நிலங்களை நாம் இழந்தோம். அந்த சந்தர்ப்பத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தற்போதும் நீங்கள் நல்லவற்றை செய்வதாக எண்ணிப் பிறநாடுகளுக்கு எங்களைப் பிடிக்காமல் போக போராட்டம் தான் காரணம் என தப்பான அபிப்பிராயங்களை மீண்டும் நிறுவ முயற்சி செய்கிறீர்கள். உங்களிடம் கேட்பது ஒன்று தான்.

போராட்டம் என்பது வெளிநாடுகளில் வசதியாக வாழ்ந்து கொண்டு கூட்டங்கள், ஒன்று கூடல், விழாக்கள் என நடத்துவதல்ல. அல்லது வெளிநாடுகளில் வாழும் மக்களுக்காக மட்டுமல்ல. தாயகத்தில் வாழும் எம் இரத்த உறவுகளுக்கும், தாய்நாட்டைப் பெற்றுக் கொள்ளவும் தான் ஆயுதம் தூக்கினோம். அதிலிருந்து நீங்கள் தூரப் போய் இருக்கலாம். ஆனால் விலகி இருக்க முடியாது. எப்படியும் ஒரு வகையில் நீங்கள் பிணைக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

அல்லது நீங்கள் அகிம்சை வழி என்று சொல்லிக் கொண்டிருக்க, உங்களுக்கு ஆட்டிக் அல்லது அந்தாட்டிக்காவில் கூட ஒரு சிறு குடிசை கூட இந்த உலகு உங்களுக்கு வழங்காது. நாங்கள் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டியவர்களல்ல. எங்களுக்கான நாட்டுக்காக நாங்கள் உரிமையுடன் உணர்வுடன் போராடுவோம் இறுதிவரை.

இறுதிவரை என்பது தனி ஒருவனின் வீர மரணம் அல்ல. இந்த உலகின் மரணம் மட்டும் இந்தப் பூமி வாழும் வரை எங்கள் நிலங்களை நாங்கள் யாரிடமும் விட்டுக் கொடு;க்க முடியாது. எனவே எமது மக்களுக்கு இப்படியான சல சலப்புகளை ஏற்படுத்தி அவர்களை பிளவு படுத்தி சிங்களவனின் இன வெறி அழிப்பிற்கு துணை போகாதீர்கள். தனி ஒருவன் என்ற பதத்தை வைத்து தப்பான அபிப்பிராயத்தை வளர்க்க வேண்டாம்.

தாயகப் போரையும் சம நேரத்தில் கொண்டு செல்வதால் மட்டுமே எங்களின் உரிமையை நாள்கள் பெற்று சரியான இடத்தில் சரியான விதத்தில் எங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்து வலுச் சேர்க்க வேண்டுமே ஒழிய காலை வாராதீர்கள். சொந்த நாட்டுப் பிரச்சனையைவைத்து அரசியல் ஆதாயமோ அல்லது பணத்தையோ சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள். களத்தில் நிற்கும் போராளிகளுக்கு வலுச்சேருங்கள். அவர்களுக்கு பின்பலமாக நீங்கள் இருந்து செயற்பட வேண்டும் என்பதே எங்கள் அவா. இது வரை காலமும் நீங்கள் வளங்கிய ஆதரவையும் தனி நாட்டுக் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுக்க உங்களின் ஆத்மபலம் எங்களுக்கு வேண்டும். அதனைத் தொடர்ந்தும் எங்களுக்கு நல்குவீர்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளோம்.

உங்களில் ஒரு பகுதியினர் மட்டும் கூட்டம் கூடி பேசுவதால் பயனில்லை. எல்லாத் தமிழ் உறவுகளையும் ஒன்று சேருங்கள். எங்களை எல்லா தமிழர்களையும் ஒன்றிணைக்கும் வண்ணம் அமைப்புக் களையும் சங்கங்களையும் அந்தந்த நாடுகளிலேயே அமையுங்கள். மதத்தால் நிறத்தால் வேறுபட்டு இருக்கம் எமது சமூக கட்டமைப்பை தமிழீழம் என்ற ஒன்றுக்காக தனி நாட்டுக்கான கட்டமைப்புக்களை கட்டும் விதமாக அமையுங்கள். அவை மதங்களைத் தாண்டி எமது இனத்திற்கான சேவையைப் புரியட்டும். அதற்கு உதவி செய்யுங்கள். உருவாக்குங்கள். அந்த உன்னதமான ஓரணிதிரண்ட புலம் பெயர் தாயக மக்களின் கோரிக்கைகளை சர்வதேசத்தின் முன் வையுங்கள். உங்களின் உறுதியான நிலைப்பாட்டை சர்வதேசம் எங்கும் பிரச்சாரப்படுத்துங்கள்.

வெறுமனே நாங்கள் யூதர்களைப் போல, எனச் சொல்லி நப்பாசை படாதீர்கள். யூதர்களை இந்த உலகில் இருந்து பிரித்துப் பார்க்க முடியா வண்ணம் அவர்கள் ஒன்றித்து போய் இருக்கிறார்கள். நாங்கள் அப்படி இருக்கிறோமா? மற்ற சமூகங்கள், நாடுகள் எங்களில் தங்கி நிற்கின்றனவா? என்பதை யோசியுங்கள். அப்படி ஒரு உயர்ந்த நிலையில் தமிழன் இருக்கும் போது, இந்த உலக பொருளாதாரம் சரிந்துவிடும் என்னும் நிலை வரும் போது தான் எங்களை இந்த உலகம் கண்கொண்டு பார்க்கும் நிலை ஏற்படும்;.

அதற்காக அந்தந்த நாடுகளில் நீங்கள் தனிப்பட்டு அல்லாமல் எல்லாமே மக்கள் சொத்துக்களாக கூட்டிணைந்து விமான சேவை, கப்பற்துறை, தொலை தொடர்புத் துறை தொலைக்காட்சி, வானொலிப் பணிகள் என இன்னோரன்ன பணிகளைக் கட்டியெழுப்புங்கள். எங்களுக்கான நிலங்கள் மீட்கப்படும் போது அவற்றை தாய் நாட்டுக்கு கொண்டு வர முடியும். அப்படி ஒனறிணையும் பட்சத்தில் எங்களது நிதி எங்களிடம் இருக்கும்; அவற்றை யாரும் சுரண்டி விட முடியாது. மக்களின் நிதி மக்களிடம் இருக்கும். அவற்றை வைத்து வேண்டுமானால் நாங்கள் சந்திரனையும் விலைக்கு வாங்கலாம். மற்றவர் எல்லாம் அதன் பின் தூசு தான் எமக்கு.

அதை விட்டு வெறுமனே தமிழர்களை மட்டும் குறிவைத்து உங்கள் வியாபாரங்களை பெருக்கி அதை வைத்து சீரில்லாத இலங்கையில் முதலீட்டையோ அல்லது உங்கள் வீட்டு வாசலையோ கட்டி கொண்டாடுங்கள். யுத்த பூமியில் உங்கள் ஒரு சேமிப்பையும் காண முடியாது. உங்கள் வாழ் நான் பூராகவும் உழைத்ததும் உண்டதும் தான் மிச்சமாக இருக்கும்;. வேறெதுவும் மிச்சமிருக்காது. எனவே எங்கள் பாரம்பரீயத்துடன், எங்களின் சந்ததிக்காக எதையாவது அறிவு பூர்வமாக செய்யுங்கள். அது எல்லா வழிகளிலும் எல்லா இன மக்களையும் கவரும். அல்லது சார்ந்து இருக்கும் வண்ணம் அமையுங்கள். எங்களுக்கென தனி பரப்புரையை செய்யுங்கள். அதையெல்லா ஊடகங்கள் வாயிலாகவும் செய்ய முயற்சியுங்கள். அதன் மூலம் நீங்கள் அடைய விரும்பும் இலக்கை எட்டலாம்.

அதை விட்டுவிட்டு ஒவ்வொருவரும் தனித்து மக்களைப் பிரித்து என்ன செய்கிறீர்கள். யாருக்காக செய்கிறீர்கள் என்பதை யோசித்து செயற்படுங்கள். இதற்கு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் விதிவிலக்காக முடியாது. மக்களின் துயர் துடைக்க வேண்டிய வேலைகளை உடனடியாக செய்யுங்கள். பருவ மழை பெய்ய முன்பே நாளுக்கு 100பேர் வீதம் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மரண சடங்குகளுக்கா நீங்கள் உதவி செய்யப்போகிறீர்கள்?
நாளுக்கு நாள் காணாமல் போகும் மக்களின் தொகை சிங்களவனுக்கு மட்டுமே தெரியும். குடும்பங்களை விட்டுப் பிரிந்து இருக்கும் மக்களின் தொகையை கூட்டிப்பாருங்கள். விளங்கும். எவ்வளவு மக்களை நாம் இழந்திருக்கிறோம் என்பதை, அவர்களிடம் கணக்குகள் இருக்கின்றனவா என்பது கூட கேள்விக் குறிதான். அப்படி இருப்பின் ஏன் சர்வதேச செஞ்சிலுவைகள் கூட இத்தனை ஆயிரம் உறவுகளைப் பற்றிப் பதிவைக் கூட இணைத்து வைக்க முடியவில்லை. எல்லா முகாம்களும் ஒரு சில கிலோமீற்றர் பரப்பளவுக்குள் தான் காணப்படுகின்றன?

வன்னியில் 480,000 மக்கள் வாழ்ந்தார்கள். இன்று 330,000 கூட கணக்கிலில்லை. அதிலும் பல குளறு படிகள். மிகுதி மக்கள் எங்கே என்பதை யாரும் இது வரை வாய்திறக்கவில்லை. ஏன்? சர்வதேசத்தின் கதவுகளில் தட்டவேண்டியது யார்?

தமிழ் எம்பிக்கள் வாய் கிழியக் கத்துவதுடன் சரி. அவர்களே என்ன செய்வது என்ற நிலை அல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள். எந்த வழியை பின் பற்றுவது என்பதில் அவர்களுக்குள் நிறைய ஐயப்பாடுகள் எழுகின்றன போலும். எனவே இதற்கான தீர்வினை நீங்களே எடுக்க வேண்டும் எங்களுக்கான எந்த அரைகுறை தீர்வையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இவ்வளவு காலமும் போராடினோம். அதே போல் அந்த மக்களின் சொந்த நிலமல்லாத காட்டு நிலங்களில் அவர்களைக் குடியேற்றுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் தமிழர் நிலங்களை, சிங்களவன் சூறையாடுவதற்கு நாங்களே வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்களாவோம். எனவே அவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதற்காக பாடுபடுங்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிது யார்? ஐ. நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அமெரிக்காவோ, சீனாவோ, ரஷ்யாவோ இல்லை. புலம் பெயர் வாழ் மக்கள் நீங்கள் தானே! அதை விட்டு விட்டு களியாட்டங்களையும் நிகழ்வுகளையும் நடத்துவதால் யாருக்கு லாபம்? கைது செய்யப்பட்ட போராளிகளின் பட்டடியல் 20,000 தை தாண்டிவிடும் போல் உள்ளது. ஆனால் உண்மையை அறிய கூடக் உங்களாலோ சர்வதேசத்தாலோ முடியவில்லை. அதற்கு நீங்கள் வலுச் சேர்கலாமா? எங்கள் மக்கள் என்ன ஆடு மாடுகளா? சிங்களவன் காலால் உதைத்து விரட்ட, வெறி கொண்ட வேங்கைக் கூட்டம் கைகால்கள் கட்டப்பட்டு சிங்களவன் கால்பட்டு சாவதா? நிராயுதபாணியாக துப்பாக்கிக் குண்டுகளுக்கு நாளுக்கு நாள் இரையாக நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கிறீர்கள்.

நாங்கள் சீறும் வேங்கைக் கூட்டம் என்பதை நாங்கள் நரூபித்திருக்கிறோம். இருந்தும் ஏமாந்தோம். அதற்கு நீங்களும் ஒரு காரணம் எல்லோரையும் நம்பி எங்கள் உறவுகளை நட்டாற்றில் விட்டுவிட்டீர்களே? எங்களது கைகளையும் கால்களையும் அவிழ்த்து விட்டு, எந்த சிங்களவனாவது எங்களுக்கு எதிரே துப்பாக்கியை நீட்டட்டும் பார்க்கலம்;.

எமது மக்கள் போரில் வீழ்ந்து கொண்டிருக்க உணர்வுள்ள எல்லா மக்களையும் பிழையாக வழி நடாத்தினீர்களோ என்பது பெருத்த சந்தேகம். உண்மையில் நீங்கள் எல்லோரும் பொம்மைகளோ என்ற சந்தேகம.; தற்போதய நிலையில் பலர் பல நாடுகளுக்கு பொம்மைகள் தான். ஏனெனில் சுயமாக தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை.

எனது கடந்த மடலுக்கு பல அபிப்பிரயா பேதங்கள் எழுந்தன. இருந்தும் அதற்கு நாம் மதிப்பளித்தோம். ஏனெனில் சில நேரங்களில் எங்களின் முடிவுகள் தவறாக போய்விடலாம்; என்பதை அமைதியாக உங்களின் கபடி ஆட்டத்தை பார்த்துக் கொண்டு இருக் வேண்டி ஏற்பட்டது. ஆனால் ஆட்டம் என்னவோ ரசிக்கும் படி அமையவில்லை என்பது உண்மை. உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் பல விடயத்தைப் போட்டு உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. உங்களுக்கு அதீத தெளிவை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனாலும் உங்களை பிழையாக பிறர் வழிடத்தா வண்ணம் காப்பாற்ற, போராளிகளாகிய எமக்கு கட்டாய கடமையாக இருக்கிறது இப்போ. எல்லாம் பரகசியமாக தான் இருக்கிறது. அதை வைத்தத் தான் இலங்கை இராணுவம் தங்கள் நிகழ்ச்சி நிரலை அமைத்து இருக்கிறது. ஆனாலும் எங்கள் கட்டமைப்புகளை சிதைக்க இந்த சின்னப்பயல் சிங்களவனால் முடியாதுஎன்பதை நீங்கள் புரிந்த கொள்ளவேண்டும்;.

மாற்றுக்கருத்துடையவர்களே உங்களை இரு கரம் நீட்டி அழைக்கிறோம். உண்மையில் நீங்கள் ஈழம் என்ற தாய் நாட்டை நேசிக்கும் ஒரவராக இருந்தால் உங்கள் அபிப்பிராய பேதங்களை மறந்து சிதறடிக்கும் சிந்தனை கொண்ட சிங்களவனை சிதறடிக்க ஒன்றிணையுங்கள். அது உங்களால் முடியும். உங்கள் சக்தியை நீங்களே துர்ப்பிரயோகம் செய்கிறீர்கள் என்பதை கொஞ்சம் யோசியுங்கள். புரிவது போலிருந்தால் உங்கள் கைகளையும் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த நவீன உலகம் நிச்சயம் எங்களை ஏற்றுக் கொள்ளும்.

எங்களுக்கு என்ன எனப் பருவகால விடுமுறையை நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கும் பலரை பல முகங்களில் காணலாம். உண்மையில் உங்களுக்காக வெட்கப்டவோ வேதனைப்படவோ முடியவில்லை. ஏனெனில் நீங்கள் உங்களின் உண்மையான சுய முகங்களை சமுதாயத்திற்கு இப்போதுதான் காட்டுகிறீர்கள். இப்படி எங்களுக்கு ஒரு வீழ்ச்சி இல்லாவிட்டால் உங்களை போன்ற பச்சோந்திகளை நிச்சயம் அடையாளம் காண்பது என்பது கொஞ்சம் சிரமமான காரியம். கும்பலில் கோவிந்தா போட்டு விட்டு நீங்கள் உங்கள் பாட்டில் போய்விட்டீர்கள். ஆனால் இப்போ எல்லா முகங்களையும் அடையாளம் காணமுடியுமென நினைக்கின்றேன். தற்போது ஈழத்தில் நாலாங் கட்ட ஈழப் போர் தோல்வியில் முடிந்து இருக்கிறதொழிய நீங்கள் எண்ணுகிறது போல் அல்லாமல் மீண்டும் பெரும் போர் தொடரப் போகிறது. அதை நீங்கள் காணத்தான் போகிறீர்கள். அதில் நாம் தோற்க முடியாது ஏனெனில் நாம் வெற்றிப் பரம் பரை. முதுகில் குத்துவது சிங்களவனுக்கு பழக்கமாகிப் போயிருக்கலாம். அதற்காக நாம் நெடுக முதுகைக் காட்டமுடியாது.

தற்போது எங்கள் படையணிகள் மரபு நிலையிலிருந்து கெரில்லா நிலைக்க மாற்றம் பெற்ற இருக்கின்றனவே ஒழிய எங்களை அழிப்பதென்பது முடியாத காரியம்; எனவே எங்கள் தலைமையின் தொடர்புகள் அற்று இருப்போரும், குழப்பத்தில் இருப்போரும் நீங்கள் சுய கட்டுப்பாட்டுடனும் ஓர் திடமான நம்பிக்கையுடனும் போராட்டத்தை தொடருங்கள். உங்களுக்கான இலக்கை தீர்மானித்து அதனை வெற்றிகொள்ள உங்களுக்கேற்ற வழிகளை பின்படுத்துங்கள். நீங்களும் உடைந்து எங்களின் அணிகளையும் சிதைக்காமல் செயற்படுங்கள். எதிரிக்கு இனி நீங்கள் சிம்மசொப்பனமான இருக்கப் போகிறீர்கள். நாளடைவில் நீங்கள் எங்கள் எல்லோருடனும் இணையும் காலம் வரும்;. எனவே தாக்கிவிட்டுத் தப்பிக்கும் கெரில்லா முறையை பின்பற்றுங்கள். அதை இந்த சிங்களவன் எந்த நாட்டைவைத்து அடக்குவானென்று பார்க்கலாம்;. எனவே நீங்கள் எல்லோரும் கெரில்லாவாக மாற வேண்டிய சந்தர்ப்பம் இது என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்பகிறேன்.

பிரபலமான எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூடி புலிகளைத் தோற்கடித்த பின் அல்லது அழித்தபின் என்ற தோரணைகளில் தங்கள் கட்டுரைகளை வரைகிறார்கள். அவர்களுக்கு காலம் சிறந்த பாடத்தைக் கொடுக்கும். புலிகளை அழிக்கவோ தோற்கடிக்கவோ இந்த உலகால் கூட முடியாது.

தோற்பது என்பதைக் கூட நாங்கள் தான் தீர்மானிக்கமுடிமே ஒழிய எதிரி அல்ல. போரில் நாங்கள் தோற்று இருந்தால் இன்று அல்ல என்றும் தமிழர்களுக்கு என்று விடிவு காலம் பிறக்கப்போவதில்லை. அந்த விடிவை சுபீட்சமான வாழ்வை தமிழருக்கு புலிகள் கொடுத்தார்கள். மீண்டும் கொடுப்பார்கள். அதற்கான காலத்தை நாங்கள் ஒன்றிணைந்து கனியவைப்போம்.

சென்ற போரில் எல்லாவற்றையும் இழந்து வெறுமையாக முகாம்களில் வாழும் மக்களை எவ்வளவு சுலபமாக மறந்து விட்டீர்கள் என்பது பெரும் வேதனை. வெளியில் இருக்கும்; எந்த ஒரு தமிழனையும் விட உண்மையான தமிழர்கள் என நெஞ்சு நிமிர்த்திக் கூறிய பெருமையை பெற்றார்கள்.

அந்த மக்களுக்கு. “எனது தாய்மார்களே! என்னருமைத் தந்தைகளே! உடன் பிறவா எனது சகோதரர்களே! சகோதரிகளே! வீரர்களே! என்வீராங்களைகளே! உங்களை ஆரத்தழுவ முடியவில்லை. என்பதை எண்ணி எனது நெஞ்சம் வெடித்துவிடும். உங்கள் தலை வணங்கா குணத்திற்காக மீண்டும் மீண்டும் பிறந்தாலும் உஙகளுக்காக இந்த உலகத்தையே எதிர்த்தாகினும் போரிட்டு சாவோம். அதுவே உங்களுக்காக நாங்கள் தருகின்ற உன்னதமான பரிசு. அது ஈழம் என்ற ஒன்று தான். இது உங்களுக்கு விரைவில் கிடைக்க எங்களுக்கு மாவீரர் உதவி புரிவார்; உலகெல்லாம் வாழும் தமிழர்களே நீங்கள் தமிழர்களாக இருந்தால் அந்த மக்களுக்கு உணவு உடை உறையுளைக் கொடுங்கள். அதை விட்டு உங்கள் உறவுகளை மறக்கும் அளவிற்கு உங்கள் மனங்கள் என்ன மாசடைந்து விட்டனவா?

கற்கள் கூட பெறுவதைத் திரும்பக் கொடுக்குமாம். உங்களால் ஏன் முடியவில்லை. ஈழப்பிரச்சனையைக் காரணம் காட்டி வைத்து பிழைப்பாயும் பாதுகாப்பாயும் தேடிய எனது உறவுகளே இயன்ற மட்டும் நீங்கள் வசதியான வாழ்வில் கட்டுண்டது எப்படி? உங்கள் தாய்வயிற்றை உங்களால் மறந்து விடத்தான் முடியுமா? எனவே அந்த மக்களின் வாழ்விற்கு வாழ்வாதாரத்திற்கு சொந்த நிலங்களில் குடியேற உண்மையாக உழையுங்கள். அல்லது வணங்காமண் கப்பலில் வந்த பொருட்களை வைத்து அரசியல் செய்யும் சிங்களவர்களுக்கு முண்டு கொடுக்காதீர்கள். இதை வைத்து அரசியல் செய்யும் தென்னிந்திய ஆட்சியாளர்களின் அன்புப் பரிசுகள் அந்த மக்களைச் சென்று அடைவதில்லை. அவை பத்திரிகை விளம்பரங்களைத் தான் அதிகம் ஆக்கிரமிக்கின்றன. சில நேரம் சிங்களவனின் கோரப்பசியை சில நேரம் ஆற்றலாம். எனவே உங்கள் மக்களை நீங்கள் கைதூக்கி விடுங்கள். அவற்றை நீங்கள் எந்த வழியில் செய்தாலும் அவை அவர்களை அடைவதை உறுதிப்படுத்துங்கள்.

வணங்காமண். மக்களை சென்றடைய செஞ்சிலுவை சங்கம் முட்டுக்கல்லாக இருப்பதாக தகவல். எனவே நாங்கள் எங்ளை நம்புவோம். பிறரை தூர ஒதுக்குவோம்.
அது துறைமுகத்தில் கிடப்பது பான்கிமூனுக்கு கூடத் தெரியவில்லை. இன்னமும். மாயை உலகைப் பின்பற்றாதீர்கள். எங்கள் உணவுகளை கைப்பற்றிய இந்தியா அதை இதுவரை எங்கள் மக்களிடம் சேர்க்கவும் இல்லை. அதற்கான தனது நல்லெண்ணத்தை கூட வாய்திறந்து செய்ய முன் வரவில்லை.

ஆனால் இந்தியாவிலிருந்து அவர்கள் சாப்பாடு அனுப்பப்போகிறார்கள் என்பது மட்டும் விளம்பரமாக சொல்ல நா கூசவில்லை. வன்னிக்கு 200,000 மக்களுக்க 2,000பேர் தான் என சொல்லி உணவு அனுப்பும் போது இந்தியாவும் சர்வதேசமும் ஆமாப்போட்டவர்கள்தான். ஏன் தற்போதும் முகாம்களுக்கு மேலே ஹெலியில் பறக்கும் போது கூட அங்கு சாக்கடைகளும் வாய்க்கால்களும் நாற்றமெடுக்குமே. அது கூட அவர்களுக்கு மணக்கவில்லை போல் தெரிகிறது. ஏனெனில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் அறிந்து கொள்ளும் மார்க்கமாகவில்லை.

அறிந்தும் அறியாதவர்களாக நடிப்பவர்களை எப்படிப் பின்பற்றுவார்கள். திறக்காத கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்காதீர்கள். உடைத்துத் திறவுங்கள். சரியான நேரத்தில் சரியான எதுவும் சரியாக எதுவும் அமைந்து விடுவதில்லை. எனவே உங்களைக் கண்டு கொள்ளத் தவறுபவர்களின் காலை நக்கிக் கொண்டு இருப்பதை விடுத்து அனுசரிப்பவர்களுக்கு சமனாக நடவுங்கள்.

மேற்குலகம் என்ற மாயைக்குள் உங்களைக் கட்டிப் போட நடக்கும் சதிக்குள் சிக்கி விடாதீர்கள். அதிலும் அமெரிக்கா என்ற சந்தர்ப்பவாதிகளையும் இந்தியா என்ற பச்சோந்தி நாட்டையும் விட்டு விட்டு வேண்டுமானால் சீனாவுடன் ரஷ்யா, இஸ்ரேல் என எல்லா நாடுகளுடனும் உங்களின் கரங்களை பலப்படுத்துங்கள். அது ஆசியப்பிராந்தியத்தில் ஓர் புது மாற்றத்தைக் கொண்டு வரும். வெறுமனே இந்தியாவை நம்பியோ அல்லது இந்தியாவுக்கு பயந்தோ இருந்து விடாதீர்கள். இந்தியா என்பது பல பேரரசுகளை உள்ளடக்கிய நாடுதான். அதில் தமிழ் பேரரசுகள் மூன்று.

இப்போது தான் தமிழனுக்கு என்று ஓர் அரசு இல்லாமல் போனால் நாங்கள் பல நாடுகளில் இருந்தும் தமிழனுக்கு என்று ஒரு நாடில்லாமல் எங்கள் சொந்த நிலங்களையே இழந்து கொண்டு இருக்கிறோம்;.

வெள்ளையன் எங்களை ஒற்றுமை வரக் கூடாது என்பதற்காகவே பல மாதங்களை உருவாக்கி கொடுத்து இருக்கிறான். நன்றியோடு நடந்து கொள்கிறோம்.. ஆனால் அவர்கள் எங்களை சீரழித்ததை பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை.

அசோக சக்கரவர்த்தி பல நாடுகளில் வென்று மாபெரும் சாம்ராச்சியத்தை உருவாக்கி அதற்கு ஏற்ற மக்களை பிளவு படுத்தாமல் தனது ஆட்சியை கொண்டு போகவே தேர்ந்தெடுத்த மதம் தான் புத்த மதம். அதை அவனுக்கு கீழே இருந்த எல்லோரும் பின் பற்றினார்கள். தமிழனுக்கு பயந்த தேவநம்பிய தீசனும் தானாக சரணடைந்து பெற்று கொண்ட புத்தமதம். பிறந்த நாட்டில் ஒளிந்து விட்து. ஆனால் அதை வைத்து புனையப்பட்ட கதையை வைத்து இன்று சிங்கள மக்களைக் கட்டிவைத்து ஓரணியில் திரட்டி வைத்திருக்கிறார்கள் தமிழனுக்கெதிராக.

இப்போது தாய் நாட்டில் எட்டப்பன் வேலை பார்த்து முடிந்து வெளி நாடுகளில் வாழும் தமிழர்களை குறிவைத்து நகர்கிறது புலனாய்வு வேலைகள். அதில் சிக்கி விடாதீர்கள். அமெரிக்கா சிங்களவனைக் கட்டுப்படுத்த தங்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்ள ஒரு பகடைக் காயாகவே எங்களைப் பயன்படுத்தியது. பயன்படுத்தும் அதைத் தான் இந்தியாவும் பிராந்திய நலன் என்று சொல்லிக் கொண்டு செய்கிறது. எங்களின் கட்டுப்பாட்டு நிலைகளில் சூறையாடி இன்னும் 10,000துக்கு மேற்பட்ட துருப்புகளை பல காரணங்களைக் கூறி கொண்டு போர் நடைபெற்ற நிலத்தில் இந்தியா நிறுத்தியிருக்கிறது.

சிங்களவன் காட்டுகின்ற மயானங்களுக்கும் விகாரைகளுக்கும் வரைபடம் கீறி காட்டிக் கொடுக்க அவர்கள் வரவில்லை. எங்களை அழித்து மீண்டும் எழ முடியாமல் அங்கு சிங்களவனையும் குடியேற்றி தனது ஆதிக்கத்தை செலுத்த எல்லா வழிகளையும் இந்தியா முயலுகின்றது. அதற்கு போட்டியாக பல சீனா முகாங்கள் வவுனியாவில் தென்பட தொடங்கியிருக்கிறது. இது எப்படியும் இந்தியாவுக்கு உறுத்தலான விடயம். ஆனால் உங்களின் விளையாட்டுக்களை எங்களின் நிலங்களுக்கு அப்பால் வைத்து கொள்ள சொல்லி வைக்க வேண்டியது எங்களின் கடமை.

அதே போல் தமிழ் முஸ்லிம் பிரச்சனைகளைக் கூறி அரசியல் நடாத்தும் பரதேசிகளுக்கு ஒன்றை சொல்லி வைக்க வேண்டும். இந்த தமிழ் முஸ்லிம் பிரச்சனையை சீரான முறையில் தொடக்கி வைத்து அவசரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தது என்னவோ இந்தப் பேரினவாத சிங்கள அரசுதான். இன்று அரசியலில் ஊன்றி இருக்கும் பலர் அதற்கு காரணம் யாழ்ப்பாண முஸ்லிம்களை பற்றி கண்ணீர் விடும் முதலைகளே.

உண்மையான காரணங்களை மக்களுக்கு சொல்ல விளையுங்கள். அதன் மூலம் இன மத நல்லிணக்கத்தைக் கொண்டு வந்து ஆராச்சிகளை செய்யுங்கள். மக்களை பகடைகளாக்கி அரசியல் ஆதாயத்திற்காக எதையும் பேசாதீர்கள்.

பல கோடிகளை அடித்து கொண்டு பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து இயக்க மரபை மீறி அதற்காகவே புலிகளோடு போரிட்டு புறமுதுகிட்டு ஒரு சிலருடன் இந்த முஸ்லிம்களின் வாழ்க்கையில் சந்தோசத்தைப் பறித்து முஸ்லிம் இனப் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த கருணா அதே முஸ்லிம் இனத்தவர்களால் காப்பாற்றப்பட்டு ஓடிப்போய் கலதாரி உல்லாச விடுதியில் கூட வந்தவரையும் விட்டு விட்டு ஓடிப்போன வரலாறு உண்டு;.

இப்போது எல்லாம் அவர் சொன்னார் நான் செய்தேன் என தலைவர் மீது கரி பூசும் கருணா முஸ்லிம்கள் பணத்தை கொள்ளை அடித்து அனுப்பி அதிக வரி அறவிட்ட பெருமையை தேடிக்கொண்டார். ஒரே நேரத்தில் இப்போது முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம்களிடம் அவர் பறித்த பணம் உயிர்கள் எல்லாம் இப்போது அரசியல் செய்வதற்காக சேர்த்த சொத்துக்கள் தான்.

நல்லவர்களை இந்த உலகம்; அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் தீயவர்களை எளிதில் பின்பற்றி விடுவார்கள். அதே போல் TRO மூலம் பணம் முகாம்களுக்கு வழங்கப்படவில்லை எனச் சொல்லும் முகாம்களுக்கான அமைச்சர் றிசாட் பதியுதீன் அரசு சாப்பாட்டுக்கே பிச்சை எடுக்கும் போது முகாம் வாழ் தமிழ் மக்களுக்கு பணத்தை அவர், மன்னாரில் கழுதை மேய்த்து கொண்டு வந்து கொடுத்தாரோ என்பது சந்தேகம்;

தனது சொந்தங்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் முகாம் மக்களின் வாழ்வாதாரங்களை கட்டி எழுப்புகிறேன் என சொல்லி வீதிகள் முகாம்கள் மற்றும் கட்டுமானங்கள் எல்லாவற்றையும் கொடுத்து கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு இருக்கும் ஒருவர் புனர் நிர்மானம் பற்றி பேசுகிறார்.

ஹக்கீமுடன் உள்ள பிணக்குகளுக்கு முஸ்லிம் தமிழ் பிரச்சனைகளை காரணம் காட்டி அந்த மக்களின் வேதனைகளில் குளிர் காய என ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்கள் முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை பிளந்து அதற்கு ஒவ்வொரு முஸ்லிம் பெயர்களை வைத்து இயக்கிக் கொண்டு மத வாத அரசியல் செய்கிறார்கள். இவர்கள் பேரில் இருந்த ஆயதங்களைத்தான் தற்போது ஆயத ஒப்படைப்பு என கிழக்கில் பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கொடுத்தெல்லாம் என்னவோ ஒல்லாந்தர் காலத்தில் வந்தவை. ஆனால் அவர்களிடம் தங்கமுலாமிடப்பட்ட நவீன ஆயதங்களில் எதுவுமே வரவில்லை என்பது ஆச்சரியமான விடயம்.

இதை முஸ்லிம் தலைமை புரிந்து கொண்டு தமிழ் மக்களோடு இணைந்து தாங்கள் அரசியல் நடவடிக்கைகளை கொண்டு செல்லும் போது தங்களுக்கான இட ஒதுக்கீடடையாவது பெற்றுக் கொள்ளலாம். அல்லது அரசின் பசப்பு வார்த்தைகளில் மயங்கினால் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற கூறி சிங்களம் இந்த முஸ்லிம் மக்களையும் ஒரு சிறுபான்மையினமே அல்லாமல் அவர்களை மதம் மொழி மற்றம் நிகழ்வுகள் கொண்டு போய் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படுவர்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் இடப்பெயர்வு தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை உண்டு பண்ணி அரசக்கு பலம் சேர்த்தது. பின்னைய முஸ்லிம் படுகொலைகள் மட்டக்களப்பில் கட்டவிழ்த்து விட்டு நிரந்தர முறுகல் நிலையை கருணா ஏற்படுத்தி இப்போது அரசுடன் தான் அவர் இருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மேல் சீற்றம் கொள்ளாமல் அது ஒரு தனி நபரின் பிழையான வரலாற்று பிழை என்பதை எமது இயக்கம் ஏற்றுக் கொள்கிறது. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது.

இருந்தும் எங்களோடு தோள் கொடுத்து போராடிய இறுதியாக ஆனந்தபுர சண்டையில் ஒரு கனரக இயந்திர சுடுகலனுக்கு சூட்டாளராக கடமையாற்றி வீரச்சாவைத் தழுவிய என் தாய் நாட்டின் விடுதலைக்கு உழைத்த முஸ்லிம் வீரனுக்காக வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த இடத்தில்.

ஆனாலும் அவரும் எங்கள் போராட்டத்தில் அவரைப் போன்ற பலருடன் நினைவுகூரத்தக்கவர்; அவரும் எங்கள் மாவீரச் செல்வங்களில் ஒருவர். அதே போல் ஈழத்திற்காக உயிர் கொடுத்த முஸ்லிம் சகோதரர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூருகின்றோம்; இனங்களுக்கிடையில் பிணக்கை ஏற்படுத்த நினைக்கும் சதிகாரர்களைத் தோற்கடிப்போம்.

பல ஆரம்பகாலப் போராளிகளில் முஸ்லிம்களின் பங்கும் அதிகம் இருந்தன. பின்னைய நாட்களில் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்குகள் அவர்களைப் போராட்டத்திலிருந்து பிரித்து செல்ல வழி வகுத்தது என்பதை இப்போதைய பல அரசியல் முஸ்லிம் தலைமைகளும் தலைவர்களும் ஏற்றுக் கொள்வார். எனவே இப்போதைய அரசியலைக் கொண்டு செல்லும் அவர்கள் உணர வேண்டும். கசப்புணர்வுகள் இரண்டு பக்கத்திலும் இருக்கின்றன. அவற்றை மறந்து ஒன்றிணையும் வண்ணம் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

“நல்லூரில நல்ல சனமப்பா அத எல்லா வெளிநாட்டுக்காரர்களும் பார்த்தவை. அதற்கு உதவிய டக்ளஸ் தொலைக்காட்சிக் காரர் கஸ்டப்பட்டு ஹெலிகொப்டர் எல்லாம் கொண்டு வந்து அசத்திப்போட்டினம். வாய் பிளந்து பார்த்த எங்கட சனத்துக்கு ஒன்று சொல்ல வேணும்.

யாழ்ப்பாணத்துச் சனம் சண்டை நடக்கேக்கைக்குள்ளயே ஒரு கொடி பிடிச்சதும் இல்லை. வாய் திறந்து கதைச்சதும் இல்லை. இப்பையும் முகாம் சனத்திண்ட சொந்தங்கள் யாழ்ப்பாணத்தில இல்ல எல்லாரும் வேற்றுக் கிரகத்திலிருந்து குடியேறினவை. அவைக்கு டக்ளஸ் மாமா தான் சாப்பாடு தண்ணீர் எல்லாம் கொண்டு போய்க் குடுத்து இவ்வளவு காலமும் காப்பாத்தினவர். அதால அவரக்கு எத்தினை கப்பல் ஓடுது என்டு தெரியுமா? அமைச்சர்கள் தான் கப்பல் ஓட்டவேண்டுமென்ற யாழ்ப்பாணத்திற்கு ஒரு எழுதாத சட்டம் இருக்குதுங்கோ.

அதால ஏ9 பாதையால போற சாமானுக்கு கொஞ்சம் விலை கூட. ஏனென்றால் இப்ப றோட் கொஞ்சம் நல்லாப் போடுறாங்கள் இராணுவ பாவனைக்காக. அதால விலை கூட. கப்பலால்தான் பாதுகாப்பாக கொண்டு போகலாம்.

மக்களை ஒரு மாயைக்குள்ள தள்ளி விட வேண்டும் எண்டதை இந்தியாவின்ர கை போல வடிவா செய்யும். இப்ப சங்கரியாரும் வந்து இருக்கிறார். அவர் தான் மக்களைக் காப்பாத்த வேண்டுமாம்; எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஆதாயத்துக்காக இவர்கள் என்னவும் செய்வார்கள். அதை இவர்களின் கடந்த கால அரசியலே சொல்லும். மக்கள் சொல்லத்தேவையில்லை. மக்களை சுதந்திரமாக கதைக்கக் கூட விடுறாங்கள் இல்லை. பிறகு எப்படி? சாப்பாடு நிம்மதியான நித்திரை எல்லாம்;.

இன்னும் வெள்ளை வான் எல்லாம் கலர் வானாக மாறி சமாதானத்தில ஓடின நிறுவனங்களின் பேரில் ஓடுது. மக்களெல்லாம் இப்ப நிறுவனங்களைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்கு.

அதே மாதிரி யாழ்ப்பாண மக்கள் பெரிசா வன்னிச் சனத்தை கவனிப்பதில்லை. ஏனெனில் அவர்கள் தான் போராடப் பிறந்தவர்கள். மற்றவர்களெல்லாம் குளிர்காயப் பிறந்தவை. இப்பவும் யாழ்ப்பாணச் சனத்தை கேளுங்கோ சாமான் விலை கொஞ்சம் 2000, 3000 ரூபாவில இருந்து 300, 400 குறைஞ்சு இருக்கு. அது அந்த சனத்திக்கு போதும். அது தான் இவ்வளவு காலமும் போராடிப் பெற முயற்சி செய்தாங்கள். இப்ப அதே யாழ்ப்பாணத்தில டக்ளஸ் மாமா கெண்டு வந்து தாரார்.

இதைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப் படவேண்டாம். ஏனெனில் வெளிநாடுகளில் எல்லாம் ஊர்வலம் போராட்டம் என நடந்த வேளை இலங்கையில எந்த இடத்திலையும் எந்தப் போராட்டமும் நடக்கயில்லை. அதைப் பற்றி எங்கட சனம் கவலைப்படவுமில்லை. ஏனெனில் தங்கள் சுக துக்கங்களை மட்டும் கவனிக்கும் நிலையில் மாற்றம் பெற்று வருகிறது தமிழினம் அதையும் மீறி யாராவது கிளர்ந்தெழுந்தால் அவையை சிறப்பாக கவனிக்க எங்கட தமிழ் இயக்கங்கள் சம்பளம் வேண்டிக்கொண்டு இருக்குதுகள். அதால வாய்பொத்தி கண்ணை மூடித்தான் நடக்க வேண்டியிருக்கு சனத்திற்கு.

அண்டை நாட்டு இரத்த உறவுகள் தீக்குளித்தனரே. போராட்டங்கள் நடந்தனவே. நாங்கள் என்ன செய்தோம். என எங்கட மக்கள் கொஞ்சமேனும் சிந்தித்தார்களா? என்பது கேள்விக்குறி தான். கரும்புலிகள் வாழும் தேசத்தில்தான் இப்படியும் இருக்கிறார்கள் என்பதையிட்டு வேதனைப்படுகின்றேன்.

எமது தென்னிந்திய உறவுகளே உங்களின் எழுச்சி நிட்சயம் எமக்கான தனிநாட்டைப் பெற்றுத் தரும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே கால மாற்றத்திற்கேற்ப நீங்களும் உங்களது ஆதரவை யாருக்கு எப்போ செயய்வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். ஆனாலும் எங்களை கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டீர்கள். இந்த கருணாநிதியை நம்பி எனும் போது, ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. வயது போகப் போக தனது இரத்த உறவுகளைக் கூட மறக்கும் அளவுக்கு அறளை பெயர்ந்து விட்டது என எண்ணத் தோன்றுகிறது.

இந்திய அரசியலை எப்படி சினிமா ஆட்டிப் படைக்கிறதோ அதைப் போல் தமிழ் நாட்டு அரசியலை ஒரு சிலரின் கையில் அல்லவா கொடுத்திருந்து அடிமைகளாவே வாழப்பழகி விடடீர்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இது எமது ஆதங்கம் தான். இருந்தும் உங்களின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை என்பது ஆட்சியாளர்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கை அல்ல. எங்களுக்காக குரல் கொடுத்த, உயிர் கொடுத்த உறவுகளுக்கு எங்களின் அன்பை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தீக்குளித்த தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கத்தை இந்த வேளையில் தெரிவித்துக் கொண்டு எங்கள் புனிதப் பொரில் உங்களின் பங்கு அளப்பெரியது. அது தீக்குளித்தல் என்ற ஓர் மரணமாக மாறக் கூடாது. உங்கள் உன்னத வேள்வியை பாதை மாற்றி புதுப் பொலிவுடன் போராடப் புறப்படுங்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்.

ஏனெனில் இராணுவ கட்டுப்பாhட்டில் நிதமும் எங்கள் போராளிகள் உயிரைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் உறவுகள் அற்ற தெய்வப்பிறவிகள் அல்ல உங்களுடன் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற உங்களில் ஒருவர் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

கைதுகள் காணாமல் போதல்களை மூடி மறைத்த அரசுக்கு ஒர சில வீடியோ காட்சிகள் மண்டையைக் குடைய வைத்து இருக்கின்றன. ஆனாலும் அது கூட ஏதோ துரதிஸ்டமாகவே வெளிவந்திருக்கிறது. அதைவிடப் பெரியபாடு கொலைகளை நிதமும் செய்யும் அரசுக்கு இந்த ஒரு சின்ன விடயம். ஆனாலும் எப்படி வந்தது என்பதை அறிகிறது அரசு.

வெளியிட்டவர்களைக் கண்டு பிடித்தால் எப்படியும் அவர்களை கொண்டு புதைத்து விடுவார்கள். அவர்களை விட எங்கள் இந்த அரசின் ஊது குழல்கள் கேட்கும் கேள்விகள் ரசிக்கத்தக்கவை எப்படிப் பேட்டி எடுத்தனீங்கள் எப்படி படம் பிடிச்சனீங்கள் போக முடியாத இடங்களில் எப்படி போனீர்கள் அதனால் உதல்லாம் சுத்தப் பொய் என அரசுக்கு தங்கள் நன்றியை தங்களின் சார்பில் தெரிவிக்கின்றன சுரணையில்லாமல் போரில் கொல்லப்படுதல் என்பது சாதாரண விடயம் ஆனல் பொது மக்களை இளம் சமுதாயத்தை கொலை செய்வது என்பதை இந்த உலகம் ஏற்றுக் கொள்கிறதா?

அல்லது நேரில் கண்டால் கூட நம்பமாட்டார்களா? ஏனெனில் இங்கு எல்லாம் அப்பட்டமாக தெரிந்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது வரை அவை வெறும் வாய்வார்த்தைகளுடனும் சிறிய கண்டனங்களுடனும் காணாமல் போய்விடும். சிங்களவன் தொடர்ந்து அழிப்பில் தன் கவனத்தை செலுத்துவான்.

இவற்றுக்கெல்லாம் சர்வதேசம் என்ன சொல்லப் போகின்றது. இவவ்ளவு கொலைகள் நடந்த இடத்தில் இந்த ஒரு வீடியோவுக்குத்தான் நடவடிக்கையா? அதை நினைக்கவே முடியாது எல்லாவற்றையும் வானத்திலிருந்து படம் பிடித்த சர்வதேசம் வெறும் சவக்கிடங்குகளை மட்டும் படம் பிடித்த்தாக போட்டு இருப்பது தங்கள் அரசியல் நலனே தான். இன்று அரசியல் கேள்வி கேட்பவர்கள் கூட நாளை அரசுக்கு சார்பாக வாய்திறப்பார்கள்.

அவர்கள் நீதிபற்றி கதைக்கக் கூடியவர்களுமல்ல. நீதி இலங்கையில் இருக்கக் கூடியதுமல்ல. அக்சன் பாம் நிறுவனக் கொலைகள் கூட ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இராணுவத்திற்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. வடக்கு கிழக்கு இணைப்பு என தங்களுக்கு சார்பான விடயங்களுக்கு தமிழனுக்கு எதிரான தீர்ப்புகள் என்றால் சிங்களவர் முன்னின்று வழங்குவார்.

ஒன்றை இந்த சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சிங்களவனல்லாத ஒருவன் அரசாளமுடியாது. ஏனைய மத இனத்திற்கு முன்னுரிமை அளிக்கமுடியாது. ஏனைய விடயங்கள் கூடத் தங்களின் அடிவருடிகளுக்கு தான் வழங்கப்படும் என்பதே. இதில் எங்களுக்கு எங்கே நீதியை சர்வதேசம் பெற்றுத் தரப் போகிறது. அதை எதிர்பார்க்கவும் முடியாது.

என் அருமைப் போராளிகளே! முன்னாள் போராளிகளே! உங்களை இந்த இடத்தில் நான் அடையாளப் படுத்த விரும்புகின்றேன். ஏன், அறை கூவியும் அழைக்கின்றேன். மாவீரர்களால் திட்டமாக எழுந்து நின்ற எங்களின் தேசம் அது எங்களின் மாவீரச் செல்வங்களின் வீரத்தால் ஏக்கத்தால் என் தலைவன் வழி காட்டலில் உதித்த தேசம். அதில் உங்களின் பங்கும் நிட்சயம் இருக்கும். நீங்கள் மௌனமாய்ப் போவது ஏனோ!

