புலிகளிடமிருந்து மீட்ட ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது
மனிதாபிமான நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு நிகழ்வை முன்னிட்டு இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment