Channel 4 தொலைக்காட்சி வெளியிட்ட போலி வீடியோவின் உண்மையான (Original) வீடியோ இன்று வெளியாகியுள்ளது
1) இந்த வீடியோ காட்சிகள் வீடியோ கமரா ஒன்றின் மூலம்தான் படமாக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, Channel 4 தொலைக்காட்சி தெரிவிப்பது போல் மொபைல் போன் கமரா மூலம் படமாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
2) இந்த வீடியோ காட்சிகளில் பிண்ணனியில் தமிழ் மொழி பேசப்படுகிறது. Channel 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் சிங்கள மொழி பேசப்படுகிறது.
3) இந்த வீடியோகாட்சிகளை படமாக்கிய வீடியோ கமராவின் மைக் வீடியோ கமராவின் வெளிப்பக்கமாக இருந்தபடியால் காற்றின் சத்தங்கள் உள்பட எல்லா வெளி சத்தங்களையும் கவர்பண்ணியுள்ளது.
4) இந்த வீடியோ காட்சிகளில் கேட்கப்படும் காற்றின் சத்தம் Channel 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட வீடியோ முற்றிலும் ஒரு போலியான வீடியோ என்பதனையும் மொபைல் போன் மூலம் எடுக்கப்படவில்லை என்பதனையும் தெளிவாக்கியுள்ளது.
இந்த வீடியோ காட்சியை படமாக்கியவர் வீடியோ எடுப்பதில் மிகவும் அனுபவம் குறைவானவர் என்பதனை காட்டுகிறது. கைதேர்ந்த ஒருவரால் இந்த வீடியோ படமாக்கப்பட்டிருந்தால் அவர் வெளி சத்தங்களை எடுபடாமல் இருக்க கமராவின் மைக்கிற்கு கவசம் அணிவித்து தடுத்திருப்பார்.
இந்த வீடியோ காட்சி Channel 4 தொலைக்காட்சியில் வெளியான நால் முதல் பலவிதமான வாதங்களையும் சர்ச்சைகளையும் உலகளவில் உருவாக்கியிருந்தது. சிலர் இப்படியான ஒரு சம்பவமே நடைபெறவில்லை, இது முற்றுமுழுதாக நடித்து தயாரிக்கப்பட்ட காட்சிகள் என்றும், தெரிவித்திருந்தார்கள்.
இப்போது இதனை பார்க்கும்போது சம்பவம் உண்மையானது ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதுதான் இங்கு எழும் கேள்வி. இதனை செய்தது ராணுவமா? அல்லது புலிகளா?
இரண்டு வீட்யோக்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இரண்டையும் பார்த்தால் நீங்களே புரிந்துகொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு
Channel 4 Fake Video Footage: At last the Original has Emerged






0 விமர்சனங்கள்:
Post a Comment