என்னால் மறக்கவே முடியாது இந்தப் போராட்டத்தை, ஏன் இதிலிருந்து மீளக் கூட நான் விரும்பவில்லை. உண்மையில் நாம் மனதால் உடலால் ஊனப்பட்டு விட்டோம் என்பதே உண்மைதான். அதற்கு உங்களால் தான் மருந்திட முடியும். ஒருவனுக்கு நண்பன் எப்படியோ அதே போல் உயிருள்ளவரை போராட்டத்தை காதலித்துத்தான் எங்கள் தேசத்திற்காக உயிரைக் கொடுத்தார்கள். இத்தனை ஆயிரம் பேர். நீங்கள் மட்டும் எப்படி இதிலிருந்து விலகிவிட முடியும். ஒரு போராளிக்கு உண்மையான ஓய்வு என்பது அவனது மரணத்தில் என்பதுதான் நாங்கள் நன்றாகவே கற்றிருக்கிறோம்.

எங்கள் வீடுகளில் இருந்து எல்லோரும் எல்லாவிதமாகவும் இந்தப் போராட்டத்தில் இணைந்தோம். அப்பா அம்மாவுடன் சண்டை பிடித்து காதலன் காதலிகளை உதறி சகோதரர்களை பிரிந்து இந்த நாட்டை நாங்கள் நேசித்தோம் என்பதை யாராலும் மறக்கமுடியுமா?

என்றுமே எங்கள் பயிற்சி ஆசான் எங்கள் கண்முன்னே வந்து வழி நடத்துவதில்லையா? எப்போதும் எம் தலைவனின் ஆணை ஆழ் மனதில் ஒலித்துக் கொண்டிருப்பதில்லையா? அந்த ஒவ்வொரு ஓசைகளும் களமுனைகளில் வெறி பிடித்த எதிரிகளை பந்தாடுவதில்லையா? அங்கே இந்த உலகத்தில் உள்ள மிகப் பெரும் விளையாட்டுப் போரை நாங்கள் ரசிப்பதில்லையா? சாத்திரங்கள், இதிகாசங்கள் கூட போரில் தான் கொலைகள் என்பது தர்மம் என்பதை ஏற்றுக் கொள்கின்றன. அதை நாங்கள் ரசித்து செய்வதில்லையா?

ஏன் சக போராளியை பார் இன மொழி வேறுபாடின்றி நீங்கள் நேசித்தது இல்லையே? அங்கே உங்களுக்கு நிச்சயம் இந்தப் போராட்டப் பாதையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் சம்பவங்கள் என்பவற்றை கொண்டிருக்கிறோம். அவை எங்கள் வாழ் நாள் பூராகவும் மனதை நெருடிக்கொண்டே இருக்கின்றன. எத்தனை வித்துடல்கள் எத்தனை விழுப்புண்கள் எத்தனை கோரங்கள் எல்லாம் கண்டோம் எப்படி மறக்கமுடியும். சதைகளாக பிண்டங்களாக சாக வீரனின் குருதியிலே குளித்ததுண்டா? கள முனைகளிலே கதறி அழுததுண்டா? ஏனென்று தனிமை உங்களை கொல்வதில்லை. இவற்றை எல்லாம். நான் எனது வாழ்க்கையில் கண்டிருக்கிறேன்.

ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக கதைகள் பேசி ஒன்றாக விளையாடி ஒன்றாக உறங்கி ஒன்றாகப் போருக்குப் போய் ஒன்றாக மாவீரராக முடியவில்லையே என்று மனம் புழுங்கி அழுகிறேன்.

எல்லாம் இந்த என் தாய்நாட்டுக்கான போராட்டத்திற்காக உரிமையோடு கேட்கிறேன். உங்களை எங்களில் இருந்து அந்நியப்படுத்த எத்தனை சதிகள் அதற்கு நீங்களும் பலியாவதா? வட்டுவாகல் கடந்து என்னை எண்ணி நானே அழுது தீர்த்து இருக்கிறேன். என்னைப் போல் எத்தனை ஆயிரம் உள்ளங்கள் அழுது இருக்கும். அதில் உங்களில் எல்லோருமே கண்ணீர் விட்டு அழுது இருப்பீர்கள்.

உங்கள் வீரம் உங்களின் உழைப்பு இந்த தேசத்தைக் கட்டி எழுப்ப உங்களால் மட்டுமே முடியும். அதிலும் நான் மீண்டும் எங்கள் போராட்ட வரலாற்றில் 20வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டு இருக்கிறோம். அதை உடைத்து எறிய உங்களால் முடியும். அதற்காக உறவுகளை மீண்டும் இந்தப் போராட்டம் அறை கூவி அழைக்கிறது. அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என எண்ணுகிறேன். அதிலும் முன்னாள் போராளிகள் எல்லோரும் உங்கள் ஆற்றல் மிக்க தோள்களை இந்த நாட்டுக்காக கொடுக்க முன்வாருங்கள்.

சிங்களவனுக்கு எல்லா வழிகளிலும் நாம் எதிரியாய் இருப்போம். எல்லா நாடுகளிலும் உங்களின் நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து அதன் மூலம் எமக்கு பலம் சேருங்கள். இது தாயக மற்றும் புலம் பெயர் இந்நாள், முந்நாள் போராளிகளுக்கானது. நீங்கள் அனைத்து நாட்டையும் மீட்க வாருங்கள். தாயகத்திலுள்ள அதுவும் சரணடைந்த மற்றும் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளே ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து எல்லோருமே கூண்டோடு அழிவதை விடுத்து உங்களை உங்களால் காப்பாற்ற முடியாவிட்டாலும் மற்றவரைக் காப்பாற்ற முயலுங்கள். அது எங்களின் பாதையை விரைவு படுத்தும்;.

இலக்கின்றி பயணப்படாமல் உங்களுக்கான கட்டளைகள் வரும் வரை காத்திருங்கள். தன்னிச்சையான முடிவுகள் பலர் பலரை இல்லாமல் அழித்து கொண்டு இருக்கிறது. அத்தோடு எங்களின் கையிருப்பு ஆயுதங்களை காட்டிக் கொடுக்காதீர்கள். அல்லது ஒப்படைக்காதீர்கள்.

ஏனெனில் ஒரே ஒரு துப்பாக்கிக்காக பல உயிர்களைக் கொடுத்த வரலாற்றில் வந்தவர்கள் நாம். அதை மறந்து கண்டபடி உங்கள் தேவைகளுக்கோ சமுதாய சீர் கேடுகளுக்கோ அல்லது பிழையான வழியில் உங்களையும் ஆயதங்களையும் பாவிக்காதீர்கள். சக மக்களுக்காக உழையுங்கள். ஏனைய போராளிகளையும் ஆயுதங்களையும் காப்பாற்ற முயலுங்கள். அது வரை பொறுமையாய் இருக்க வேண்டியது எல்லோரதும் கட்டாயத் தேவை இதை நீங்கள் நன்கு உணர்ந்து நடக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

ஆயுதங்களை தெய்வமாகப் போற்றி வாழும் வரை எங்களுக்கு தோல்விகள் இல்லை. என்பதை மனதில் கொள்ளுங்கள். சிங்களவனின் கொட்டமடக்கும் வேலைக்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அந்த வேலைக்காக நாமெல்லோரும் ஆவலாய்க் காத்திருப்போம். அல்லது உங்கள் வழிகளில் சிங்களவனைத் தாக்குங்கள்.

வெறுமனே பயிர் செய்து சாப்பிட்டு கல்வி கற்று சீதனம் வேண்டி கலியாணம் செய்து பின் பிள்ளைகள் பெற்று அவர்களுக்கு சொத்துத்தேடி என வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் குண்டுச் சட்டிக்குள் ஓட்டாமல் இந்தப் பரந்த உலகிலே எங்களுக்கு என நாடு வேண்டும் எனப் புறப்பட்டு பல அதிசயங்களையும் கண்டு பிடிப்புக்களையும் பெருமைகளையும் ஏற்படுத்தியவர்கள் மீண்டும் அதைக் காலத்திற்கு போய்விடமுடியாது.

