பெரியாருடன் பிரபாகரன்! -இளங்கோவன் சாலைமறியல்
தந்தை பெரியாருடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருப்பது போன்ற பேனர்களை வைத்ததை கண்டித்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். தந்தை பெரியாரின் 131வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஈரோடு பி.எஸ்.பார்க் பகுதியில் இருக்கும் பெரியார் சிலைக்கு இளங்கோவன் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தச் சென்றனர். அப்போது பெரியார் சிலைக்கு அருகில் தமிழ் தேச பொதுவுடமை கட்சியை சேர்ந்தவர்கள் பெரியார் மற்றும் பிரபாகரன் இணைந்து இருப்பதை போன்ற பேனரை வைத்திருந்தனர். இதையடுத்து அந்த பேனரை அகற்ற வேண்டும் என கூறி இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அந்த பேனரை அகற்றினர். இதைத் தொடர்ந்து காங்கிரஸார் கலைந்து சென்றனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment