இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல்: புலிகள் நிதி வழங்கியதாக யூசுப் கிலானி தெரிவிப்பு
பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் கடந்த மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதியுதவி வழங்கியுள்ளனர். இதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் கிலானி தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
கடாபி விளையாட்டரங்கை நோக்கி இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயணித்த பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் லிபியாவில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்பு குறித்து விளக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த பூரண புலனாய்வு அறிக்கை இலங்கையுடன் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 3ஆம் திகதி நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 6 பாகிஸ்தானிய பொலிஸார் மற்றும் 2 சிவிலியன்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதுடன், ஆறு இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
0 விமர்சனங்கள்:
Post a Comment