முன்பெல்லாம் எங்கள் அரிய கண்டுபிடிப்புகள் இடியப்பம், புட்டு, தோசை, இட்டலி, ரொட்டி கஞ்சி பலகாரங்கள் என வாய்க்கு உரிசியானவற்றை மட்டும் தான் தேடி வைத்தோம். இப்போ அப்படியல்ல. எங்களின் நாடு அது ஈழம். அதற்காக நிறையவே பாடுபட்டு உருவாக்கியிருக்கிறோம். எல்லாமே வீண்போகா. அவை மீண்டும் புத்துயிர் பெறும். அவை தனக்காகத் தோன்றியவை அல்லது உங்களைப் போன்றோரால் தான் உருவாக்கப்பட்டவை. அவற்றை மீளக் கட்டி எழுப்பவோம்.

எங்கள் நாகரிகம் பழக்கவழக்கம் மொழி, போராட்டம் என்பவற்றை இந்த உலகுக்கு பரப்புவோம். அதற்கு நீங்களும் உறுதுணையாய் இருங்கள் என அன்போடும் உரிமையோடும் அழைக்கிறேன். சிங்களவனின் சிங்கம் பற்றிய கற்பனையை உடைத்து அசிங்கமாக்காமல் ஓயமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார். அவர் வடை சுட்டு விற்றுவந்தார். அதே ஊரில் இருந்த காக்கைக்கு சரியான பசி பட்டினி. உணவு பாட்டி கொடுக்கவில்லை. பதிலக்கு காக்கை சுள்ளி பொறுக்கிக் கொடுத்து அதற்காக ஒரு வடையைப் பெற்றுக் கொண்டது. பின் அதை உண்ண எண்ணிக் கொண்டு பறந்து போனது. நகர எல்லையில் நரிக்குணம் படைத்த ஒரு சிங்கம் இதைக்கண்டு விட்டது. காக்கையை அணுகி காக்கை காக்கை என்ககு அந்த வடையைத் தருகிறாயா? என நயமாகக் கேட்டது. காக்கை கொடுக்கவில்லை. சிங்கம் சூழ்ச்சியாகக் கேட்டது உனக்கு நன்றாக ஆடவருமாம் ஒரு நடனம் ஆடிக் காட்டு பார்க்கலாம் என்றது. காக்கையும் மயங்கிப் போய் தத்திக் காட்டியது. பின் நன்றாகப் பாடவருமே என்ற ஆசை காட்டியது. காக்கைக்கு கண்மணி இழந்த குறைக்கு வாய்திறந்து பாட்டுப் பாடியது அந்தோ பரிதாபம். வடையும் போய்விட்டது. சிங்கம் வயிராற முடியாவிட்டாலும் ருசியாற வடையை உண்டது. காக்கை ஏமாத்தப்பட்டு பறந்து போனது.

மீண்டும் ஒரு நாள் காக்கை அதே போல் பாட்டியிடம் வேலை செய்து வடையை பெற்ற கொண்டது. இந்த முறையும் காட்டு எல்லையில் சிங்கத்தை சந்திக்கவேண்டிய துரதிஸ்டம் ஏற்பட்டது. காக்கை மனதுக்குள் எண்ணிக் கொண்டது. இம்முறை ஏமாறுவதில்லை என்று. சிங்கமும் ருசி பட்ட எண்ணத்தில் மீண்டும் தனது நரித்தனத்தைக் காட்டியது. காக்கை காக்கை ஒரு நடனம் ஆடு என்றது. காக்கையும் அதற்கு ஏற்றாற்போல் நடனம் ஆடிக் காட்டியது. பாடும் படி கேட்க சிங்கத்தின் காதுக்குள் கட்டெறும்பு போவது போன்று கரகரத்த குரலில் வடையைக் கவனமாக காலில் பற்றி பிடித்தபடி கரைந்தது. சிங்கம் ஏமாந்ததால் பாடிக் கொண்டே ஆடு என்றது காக்கை. கவனமாக மரப் பொந்தில் வைத்து விட்டு கத்திக் கரைந்தது. காக்கைகள் பலவாகின. கூட்டமாக கூடிய காக்கைகள் சிங்கத்தின் சினம் தீர கொத்தி காட்டை விட்டே துரத்தின. பின் நிமிர்வோடு அந்த வடையை பங்கு போட்டு உண்டு மகிழ்ந்தன. நாமும் நவீன காக்கையாக இருப்போம். சிங்களவனின் சிங்க ஆசையை இந்த நாட்டை விட்டுத் துரத்துவோம். அனுதாபிகளாக அல்லாமல் பங்காளிகளாக முன் வாருங்கள்.
எங்களின் மக்களுக்காக நாங்கள் அவர்கள் அனுபவித்த, அனுபவிக்கும் துன்பங்களை பகிர்ந்து கொள்ளுவோம். சிங்களவனுக்கு எதிர் காலத்தில் பரிசளிப்போம். அதற்காக நாங்கள் எங்களை கட்டியெழுப்புவோம். எந்த நாடுகளில் எங்கள் உறவுகள் இருந்தாலும் அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்க ஏற்ப எல்லாத் துறையிலும் ஒன்றிணைந்து எங்கள் நாட்டுக்கான கட்டுமானங்களை செய்யுங்கள். அதனால் உங்களை அந்த நாடுகள் பொருளாதாரத்தால் கூட ஒதுக்கிவிடமுடியாது. பின்னாளில் அது எங்கள் நாட்டுக்கான கட்டுமானங்களை விரைவாக முன்னேற்ற உதவும்.

அதற்காக வியாபார ரீதியில், கல்வி ரீதியில் என எல்லாத் துறையையும் கட்டியெழுப்புங்கள். தனி ஒருவனால் முடியாதது கூட்டு முயற்சியால் முடியும். இதனால் சிங்களவன் எங்களுக்கு சர்வதேசத்தில் வீசும் வலைகளை நாம் அறுத்தெறிவோம். எங்கள் தேசிய சொத்துக்களை பாதுகாத்து எங்கள் நாட்டுக்கு கொண்டு வருவோம்.

உங்கள் பங்களிப்பு எங்களை வளர்த்துவிடும் என்பதை நீங்களும் அறிவீர்கள். எனவே உங்களின் ஏகோபித்த ஆதரவை நல்கி நிற்கின்றோம். வரும் நாட்களில், எங்களின் பயணப்பாதை மாறலாம். ஆனால் இலக்கு ஒன்று தான்.

சிங்களவன் கொட்டமடக்க எம் தலைவர் பெயர் சொல்லி புறப்படுவோம். புயலாக.

நன்றி.

தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
படையப் புலனாய்வு
தமிழீழம்
அரவிந்தன்.

2 விமர்சனங்கள்:

வால்மீகி September 9, 2009 at 12:04 AM  
This comment has been removed by a blog administrator.
Thakavalgal September 9, 2009 at 2:51 PM  

This post has been edited by a blog administrator


எங்கட இனத்த பத்தி நீங்க யோசிக்க தேவையல்ல .உங்களுக்குத்தான் மறைகழண்டு மல்லாந்து கிடக்குறீங்க இல்ல ! கருணா முஸ்லிம்கள் விடயத்தில் பிழை செய்த பொது ,பிரபா என்ன அவன்ர ***ய சூப்பிக்கிட்டு இருந்தவரா? புலிகளில் கட்டுப்பாட்டை மீறினால் தண்டனைதானே ! கருனாக்கு குடுத்திருக்க்கலாம்தானே ?
கப்பல் ஓடும்போது கடலில் நீங்கள் தள்ளி விட்ட முளிம்களை ,கப்பல் கவுண்ட பின் கரையேத்த கூப்பிடுரீங்க்களோ ? எங்கள பாத்துக்க எங்களுக்கு தெரியும் . உங்களைப்போல எண்கள் பெண்களை ஆமிக்கரனுக்கு படுக்க விடமாட்டம்


வால்மீகி

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top